கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 12 6

இத்தனை சுலபமா என் வேலை முடிஞ்சு போச்சா? … அப்பா … என் அப்பாவா … பேசறார் … இவர் நிச்சயமா என் அப்பாதான்; சுகன்யாவின் உடல் புல்லரித்தது. அம்மாவுக்கு உடனடியா போன் பண்ணி சொல்லணும் … அவள் ஆடவில்லை; அவள் சதை தானாக ஆடியது; அவள் முகம் கோணிக்கொண்டது; உதடுகள் துடித்தன; சுகன்யாவின் கண்கள் சந்தோஷத்தில் கலங்க ஆரம்பித்தது; அவள் முழு உடலும் பரவசமானது; லைப் ஈஸ் ஸ்டேரேஞ்சர் தேன் பிக் ஷன்னு சொல்றாங்களே; இது எவ்வளவு உண்மையான ஒரு வார்த்தை … ஒரு வினாடி அவளுக்கு பேசுவதற்கு குரல் எழும்பவில்லை.
“சுகா … என்னம்மா பேசமாட்டேங்கற … உனக்கும் என் மேல கோவம்ன்னு நினைக்கிறேன் …
“ அடுத்த முனையிலிருந்து குரல் தயக்கத்துடனும், தழுதழுப்புடனும் வந்தது.
“அப் … அப்பா … நீங்க … என் அப்பாதானே பேசறீங்க … சாரிப்பா … என்னால சட்டுன்னு புரிஞ்சுக்க முடியலைப்பா .. உங்களை நான் யாருன்னு கேட்டுட்டேன் … வெரி வெரி சாரிப்பா … உங்களை பாக்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா; நீங்க எங்கேருந்து பேசறீங்கப்பா?”
“நீ இருக்கற சென்னையிலேதான் நானும் இருக்கேன்; நானும் உங்களையெல்லாம் பாக்கணும்ன்னு கொஞ்ச நாளா துடிச்சுக்கிட்டிருக்கேண்டா செல்லம்; அதுக்காகத்தான் என் வேலையெல்லாம் மாத்திக்கிட்டு இந்த ஊருக்கு வந்திருக்கேன்; எனக்கு மேல உன் தாத்தாவும் பாட்டியும் உன்னைப் பாக்கணும்ன்னு தவிச்சிக்கிட்டிருக்காங்கம்மா; உன் அம்மா நல்லாயிருக்காங்களா? உன் அம்மா இன்னும் என் மேல கோவமாத்தான் இருக்காளா?
“இல்லப்பா … அப்படியெல்லாம் இல்லைப்ப்பா … அம்மா ரொம்ப நல்லவங்கப்பா … உங்க மேல உயிரையே வெச்சிருக்காங்கப்பா … ஒரு வீம்புல … ஒரு வைராக்கியத்தோட அவங்க தன் வாழ்க்கையை எனக்காக வாழ்ந்துகிட்டு இருங்காங்கப்பா … உங்க மேல அவங்களுக்கு கோவம் இல்லப்பா … நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான்னு … எப்பவும் தன்னையேத்தான் அவங்க நொந்துப்பாங்க … உங்களை எப்பவும் என் எதிர்ல தப்பாவே பேசினது இல்லப்ப்பா … என் அம்மாவை சொல்றீங்களே; நீங்க மட்டும் இத்தனை வருஷம் எங்களையெல்லாம் பாக்க வராமத்தானே இருந்தீங்க?” சுகன்யா மேலே பேச முடியாமல் விம்ம ஆரம்பித்தாள்.
“சாரிடா ராஜா … உங்களையெல்லாம் நான் ரொம்பப் படுத்தி எடுத்துட்டேன் … உங்கம்மாவுக்கு நான் ரொம்ப கஷ்டம் குடுத்துட்டேன். சாரிடா கண்ணு … நேத்துதான் உன் நம்பரையும், உன் அம்மா நெம்பரையும் உன் மாமாகிட்டேயிருந்து வாங்கினேன். உண்மையை சொல்லணும்ன்னா, நீ என் கிட்ட பேசுவியோ … மாட்டியோன்னு காலையிலேருந்து பயந்துகிட்டே இருந்தேம்மா.” குமாரசுவாமியின் குரல் நொறுங்கியது.
“அப்பா … அழறீங்களாப்பா … அழாதீங்கப்பா” சுகன்யாவின் குரல் தேய்ந்து உணர்ச்சி மிகுதியில் மெல்லியதாகி விட்டிருந்தது.
