கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 11 9

“அவனுக்கு” கேட்டுவிட்டதா?
“ஹலோ! … மிஸ்டர் ரகுராமன் பேசறீங்களா”
“ஆமாம் .. நான் ரகுராமன் தான் பேசறேன் … நீங்க யாரு?”
“சாரி … நான் ராத்திரி நேரத்துல உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும்.”
“பரவாயில்லை … சொல்லுங்க” … பரிச்சயமான குரலாயிருக்கே? இந்த குரலை நான் எங்கே கேட்டிருக்கேன்? ம்ம்ம் … ரகுராமன் தன் நெற்றியைச் சொறிந்து கொண்டான்.
“ரகு … நான் குமார் … குமாரசுவாமி பேசறேன்” குமாரின் குரலில் நடுக்கமிருந்தது.
“குமார் … எப்படியிருக்கீங்க? … இன் எ வே … ஐயாம் ஹாப்பி … உங்ககிட்ட நானே ஒரு முக்கியமான விஷயமா பேசணும்ன்னு இருந்தேன். ஆனா நீங்க முந்திக்கிட்டீங்க; எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்ன்னு சொல்றாங்களே; அது இதுதான் போல இருக்கு; சொல்லுங்க குமார் … எத்தனை நாளாச்சு உங்க குரலைக் கேட்டு … எங்கேருந்து பேசறீங்க … ம்ம்ம் …
“ ரகுராமன் மனதில் மின்னலாக ஒரு மகிழ்ச்சியின் கீற்று உதயமாகியது.
“நல்லாயிருக்கேன் … இப்ப சென்னையிலேருந்துதான் பேசறேன். உங்களையெல்லாம் பாக்கணும்ன்னு ரொம்ப ஆசையாயிருக்கு … நீங்க சரின்னு சொன்னா உங்களை நான் வந்து பாக்க விரும்பறேன். நேரா வீட்டுக்கு வர்றதுக்கு எனக்கிருந்த உரிமையை நான் ரொம்ப நாளுக்கு முன்னாடி இழந்துட்டேன் … இப்ப சுந்தரியும் நீங்களும் அந்த உரிமையை திரும்பவும் எனக்கு குடுத்தா … எனக்கு சந்தோஷமா இருக்கும் … மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க … அப்புறம் நான் உடைஞ்சு போயிடுவேன்.

“பழசையெல்லாம் நான் மறந்துட்டேன். குமார் … நீங்க என்னைப் பாக்க எப்ப வேணா வரலாம். உங்க கல்யாணத்துக்கு எங்க வீட்டுல எதிர்ப்பு இருந்தப்பவும், நான் தனியாளா உங்களை சப்போர்ட் பண்ணது உங்களுக்கு ஞாபகமிருக்கும். உங்க கிட்ட இருந்த ஒரு சின்னக் குறையால, நம்ம குடும்பத்துல, நம்பளுக்கு உள்ள இருந்த உறவுல விரிசல் ஏற்பட்டது உண்மைதான். அந்த விரிசலுக்கான குறையும் இப்ப உங்கக்கிட்ட இல்லேன்னு இப்பத்தான் எனக்குத் தெரிய வந்தது.”
“நீங்க பழசெல்லாம் மறந்துட்டு என் கிட்ட அன்பா பேசறதுக்கு ரொம்பத் தேங்க்ஸ் ரகு …

