கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 12 6

உள்ளத்தில் ஒரு தீர்மானத்துடன் கெஸ்ட் ஹவுஸை நோக்கி விறு விறுவென நடக்கத் தொடங்கினார். சுகன்யா தன் இருக்கைக்கு வந்தவள், காலையில் அனுப்பியிருந்த கோப்புகள் திரும்பி வராததால், தன் மாமா ரகுவிடம் பேச நினைத்து, தன் செல்லை எடுத்தப் போது, மிஸ்டு கால் லிஸ்டில், ஒரு புதிய எண் மின்னுவைதைப் பார்த்தாள். யாருடைய நம்பர் இது? காலை ஆறு மணி வாக்கிலே யாரோ எனக்கு கால் செய்திருக்கிறார்கள். நான் இதை கவனிக்கவேயில்லையே? எதாவது ராங்க் நம்பராக இருக்குமோ என யோசித்துக் கொண்டிருக்கையில், அவளுடைய போன் ஒலிக்க ஆரம்பித்தது. மீண்டும் அந்த நம்பரிலிருந்து தான் தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள். யார் இது? செல்வா இருக்கற ஆஸ்பத்திரியிலிருந்து வருகிறாதா என்ன … இந்த எண்ணம் வந்ததும் … மனதில் பதைப்புடன், காலை ஆன் செய்து பேசத் தொடங்கினாள்.
“மிஸ் சுகன்யாவோட நம்பர் தானே இது” அடுத்த முனையிலிருந்து ஆண் குரலொன்று வெகு மரியாதையுடன் வந்தது.
“ம்ம்ம் … நீங்க யாரு …” செல்வாவுக்கு எதாவது ஆகியிருக்குமா … ராத்திரி நல்லத்தானே இருந்தான் … அலுவலக வேலையில் கவனமாக இருந்ததால், காலையிலிருந்து அவனிடம் பேசாதது அவள் மனதில் சுருக்கென உறைத்தது. அவள் மனதில் அவன் நினைவே மீண்டும் வர சுகன்யா தவிப்புடன் பேசினாள். அவள்
“ஆம்” என்றோ
“இல்லை” என்றோ சொல்லாததால், ஒரு வினாடி அடுத்த முனையிலிருந்து பேசிக்கொண்டிருந்த குமாரசுவாமியும் தயங்கினார் … நேற்றிரவு நான் ரகு குடுத்த நம்பரை சரியா நோட் பண்ணினேனா இல்லையா?
“ரகு எனக்கு இந்த நம்பரைக் குடுத்தார் … நீங்க … நீ …
“சுகா” தானே பேசறேம்ம்மா ….” குமாரின் குரல் தழுதழுப்புடன் வந்தது. என் மாமாவின் பெயரைச் சொல்றாரே இவர் … என் நம்பரை மாமா குடுத்தாருன்னும் சொல்றார். என் நம்பரை யாருக்கு குடுத்தாலும் உடனடியா மாமா என்னைக் கூப்பிட்டு சொல்லுவாரே? குரல் கொஞ்சம் முத்தின குரலா இருக்கு … ஆனா குரல்லே ஒரு மிடுக்கும், கம்பீரமும் இருக்கே? யாராக இருக்கும்? … ஈவன் செல்வாவுக்கு கூட என் செல்லப் பேர் தெரியாதே?

“சுகா”ங்கற என் பெயர் இவருக்கு எப்படி தெரிஞ்சுது … சுகான்னு என்னைச் செல்லமா கூப்பிடறவங்களே ரெண்டு பேருதானே? … ஒருத்தர் என் மாமா; இன்னொருத்தர் என் அம்மா; மூணாவதா என் செல்லப் பேர்ல என்னை உரிமையோட கூப்பிடறது யாரா இருக்கும்? சுகன்யா திகைத்தாள். சிறிய வயதில் தன்னை இப்படி கூப்பிட்டவரின் நினைவு அந்த நேரத்தில் அவளுக்கு சுத்தமாக உதிக்கவேயில்லை.
“ஆமா … நான் சுகா .. சுகன்யாதான் பேசறேன் … என்னை நீங்க …
“சுகான்னு” கூப்பிட்டீங்க; இந்த பேரு உங்களுக்கு எப்படித் தெரியும் …” அவள் தன் மேனி சிலிர்க்க, தன் மனதில் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சியில், அந்த உணர்ச்சியுடன் சிறிது ஆச்சரியம் தொனிக்கப் பேசினாள்.
“ம்ம்ம் … சுகா! என்னை நீ மொத்தமா மறந்துட்டிருக்கேம்மா … பரவாயில்லே; உன் மேல எந்தத் தப்பும் இல்லேம்மா … தப்பெல்லாம் என் பேர்லதாம்மா … நீ பொறந்து, உனக்கு சுகன்யான்னு பேரு வெச்சதும்
“சுகா” ன்னு அந்தப் பேரை சுருக்கி , ஆசை ஆசையா இப்படி முதல்ல உன்னை கூப்பிட ஆரம்பிச்சதே நான்தாம்ம்மா … அதுக்கப்புறம்தான் உங்கம்மாவே உன்னை அப்படி கூப்பிட ஆரம்பிச்சா!” அவர் குரலில் துக்கம் பொதிந்திருக்க, குரலில் அப்பட்டமான வருத்தத்துடன் பேசினார் குமாரசுவாமி. தன் தாயை அந்த குரல் ஒருமையில் குறிப்பிட்டு பேசிய கணத்தில் அவளுக்கு விளங்கிவிட்டது … பேசுபவர் வேறு யாருமில்லை … யாரைத் தேட வேண்டும் என நினைத்திருந்தாளோ … அவர்தான் இவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *