ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 2 26

“இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு கல்யாணத்துக்கு நீ இப்போ அங்கே போவது சரி வாராது,” என்றல்

மகேஷ் தனியாக அவர் அபார்ட்மெண்டில் இருந்தார். அவர் பெற்றோர்கள் அவர் சொந்த ஊரில் இருந்தார்கள். நான் என் அம்மா பேச்சை கேட்காமல் அரா நாள் லீவு எடுத்து அவரை பார்க்க சென்றேன். மகேஷ் தன கதவை திறந்தார். அவர் நிலையை கண்டதும் உடனே என் கண்களில் கணீர் வெள்ளமாய் ஓடியது

பல நாள் மழிக்கப்படாத கன்னம், பம்பை பறட்டையான தலைமுடி, கண்கள் கீழ் கரு வளையங்கள் மற்றும் சோர்வான முகம். எவ்வளவு அழகிய வடிவமைந்த முகம் இந்த சில நாட்களில் இப்படி வாடி விட்டதே என்று மனம் குமுறியது.

“என்ன ஆச்சி உங்களுக்கு, உடம்பு முடியில என்று சொன்னார்களே , ஏன் என்னிடம் எதுவும் சொல்லல,” என்று பட படவென்று பேசிக்கொண்டே இருந்தேன்.

அவர் மெலிதான ஒரு புன்னகையோடு,” முதலில் உள்ளே வா என்றார்.”

அவர் சோபாவில் உட்கார நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன்.

“ஏன் மா அழுகிற, எனக்கு ஒன்னும் இல்லை,” என்று சொல்லியபடி என் கண்ணீரை அவர் கையால் துடைத்தார்.

நான் அவர் கையை என் கன்னத்தோடு பற்றிக்கொண்டு,” எவளோ மோசமாக நீங்கள் அவதிப்பட்டு இருக்கீங்க என்று உங்களை பார்த்தாலே தெரியுது. ஏன் என் கிட்ட இதை மறைச்சிங்க.”

“நீ மனக்கஷ்ட படுவ என்று தான் சொல்லல, சரியான பிறகு சொல்லலாம் என்று விட்டுவிட்டேன்.”

“இப்போ மட்டும் என்னவாம், உங்க கூட மூணு நாளாக பேசாமல் கரணம் தெரியாமல் துடிச்சுப் போய்ட்டேன். என் மேல் பாசம் இல்லாமல் போய்விட்டதா அல்லது பேசி அலுத்து போச்சா, என்னென்னமோ நினைக்க தோன்றியது.”

“சாரி மா செல்லம், நான் உன்னிடம் பேச வேண்டும் என்று இருந்தேன் அனால் மூன்று நாளாக காய்ச்சல் வாட்டி எடுத்துருச்சி.”

இவர் எப்படி தவிச்சிருக்காரு, நான் என்னவென்றால் இவரை மனதில் திட்டிக்கொண்டு இருந்திருக்கேன். மகேஷை என் மார்போடு அனைத்து கொண்டேன்.

“இனி நான் இருக்கிறேன், இரண்டு நாள் லீவு போட்டுட்டு உங்களை கவனிச்சிக்குறேன்,” என்றேன்.

அவர் என் அணைப்பில் இருந்து விடுவித்து கொண்டு சொன்னார்,” ஹேய் இப்போ தான் ரிகவர் பண்ணுறேன், உனக்கு ஜுரம் ஒட்டிக்க போகுது. நீ லீவு எடுக்க வேண்டாம் இனி நான் இரண்டு நாளில் ஓகே ஆகிடுவேன்.”

“ஒட்டிகிட்டா என்ன, அதுவெல்லாம் பிரச்னை இல்லை.”

“மண்டு, நீ நோயில் அவதிபட தான் நான் என் நோய்நிலை மறைத்தேனா? நீ அவதிப்படுவதை பார்த்தல் நான் வருந்த மாட்டேன்னா?”

1 Comment

Add a Comment
  1. Where are Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *