ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 2 26

இந்த இரண்டு மாதத்துக்குள் என் வாழ்கை எப்படி தலை கீழாக மாறிவிட்டது. கல்யாணத்துக்கு முன்பும் சரி கல்யாணத்துக்கு பின்பும் சரி மகேஷின் அன்பில் வாழ்வே மிகவும் சுகமானது என்று சந்தோஷத்தில் மிதந்தேன். அனால் இப்போது ஏன் என் வாழ்கை இப்படி ஆகிவிட்டது என்று தவிக்கிறேன்.

அப்போது இரண்டு குடும்பமும் எங்கள் சம்மதம் தெரிந்த பின் கல்யாண வேளையில் மும்முரமாக நுழைந்தார்கள். இன்னும் மூன்றரை மாதத்தில் கல்யாணம் என்று முடிவெடுத்தார்கள். ஒரு மாதத்தில் இரண்டு குடும்பத்து நெருங்கிய உறவினர்கள் மட்டும் வைத்து ஒரு சிம்பிள் நிச்சயதார்த்தம் நடந்தது. கல்யாணம் மிகவும் கிராண்ட் ஆகா செய்ய போவதால் நிச்சயதார்த்தம் சிம்பிள் ஆகா நடத்தினார்கள். இந்த நாட்களில் ஒரு நாள் கூட நானும் மஹேஷும், ஒன்று சிந்திப்போம் இல்லையென்றால் போனிலாவது பேசுவோம்.

என் அம்மா கூட சொல்லுவாள், “நீயும் மாப்பிள்ளையும் இப்போவே எல்லாம் பேசி முடித்திட்டாள் கல்யாணத்துக்கு அப்புறம் என்னடி பேசுவீங்க?”

நான் பதிலுக்கு அவளிடம் கேட்டேன்,” உனக்கும் அப்பாவுக்கும் காதல் திருமணமா அல்லது ஆறேஞ்டு திருமணமா?”

“அப்போது பெரும்பாலும் அப்பா அம்மா பார்த்து வைத்த திருமணம் தான் இருக்கும். அதுவும் என் அப்பாவுக்கு காதல் கீதல் என்றல் என்னை கொன்றே போட்டுடுவார்.”

“அதானே பார்த்தேன், உனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்பதால் இப்போ நாம் காதலிப்பது உனக்கு பொறாமையாக இருக்க?” என்றேன் கிண்டலாக.

“நீ என் கிட்ட அடி வாங்க போற, நான் ஒன்னும் காதல் என்றல் என்னவென்று தெரியாதவள் இல்லை. நானும் உங்க அப்பாவும் கல்யாணத்துக்கு பிறகு அதிகமாக ஒருவரை ஒருவர் நேசித்தோம்,” என்றல் என் அம்மா.

“பாவம் அப்பா, கல்யாணம் ஆகிடுச்சே என்று வேற வழி இல்லாமல் உன்னை லவ் பண்ணி இருக்கார், நாங்க எல்லாம் அப்படி இல்லை,” என்றேன் சிரித்து கொண்டு.

1 Comment

Add a Comment
  1. Where are Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *