கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 11 9

“ச்சே .. சே .. உன் நிலைமை எனக்குத் தெரியாதா? உன்னை எதுக்கு நான் தப்பா நெனைக்கப் போறேன்? நான் அவன் கூட இருந்து பாத்துக்கறதை உனக்கு சொன்னவங்க, அவன் எப்படி இருக்காங்கற சேதியை உங்கிட்ட சொல்லலியா?” அவள் குரலில் கேலி தொனித்தது.
“என்னடி என் கிட்டவே கிண்டலா?” வித்யா அவள் முதுகில் செல்லமாக அடித்தாள்.
“யார் சொன்னது உனக்கு … நான் ராத்திரியும் பகலும் அவன் கூட குடும்பம் நடத்தறேன்னு?”
“வேற யாரு … நம்ம பெண்கள் சங்கத் தலைவி குண்டு சாவித்திரி தான் … அவ பேங்க் பாஸ் புக்கை எடுக்க நேத்து சாயங்கலாம் இங்க வந்திருந்தா … மறந்து இங்க வெச்சிட்டு போயிட்டாளாம்; அடியே வித்யா! அந்த செல்வா குடுத்து வெச்சவன்னு நினைக்கிறேன்; தாலி கட்டிக்கிட்டவ கூட தன் புருஷனை இப்படி பாத்துக்க மாட்டா; உன் ஃப்ரெண்ட் சுகன்யா ஆஸ்பத்திரியே கதியா அவன் பக்கத்துலேயேதான் இருக்காளாம்ன்னு சங்கு ஊதினா” வித்யா சிரித்தாள்.
“வேற என்ன சொன்னா அவ?”
“கூடிய சீக்கிரம் நீ கல்யாண சாப்பாடு போடுவேன்னு சொன்னா”
“நிஜமா அப்படியா சொன்னா … இல்லே … இது நடுவுல நீ போடற பிட்டா?”
“நிஜமாத்தாண்டி சொல்றேன் … அப்படித்தான் சொன்னா அவ.”
“இல்ல வித்யா … சாவித்திரி இன்னும் கூட செல்வாவை தன் பொண்ணுக்கு எப்படியாவது முடிக்கணும்ன்னு முயற்சி பண்றா … செல்வாவோட அம்மாவைப் பத்தி தீர்மானமா ஒண்ணும் சொல்ல முடியலை; அவங்க மனசுல என்ன இருக்குன்னு யாருக்கும் தெரியலை; இன்னும் பிடி கொடுத்து பேச மாட்டேங்கறாங்க … அவங்க அப்பாவுக்கு என்னை பிடிச்சுப் போச்சு; அவர் எங்க பக்கம்ன்னு எனக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு … இதை நான் உங்கிட்ட மட்டும் தான் சொல்றேன் … இப்போதைக்கு இதை நீ யாருக்கிட்டேயும் சொல்லாதே … உன் மனசோட வெச்சுக்க … உனக்கு தெரியாமலா நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்?
“ சுகன்யா புன்னகைத்தாள்.

Updated: March 28, 2021 — 9:30 am