“ ம்ம்ம்ம் … உன் அம்மாவைப் பத்தி நீ சொன்னதும் … என்னால என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியலடா செல்லம்…”
“அப்ப்பா”
“சுகா … நீ இப்ப நல்லா படிச்சு, பெரிய பொண்ணா ஆகி, நீயும் வேலை செய்யறதா உன் மாமா சொன்னாரு; நீ உங்கம்மா மாதிரியே அழகாயிருக்கேன்னு சொன்னாரு; நேத்து ராத்திரி உன் மாமா உன்னைப் பத்தி ரொம்ப பெருமையா பேசினாரு; நான் அவரோட பேசினதை அவர் உங்கக்கிட்ட சொல்லலியா?
“இல்லேப்பா.”

“இட்ஸ் ஆல் ரைட் … நானே உங்ககிட்ட பேசணும்ன்னு அவரு நினைச்சிருக்கலாம். அதுல ஒன்னும் தப்பில்லே; நீ இப்ப எங்க இருக்கே?”
“ஆபீசுலதான் இருக்கேம்பா”
“உன்னை நான் இப்ப பாக்க வரலாமா? உனக்கு எப்ப லஞ்ச் டயம்? நாம ரெண்டு பேரும் இன்னைக்கு ஒண்ணா லஞ்ச் சாப்பிடலாமா? நான் இப்ப அங்க வந்தா உனக்கு தொந்தரவா இருக்காதே?” குமாரும் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்க, இன்னமும் குரலில் சிறு நடுக்கத்துடன் பேசிகொண்டிருந்தார்.
“என்னப்பா இப்படி கேக்கறீங்க? நான் வேலை செய்யற கவர்ன்மெண்ட் ஆபிசு பீச்சு ரோடுல ஆல் இண்டியா ரேடியோ பக்கத்துல இருக்குப்பா. என் ஆபீஸோட பேரு
“……” யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க; நான் உங்களுக்காக ஆஃபீஸ் ரிசப்ஷன்ல வந்து நிக்கறேன்; எனக்கு உங்களை இந்த நிமிஷமே பாக்கணும் போல இருக்குப்பா.” இப்போது சுகன்யா தெளிவாக பேச ஆரம்பித்திருந்தாள். குரலில் அளவில்லாத மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.
“சரிம்ம்மா … நீ சொல்ற எடம் எனக்குத் தெரியும். நான் இருபது நிமிஷத்துல அங்கே வரேன்.” தன் தந்தையிடம் போனில் பேசிமுடித்த சுகன்யாவுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. மேஜையின் மேலிருந்த பாட்டிலை எடுத்து மடக் மடக்கென தண்ணீரைக் குடித்தாள். புறங்கையால் தன் வாயைத் துடைத்தவள், வாட்டர் கூலரை நோக்கி ஓடி பாட்டிலை நிரப்பிக் கொண்டு, தன் ஹாண்ட் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு வெளிக்கதவை நோக்கி ஓடினாள்.
“அடியே சாவித்திரி … எங்கப்பா என்னை பாக்க வந்துகிட்டு இருக்காருடி; சுகன்யாவுக்கு அப்பன் இல்ல; அவ வாழா வெட்டி வளர்த்த பொண்ணுன்னு, திரும்பியும் நீ போய் என் வருங்கால மாமியார் மல்லிகா கிட்ட தூபம் போட முடியாதுடி … நான் கும்பிடற அம்பாள் என் பக்கத்துல இருக்கா … தெரிஞ்சுக்கோ” அப்பாவை சந்திக்க ஓடியவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். லிப்ட்டுக்கு காத்திராமல் வேகமாக படியில் இறங்கத் தொடங்கியவள், கம்ப்யூட்டர் ஆன்ல இருக்கே! அப்படியே ஓடி வந்துட்டோம்; யார்கிட்டவும் சொல்லவும் இல்லே; நாளைக்கு ஆபீஸ் வேற லீவு; போன வேகத்தில் திரும்பி தன் அறைக்குள் ஓடி கணிணியை ஷட் டவுன் செய்தவள், தன் ட்ராயரை மூடிப் பூட்டி சாவியை, கைப்பையில் போட்டுக் கொண்டவள், அதே மூச்சில் தன் மேலதிகாரி கோபலன் ரூமுக்கு ஓடினாள். ஆபீஸ் நேரத்தில் வெளியில் செல்ல அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு திரும்பவும் தன் அறைக்குள் நுழைந்து, சுந்தரி கொடுத்து அனுப்பியிருந்த மதிய உணவு டப்பாவை எடுத்துக்கொண்டு ரிசப்ஷனை நோக்கி மூச்சிரைக்க ஓடினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *