கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 12 11

“உம்மு” குடுத்துடுவியாம்; அப்பத்தான் நீ கேக்கறதெல்லாம் அப்பா உனக்கு வாங்கிக் குடுப்பாரு; சுந்தரி தன் மகளை கொஞ்சுவாள். போம்மா, நான் குடுக்க மாட்டேன். அப்பாக்கு கன்னத்துல முத்தா குடுத்தா உதட்டுல முள்ளு முள்ளாக் குத்துதும்மா. நான் அப்பா பேச்சு காய். அம்மா உன் மூஞ்சு நல்லா மழா மழா இருக்கும்மா; அம்மா மேலதான் எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை; அப்பாக்கு மீசை வேணாம் சொல்லும்மா? பாத்தாலே எனக்கு பயமா இருக்கும்மா. குழந்தை சுகன்யா அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு அழுது அரற்றுவாள். சுகாவிற்கு தூங்கப் போகும் நேரத்தில் மட்டும் அப்பா கண்டிப்பாக அவள் பக்கத்தில் இருக்க வேண்டும். அப்பாவிடம் சாயந்திரம் சண்டைப் போட்டவள் இரவில் தானாக சென்று அவனுடன் சமாதானமாகி விடுவாள். குமாரின் பக்கத்தில் படுத்துக்கொண்டு தன் காலை தூக்கி அவன் மார்பில் போட்டுக்கொள்வாள்.
“அப்பா உனக்குத்தான் நெறைய நெறைய, புது புது கதை தெரியுது. அம்மாவுக்கு கதையே தெரியலைப்பா. அம்மா மக்கு அம்மா. அம்மா எப்பப் பார்த்தாலும் ஆயா வடை சுட்ட கதையே சொல்லுது.” அந்த நேரத்தில் மட்டும் அப்பாவுக்கு அவன் கேட்காமலேயே முத்தம் கிடைத்துவிடும். அப்பா நான் உன் பேச்சு பழம்பா … அம்மா பேச்சு காய் … குழந்தை சுகா சிரித்துக்கொண்டே, குமாரின் மடியில் உட்க்கார்ந்து கொள்வாள். மல்லாந்து படுத்திருக்கும் அவன் மார்பில் ஏறி நின்று குதிப்பாள். காலையில தலை வாரும்மான்னு எங்கிட்ட வருவேல்லா; அப்ப குத்தறேன் வா உன்னை உன் மூஞ்சு மேலேயே; சுந்தரி மனதில் மகிழ்ச்சியுடன், பெண்ணிடம் போலியாக பொருமுவாள். இந்த இனிமையான தருணங்கள் தினம் தினம் புத்தம் புது பூக்களாக அவர்கள் தோட்டத்தில் மலர்ந்து கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ? கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. சுந்தரி இப்பவும் அப்படித்தான் வாய்க்கு வாய் சொல்லுவாள். குமார் குடிக்கு மெல்ல மெல்ல அடிமையானான். அவர்களுக்குள் இருந்த இந்த கொஞ்சல், கெஞ்சல் எல்லாம் நாளடைவில் வெறும் கனவாகிப் போனது. குமார் என்னும் மரத்தின் ஒரு பக்க வேர் இலேசாக அழுக ஆரம்பித்தது. அந்த தோட்டத்தில் பூக்கள் பூப்பது குறைய ஆரம்பித்தது. வெகு நாள் வரை இதெல்லாம் சுகன்யாவுக்கு ஞாபகம் இருந்தது. குழந்தை சுகன்யாவுக்கு ஒரு விஷயம் மட்டும் எப்போதும் புரிந்ததில்லை. தூங்கறதுக்கு முன்னே அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நடுவுல நான் படுத்துக்கறேன். காலையில எழுந்துப் பாத்தா, அப்பா பக்கத்துல அம்மாதானே படுத்துக்கிட்டு இருக்காங்க? நான் எப்படி அம்மாவுக்கு இந்த பக்கத்துல வந்துடறேன். இந்த நினைவு இன்று மனதில் வந்தவுடன், வளர்ந்த சுகன்யாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