“குமார் … போன வாரம் … பேச்சுவாக்குல வேற ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல சுகன்யாகிட்டச் சொன்னேன் …
“தீராத கோபம் யாருக்கு லாபம்ன்னு?”
“ரகு … என் குழந்தை சுகன்யா எப்படியிருக்கா?
“ரொம்ப நல்லாயிருக்கா … எங்களால முடிஞ்ச அளவுக்கு அவளை நல்லபடியா வளர்த்து இருக்கோம். நீங்க அவளைப் பாத்தா ரொம்ப சந்தோஷப் படுவீங்க. இப்ப அவளும் சென்னையிலத்தான் வேலை செய்துகிட்டு இருக்கா … அவளைப் பாத்தா நீங்க உங்க சுந்தரியை பார்க்க வேண்டாம் … அப்படியே சின்ன வயசு சுந்தரி மாதிரியே இருக்கா.” ரகுவின் குரலில் பூரிப்பு வெளிப்பட்டது.
“சுகன்யா … என் சுந்தரி வளர்த்த பொண்ணு … அவ கண்டிப்பா நல்லபடியாத்தான் வளர்ந்து இருக்கணும்” குமாரின் குரலில் எல்லையற்ற ஏக்கம் வழிந்தோடியது.
“குமார் … நான் அக்காவோட செல் நம்பரும், சுகன்யாவோட நம்பரும் தரேன். நீங்க என் கிட்ட பேசினதையும் அக்காகிட்ட சொல்றேன். முதல்ல நீங்க அக்காகிட்ட ஒரு தரம் பேசுங்க. ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சிக்கறது ரொம்பக்கஷ்டம் … நான் சொல்றது உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன் … எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நான் நம்பறேன்.
“ரொம்பத் தேங்க்ஸ் ரகு … நாளைக்கு காலையில நான் சுந்தரிக்கிட்ட பேசறேன். பை தி பை … எங்கிட்ட நீங்க பேசணும்ன்னு இருந்ததா சொன்னீங்க … என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?”
“எல்லாம் நல்ல விஷயம் தான் … பிளீஸ் … முதல்ல நீங்க சுந்தரியக்கா கிட்ட பேசுங்க … மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். குட் நைட்”
“குட் நைட் …
“ குமாரசுவாமியிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது. காலையில் வழக்கம் போல் படுக்கையை விட்டு எழுந்த சுகன்யா, இரவு மழையில் நனைந்து, விடியற்காலையில் அயர்ந்து உறங்க ஆரம்பித்த சுந்தரியைப் பார்த்தவள், அம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்; மனதில் நினைத்துக்கொண்டே, காஸில் பாலை ஏற்றிவிட்டு, இரண்டு தம்ளர் அரிசியை கழுவி, இன்னொரு பக்கம் அடுப்பில் ஏற்றினாள். பல் துலக்கி தன் முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள். பிரிஜ்ஜை திறந்து நேற்றைய தோசை மாவு இன்னும் மீதமிருப்பதைப் பார்த்தவள், காலை டிபனுக்கு இந்த மாவு போதும், இதை ஊத்தப்பம்மா ஊத்திக்கலாம். ஆபிசுக்கு தயிர் சாதமும், ஊறுகாயும் கொண்டு போய்விடலாம் என மனதுக்குள் திட்டமிட்டாள். மீதி சமையலை அம்மா பாத்துக்குவாங்க. மனதில் திருப்தியுடன், சர்க்கரை குறைவாக தனக்கு மட்டும் காபியை கலந்து கொண்டு, கட்டிலில் உட்க்கார்ந்து நிதானமாக காபியை ருசித்து குடித்தாள்.

“சுகா, மணி என்னடி ஆச்சு, ஏண்டி நீ எழுப்பலை என்னை? குக்கரின் விசில் சப்தம் கேட்டு, மனதில் குற்ற உணர்வுடன் விருட்டென எழுந்த சுந்தரி தன் தலை கேசத்தை இறுக்கி முடிந்துகொண்டாள்.
“ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் மழையில நின்னே? அப்புறம் எப்பத் தூங்கினயோ? இப்ப எந்த பட்டினம் எங்க முழுகிப்போச்சுன்னு இப்படி அடிச்சுப் புடிச்சிக்கிட்டு எழுந்திருச்சிட்டே நீ? … இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க வேண்டியதுதானே?…” ஆசையுடன் தாயின் கழுத்தில் தன் கையைப் போட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் சுகன்யா.
“நாள் பூரா என்ன வேலையிருக்கு எனக்கு இங்க; நீ ஆபிசுக்கு போனதுக்கப்பறம் தூங்கிட்டுப் போறேன் … எனக்கும் காபியை கலக்குடி சுகா. காபியில ஒரு துளி அதிகமா சக்கரையைப் போடு; ஒரு நிமிஷத்துல வர்றேன் …
“ சொல்லியாவாறே அவள் பாத்ரூமில் நுழைந்தாள்.

Updated: March 28, 2021 — 9:30 am