என் தேவதை – Part 7 26

“சும்மாவா..?”
“ம்ம்.. நாங்க எங்க இருக்கோம்.. என்ன பண்றம்னு நீ தெரிஞ்சிக்க வேண்டாமா?”
” திமிறுதான்டி உனக்கு”
“ச்ச.. ச்ச.. நாளைக்கு நீ நோண்டி நோண்டி கேப்ப இல்ல.. நாங்க எங்க போனோம். என்ன செஞ்சோம்னு..”
“இல்லப்பா நான் கேக்க மாட்டேன். நீயும் சொல்ல வேண்டாம். ஓகேவா?”
”என்னடி ஜெலசா..?”
“எனக்கு எதுக்கு ஜெலசு..?”
“நீ என் க்ளோஸ் பிரெண்டுடி.. நடந்த எல்லாத்தையும் நான் உன்கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லுவேன்?”
“………”
“ஏய்.. ரூப்..”
“சொல்லு?”
“டென்ஷன்ல இருக்கியா?”
“ஏய்.. இப்ப உன் பிரச்சினை என்ன?”
“ஒண்ணுல்லடி. நீ ஏதோ கோபத்துல இருக்கேனு தெரியுது. ஓகேடி உன்னை டிஸ்டர்ப் பண்ணிருந்தா ஸாரி..”
“இப்ப எதுக்கு ஸாரி கேக்குற?”
“இல்ல உன்னை…”
“சரி விடு.. எனக்கு வேற ஒரு டென்ஷன். ஆமா இப்ப எங்க இருக்கீங்க?”
“குன்னூர்ல..”
“குன்னூர் எப்ப போனீங்க..?”
“ஃபால்ஸ்ல செமையா என்ஜாய் பண்ணமா.. டயர்டாகி பசி வந்து வயிறு கபகபனு எரிய ஆரம்பிச்சிருச்சா… அதனால சாப்பிடலாம்னு குன்னூர் வந்து ஒரு ஹோட்டல்ல உக்காந்து பிரியாணி சாப்பிட்டுட்டு இருக்கோம்..”
“எரும.. இதபார் நான் ஆல்ரெடி மசக் கடுப்புல இருக்கேன். இதுல நீ ஒரு பக்கம் என்னை கடுப்பாக்காத. மூடிட்டு வெய். நல்லா தின்னுட்டு.. ஊரு சுத்திட்டு வா.. நாளைக்கு காலேஜ்ல பேசிக்கலாம்”
“கடுப்பாகிட்டியா?”
“ஆல்ரெடி நான் கடுப்புலதான் இருக்கேன்”
”என்னடி பிரச்சினை? ”
“அது உனக்கு இப்ப தேவையே இல்ல. நீ நல்லா என்ஜாய் பண்ற வழியை மட்டும் பாரு.. நான் வெச்சிர்றேன். பை” என்று அழுத்திச் சொல்லிவிட்டு காலைக் கட் பண்ணினாள் ரூபா.. !!

“செமக் கடுப்புல இருக்கா போல..” தமிழ் சிரித்தபடி நிருதியைப் பார்த்துச் சொன்னாள்.
“ஏனாம்?”
“தெரியல.. அவளுக்கு அங்க ஏதோ ப்ராப்ளம்.. இதுல நான் வேற ஒரு பக்கம் கடுப்பேத்தறேனு வெச்சிட்டா..”
“சரி.. என்ன வேணுமோ சொல்லி சாப்பிடு”
“உங்களுக்கு? ”
“நீ சொல்லிக்க..”

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *