எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 4 29

ஹேமா கிச்சனுக்குள் போனுடன் வந்தாள் கிளாசை சிங்கிள் போட்டு விட்டு மாடிப்படி பக்கத்தில் இருக்கும் துணி வாளியை எடுத்துக் கொண்டு மாடிக்கு செல்வதை ரகு பார்த்து கொண்டிருந்தான்.

பின், ராஜா போனிலிருந்து பாலாவுக்கு போன் செய்தான். ரிங் அடிக்க பாலா அட்டென்ட் செய்தான்.

ரகு : ஹலோ

பாலா : யாரு?

ரகு : டேய் நான்தான்டா ரகு .என்னோட போன்ல கால் போகல அதான் ராஜா போல இருந்து கூப்பிடுறேன்.

பாலா : சொல்லுடா

ரகு : மச்சான் உன்னோட பைக்கு தேவைப்படுது டா.நைட் திருப்பிக் கொடுத்துருவேண்டா

பாலா : சரிடா எங்க போற?

ரகு : பொள்ளாச்சி போறேண்டா

பாலா : சரி நான் கறிக்கடையில கறி வாங்கிட்டு நிக்கிறேன். வீட்ல குடுத்துட்டு வந்து வண்டிய தரேன் டா.

ரகு : ஓகே மச்சான் தேங்க்ஸ்டா

பாலா : ஓகேடா.

பின் ரகு வீட்டிற்குள் சென்று போனை ராஜாவிடம் கொடுத்துவிட்டு ரூமுக்குள் சென்றான். சிறிது நேரம் கழித்து டவலை எடுத்துக் கொண்டு வெளியே வந்து குளிக்கச் சென்றான். 20 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து முடித்துவிட்டு அவன் வெளியே வந்தான் .ரூமுக்கு சென்று டிரெஸ்ஸை மாற்றிவிட்டு கிச்சனுக்குள் வந்தான். அங்கே பத்மாவதி பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள் .

ரகு : அம்மா ஹேமா எங்க?

பத்மாவதி : துணி காயப்போட மேல போனா டா இன்னும் வரல?

ரகு : ராஜா எங்க ஹால்ல காணோம்?

பத்மாவதி : அவனும் மேல தான்டா போனான். எக்சைஸ் பண்ணிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்

ரகு : எக்சர்சைஸா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *