எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 4 29

பாலா : டேய் பொண்ணு கல்யாணம் ஆனா பொண்ணு மாதிரி தான்டா இருந்தா. பையன் சின்ன பையன் மாதிரி இருந்தான்.

ரகு : எப்படிடா கல்யாணம் ஆன பொண்ணுன்னு சொல்ற

பாலா : உருவத்தை பாத்தேன்டா அந்த பொண்ணு கொஞ்சம் height and weight ஆ இருந்துச்சு, பையன் கொஞ்சம் உன் தம்பி மாதிரி இருந்தான்.

ரகு மனதில் திடீரென மின்னல் அடித்தது போல் இருக்க “என்னோடு தம்பியா?” என்றான்.

பாலா : டேய் உருவத்தை சொன்னேன்டா

ரகு : ஒ சரி சரி

பாலா : ஆனா உள்ளூரா வெளியூரானு தான் தெரியல

வசந்த் : உள்ளூரா தாண்டா இருக்கும்

வினோத் : எப்படி சொல்ற?

வசந்த் : டேய் உள்ளூர்காரனுக்கு தாண்டா இந்த போஸ்ட் ஆபீஸ் மூடி இருக்கு யாரும் யூஸ் பண்ணலனு தெரியும். அதான் அவன் யூஸ் பண்ணிக்கிட்டான்

ரகு : அப்ப அந்த பொண்ணு?

வசந்த் : அதுவும் உள்ளூரா தான் இருக்கும்

வினோத் : வாய்ப்பே இல்லை. பையன் கூட உள்ளூர்னு ஒத்துக்கலாம், ஆனா பொண்ணு வெளியூரா தான் இருக்கும்

வசந்த் : எப்படி சொல்ற?

பாலா : டேய் மூனாவது ரவுண்ட் ஊத்தீட்டேன் எடுத்துக்கோங்க டா.

மறுபடியும் சீயர்ஸ் செய்து சரக்கு அடித்தனர்.

வசந்த் : டேய் இப்ப சொல்லு எப்படி வெளியூரு பொண்ணுன்னு சொல்ற?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *