என் தேவதை – Part 7 74

‘என்ன பேச?’
‘என்னாச்சு உனக்கு? ‘
‘ஒண்ணுல்ல’
‘ஐ மிஸ் யூ டி’
‘என்ன லொள்ளா?’
‘நீயும் வந்துருக்கலாம்’
‘எங்க?’
‘எங்ககூட ஃபால்ஸ்க்கு. எவ்ளோ ஜாலியா இருந்துச்சு தெரியுமா? பட் நீ இல்லேன்ற பீலிங் இருந்துச்சு எனக்கு’
‘சும்மா போ. என்னை கடுப்பாக்காத’
‘சே.. இல்ல ரூப்ஸ். நெஜமா உன்ன மிஸ் பண்ணேன்’
‘இது உனக்கே ரொம்ப ஓவரா இல்ல?’
‘எது?’
‘நீ உன் ஆள கூட்டிட்டு போய் என்ஜாய் பண்ணிருக்க.. அந்த நேரத்து நீ என்னையெல்லாம் நினைக்கவா போறே?’
‘நிச்சயமா நாங்க ரெண்டு பேருமே உன்ன மிஸ் பண்ணோம்’
‘நம்பிட்டேன். பிராடு’
‘லவ் யூ டி’
‘என்ன திடீர்னு ரூட்டு மாறுது?’
‘நீ என் கண்ணுக்குள்ளயே இருக்க’
‘பேசாம போ’
‘கோபமாடி?’
‘கோபமில்ல’
‘ஐ லவ் யூ’
‘……….’
‘ஏய் ‘
‘சொல்லு?’
‘சரி.. மத்யானம் ஏதோ பிரச்சினைனு தமிழ்கிட்ட சொன்னியே.. என்ன பிரச்சினை?’
‘ஏன்.. சொன்னா தீத்துட போறியாக்கும்?’
‘என்னால முடிஞ்சா நிச்சயம் தீத்துடுவேன்’
‘…….’
‘ஏய் ரூப்ஸ்’
‘நெஜமாவா?’
‘ப்ராமிஸ். என்ன ப்ராப்ளம் சொல்லு?’
‘எங்க வீட்ல செம ப்ராப்ளம்’
‘என்னது?’
‘எங்கக்காவால’
‘சொல்லு?’
‘நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவியா?’
‘சொல்லுப்பா. நிச்சயம் செய்வேன்?’
‘இன்னிக்கு நடந்த ப்ராப்ளத்துல எங்கப்பா, எங்கக்காவை அடிச்சிட்டார். பாவம் அவ’
‘ஏன்?’
‘அவ ஒரு பையனை லவ் பண்றா. இப்போ அவனைத்தான் கட்டிக்குவேனு சொல்றா. அதனாலதான் எங்கப்பா அவளை அடிச்சிட்டார்’
‘ஓஓ.. ஸாரி..’
‘ம்ம்.. இனி என்ன நடக்குமோ.. நெனைச்சாலே எனக்கு பயமாருக்கு’
‘ஏய்.. நீதான் யாரையும் லவ் பண்ல இல்ல. உனக்கென்ன பயம்?’
‘லொள்ளுதான்’
‘சரி.. இதுல நான் எப்படி உனக்கு உதவ முடியும்?’
‘இதுல உதவ வேண்டாம். இதில்லாம இன்னொரு ப்ராளமும் இருக்கு’
‘என்ன அது? சொல்லு?’
‘உன்கிட்ட கேக்க கஷ்டமா இருக்கு’
‘ஏய்.. என்கிட்ட என்ன கேளு?’
‘இல்ல இதுக்காக நீ என்னை தப்பா நெனைக்கலாம். அதான் பயம்மாருக்கு’
‘ச்ச.. அப்படி நெனைக்காத ரூப்ஸ். கேளு?’
‘……….’
‘ஏய்.. சொல்லுடி?’
‘தப்பா நெனைக்க மாட்டல்ல?’
‘மாட்டேன். என் தமிழ் மேல ப்ராமிஸ்’
‘தேங்க்ஸ்’
‘சொல்லு?’

1 Comment

Comments are closed.