என் தேவதை – Part 7 75

”இல்ல… ல்ல.. எடுத்துட்டே வந்துரு. அதை நான் இந்தக்காகிட்ட குடுத்து எங்கம்மா மூலமா வாங்கிக்கறேன்”
“அப்பறம் ரூப்ஸ்”
“என்ன?”
“கடைக்கு வரப்ப தனியா வா. ப்ளீஸ். அந்தக்காவை ஏதாவது கூட்டிட்டு வந்துடாத”
“ஹா ஹா.. சரி. வா”
“வெய்ட் பண்ணு. வந்துட்டு கால் பண்றேன்”
“ஓகே. தேங்க்ஸ்”
”லவ் யூ டி”
“மீ டூ”

காலை கட் பண்ணி விட்டு உடனே கிளம்பினான்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தது. ரூபாவின் ஏரியாவை அடைந்து ஒரு பேன்ஸி ஸ்டோர் அருகில் நின்று அவளுக்கு போன் செய்தான் நிருதி. இருட்டியிருந்தது. அவன் வெளிச்சத்தில் நிற்கவில்லை.
அவள் போனை எடுத்தாள்.
“வந்துட்டிங்களா?” போனை எடுத்ததும் ஆர்வமாகக் கேட்டாள்.
“ம்ம்.. வந்தாச்சு”
“எங்க இருக்கீங்க?”
“பேன்ஸி ஸ்டோர் பக்கத்துல”
“அங்கயா? கடைல யாரு இருக்காங்க?”

1 Comment

Comments are closed.