எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 4 62

ராஜா : (நல்லவேளை நேத்து இவனுங்களுக்கு இந்த ஐடியா வரல என்று மனதில் நினைத்துக் கொண்டு) சரிடா வண்டிய எடுங்கடா என்று சொல்ல இரண்டு பைக்கும் நேரே போஸ்ட் ஆபீஸ் பக்கத்தில் இருக்கும் ஆலமரத்திற்கு சென்றது.

அன்று இரவு 10 மணிக்கு,
குமார், வினோத் ,பாலா மூவரும் அந்த டிராக்டர் டிரைலரில் அமர்ந்துகொண்டு .யாராவது வருகிறார்களா என்று போஸ்ட் ஆபீஸை பார்த்துக்கொண்டிருந்தனர். அதே நேரம் பார்த்து வசந்த் மற்றும் ரகு பைக்கில் வந்து டெய்லர் அருகில் நின்றனர். வினோத் அவர்கள் வாங்கி வந்த சரக்கு மற்றும் சைடிஸ்களை வாங்கி டெய்லரில் வைத்து, அவர்களுக்கு கையை கொடுத்து உள்ளே தூக்கி விட்டான். அனைவரும் டெய்லரின் கதவை அடைத்துவிட்டு வட்டமாக அமர்ந்தனர். “ஒரு புல் மற்றுமொரு ஆப்” இருந்தது. அதுபோக 1 லிட்டர் வாட்டர்கேன் 3 , 5 கிளாஸ், முறுக்கு பாக்கெட் ,சிப்ஸ், ஊறுகாய், கொஞ்சம் ஹால்ஸ் சாக்லேட் அனைத்தையும் டெய்லரில் கொட்டினான் பாலா.

வசந்த் : பாத்துடா உடைஞ்சிற போகுது

பாலா : உடைக்கதானடா போறோம்

ரகு அனைத்து கிளாசையும் எடுத்துவைத்து அதில் ரவுண்ட்ஸ் ஊத்தினான் .அனைவரும் சீயர்ஸ் செய்து சரக்கு அடித்தனர் .பின் அனைவரும் சைடுடிசை சாப்பிட்டனர். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது

வசந்த் : என்னடா குமாரு யாராச்சு வந்தாங்களா?

குமார் : இல்லடா இன்னும் வரல வருவாங்க நினைக்கிறேன்

வசந்த் : டேய் இன்னைக்கு வரமாட்டாங்க டா

குமார் : வரமாட்டாங்கனு எப்படி சொல்ற?

வசந்த் : இன்னைக்கு இங்க வருவாங்க நீ எப்படிடா சொல்ற?

குமார் : டேய் அவங்க ரெண்டு பேரும் பண்ணத பாலா பார்த்திருக்கான். ஆனா அங்க ரெண்டு பேருக்கும் பாலா பாத்தது தெரியாது. அதனால நம்மள யாரும் பார்க்கலனு தான் நினைச்சிட்டு இருப்பாங்க. அதனால கண்டிப்பா இன்னைக்கு இங்க வர வாய்ப்பு இருக்கு.

வசந்த் : நீ அப்படி யோசிக்கிறியா

மறுபடியும் சீயர்ஸ் செய்து இரண்டாவது ரவுண்டை அடித்தனர்.

குமார் : நீ எதை வச்சு சொல்ற வர மாட்டாங்கன்னு

வசந்த் : டேய் சரக்கு அடிக்கிற நம்மளே இடத்தை மாத்துறோம். அவன் மாத்தாம இருப்பானா டா

குமார் : டேய் பொண்ணு எப்படிடா இருந்தா கரெக்டா சொல்லுடா பாலா