குமார் குடி பழக்கத்திற்கு முழுதுமாக அடிமையான பின், அது வீட்டில் பெரிய பிரச்சனையாக உருவான பின், சுகன்யா அவன் அருகில் போவதற்கே மிகவும் பயந்தாள். அம்மா, இப்பல்லாம் அப்பா மூஞ்சிலே இருந்து எப்பப் பாத்தாலும் மருந்து வாசனை அடிக்குதும்ம்மா? நான் அப்பாகிட்ட போவ மாட்டேம்மா. ஏம்மா அப்பா உங்கிட்டே தெனம் சண்டை போடறாரு. உன்னைத் அடிச்சு திட்டறாரு? நீ எப்பப் பாத்தாலும் அழுவறே? நீயும் அவரை திருப்பி அடிம்மா. நான் அப்பா பேச்சு காய் … அம்மா நாம, அப்பாவை போலீஸ்காரங்ககிட்ட பிடிச்சு குடுத்துடலாம்ம்மா? சுகன்யாவின் மனதில் அவள் குழந்தைக் கால எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக குமிழியிட்டன. அதோ உள்ள நுழையறாரே … கிரீம் கலர் அரைக்கை சட்டை, கருப்பு கலர் பேண்ட், கூலீங் கிளாஸ்ன்னு … அவர் தானா? ஆமாம் … ஆமா … அவரேதான் … என் அப்பாதான் வந்துட்டார். அவளுக்கு மூச்சு வேகமாக வரத்தொடங்கியது. மார்புகள் விம்மித் ததும்பின. அப்பா கொஞ்சம் கூட மாறவேயில்லையே? அப்பல்லாம் நம்ம அப்பா கொஞ்சம் ஒல்லியா இருப்பார். இப்ப வயசுக்கு ஏத்த மாதிரி கொஞ்சூண்டு பூசின மாதிரி இருக்கார். காதுக்கு பக்கத்துல லேசாக நரை ஆரம்பிச்சிருக்கு. அப் … அப்பா நான் இங்கே இருக்கேன் … சுகன்யா, சட்டென தான் உட்க்கார்ந்திருந்த ரிஸப்ஷன் சோஃபாவிலிருந்து, மற்றவர்கள் தன்னை பார்ப்பதையும் பொருட்படுத்தாமல் எழுந்து, மெலிதாக கூவிக்கொண்டே குமாரசுவாமியின் நின்ற பக்கம் ஓடினாள். குமாரசுவாமி தன்னை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்த யுவதியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் உடல் சந்தோஷத்தால் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. உண்மைதான்!கல்லூரியிலே என் கூட படிச்ச சுந்தரி மாதிரி தான் இருக்கா என் பொண்ணு. அந்த காலத்துல கும்பகோணத்துல இந்த சுடிதாரெல்லாம் கிடையாது. வயசுக்கு வந்த பெண் பிள்ளைங்க … தாவணிதான் கட்டுவாங்க … இல்லன்னா புடவைதான் … மகிழ்ச்சியில் அவர் மனம் துள்ள, தன் அருகில் வந்த சுகன்யாவை தன் இடது கையால் அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். அருகிலிருந்த சோஃபாவில் அவளுடன் உட்க்கார்ந்தவர், உணர்ச்சியின் மிகுதியால் ஏதும் பேசாமல் மவுனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“எப்படிடா கண்ணு இருக்கே? இந்த புத்தி கெட்ட மடையனை மன்னிச்சுடும்மா … உன்னை மாதிரி பொண்ணை அம்போன்னு விட்டுட்டு இவ்வளவு நாளா, ஊரெல்லாம் அர்த்தமில்லாம சுத்திக்கிட்டிருந்தேன் …” அவர் முணுமுணுத்தார்.