ஐ லவ் யூ ஸோ மச்.. மாம்.. ! 57

” உனக்கு.. இப்போ முழுசா வந்துருச்சா புத்தி..??”
” தெரியல. ஆனா.. லவ்வ நம்பி ஏமாற மாட்டேன். அது மட்டும் தெரியும்.. !!”
” ம்ம்.. குட்.. !!”
மேற்கில் சூரியன் மறைந்து இருட்டத் துவங்கியது. காகங்கள் எல்லாம் பூங்காவில் இருந்த மரங்களில் வந்து வட்டமடித்துக் கொண்டிருந்தது..!!
” சரி.. போலாமா..?? உனக்கு டைம் ஆகுது.. ??” நான் மெல்ல கேட்டேன்.
” ம்ம். !!” மீண்டும் நெஞ்சகம் விம்ம பலமாக பெருமூச்சு விட்டாள் லாவண்யா..!!
நாங்கள் பெஞ்ச்சை விட்டு எழுந்து மெதுவாக வாயிலை நோக்கி நடந்தோம். பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாப் போன போது நன்றாக இருட்டி விட்டது.
” ஏதாவது சாப்பிட்டு போறியா..??” நான் அவளைக் கேட்டேன்.
” ம்ம். !!” என்று தலையாட்டினாள். ”இப்ப இருக்கற இதுக்கு.. ஹாஸ்டல் சாப்பாடு எறங்கவே செய்யாது..!!”
” சரி.. என்ன சாப்பிடறே.. ??”
” நூடுல்ஸ் சாப்பிட்டுக்கறேன்.!! வேற எதுவும் வேண்டாம் !!” என அவள் சொன்னது கூட பார்க் வாசலில்.. கொஞ்சம் தள்ளி கை வண்டியில் விற்றுக் கொண்டிருந்த கையேந்தி பவன் நூடுல்ஸைப் பார்த்து விட்டுத்தான்.. !!
நான் சாப்பிட்டிருக்கிறேன். இங்கு நன்றாக இருக்கும். கையேந்தி பவனுக்கு போய் ஆளுக்கு ஒரு ஸ்டூலில் உட்கார்ந்தோம். இரண்டு பேருக்குமே நூடுல்ஸ் சொல்லி அமைதியாக சாப்பிட்டோம். !!
அவள் போதுமென்க.. கை கழுவி பணம் கொடுத்து கிளம்பினோம். !!
“லாவி”
“ஹ்ம்?”
“மனசை போட்டு அலட்டிக்காதே”
“முடியல..”
“முடியும். ப்ரீயா விடு. வேற எதுலயாவது கவனம் செலுத்து..”
“ம்ம்..”
அவள் போகும் ரூட் பஸ் வந்தது.
“டேக் கேர் லாவி.. எதுன்னாலும் எனக்கு கால் பண்ணு”
“ஓகே மாம்”
“பை..”
“பை.. ” கையசைத்து போய் பஸ் ஏறினாள்.

3 Comments

Add a Comment
  1. கதையை ஒரு சுவாரசியமாக எழுத உங்களால் மட்டுமே முடிகிறது.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை வரவேற்கிறேன்.

  2. அருமை அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *