எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 9

அன்று மதியம். அதே ஃபுட் கோர்ட். அசோக்கும் நண்பர்களும் அப்போதுதான் உணவருந்த ஆரம்பித்திருந்தார்கள். முதல் வாய் எடுத்து வைத்து, சுவைத்து பார்த்ததுமே அசோக் சலிப்பாக சொன்னான்.

“ப்ச்.. பார்டா இவனுகளை.. பாஸ்தால உப்பே போடல.. சப்புன்னு இருக்கு..!!” அசோக் சொல்ல, வேணு அதற்காவே காத்திருந்தவன் மாதிரி

“ம்ம்.. நீ சொரணை கெட்ட பயன்னு அவனுகளுக்கும் தெரிஞ்சு போச்சு போல இருக்கு மச்சி..!!” என்று பட்டென கிண்டலாக சொன்னான்.

“ஹாஹா.. ஹாஹா..!!” கிஷோரும் சாலமனும் சிரித்தார்கள். அசோக் நிஜமாகவே கடுப்பாகிப் போனான்.

“ங்கொய்யால.. கொலைகாரனாக்காதிங்கடா என்னைய..!! நல்லா உங்க ஆசை தீர.. ஒருநாள் ஃபுல்லா என்னை ஓட்டிட்டிங்க.. போதும்.. அத்தோட விட்ருங்க..!!” என்று சூடாக சொன்னான்.

“ஒய்.. என்ன… ஓவரா சலம்புற..?? ஒருநாள் ஓட்டுனதுக்கே உனக்கு இவ்வளவு எரியுதா..?? நாங்கள்லாம் உன்கிட்ட எவ்வளவு வாங்கிருப்போம்..?? எங்களுக்கு எவ்வளவு எரியும்.??”

“ஹ்ஹ.. சும்மாவா ஓட்டுனேன்.. நீங்க பண்ணின காமடி அப்படி..!!” அசோக் டேபிளில் இருந்த அந்த துளையிட்ட சீசாவை எடுத்து, பாஸ்தாவில் உப்பு தூவிக்கொண்டே சொன்னான்.

“அப்போ நீ பண்ணினது காமடி இல்லையா..?? நாங்களாவது லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் அவளுகளுக்கு பயந்து சாகுறோம்..!! நீ பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே.. பின்னங்கால் பிடரில அடிக்க ஓடி வந்தியே மச்சான்.. அந்த காமடியை எங்க போய் சொல்றது..?? நாங்க அப்படித்தான் ஓட்டுவோம்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!!” – இது சாலமன்.

“சரிடா.. ஓட்டுங்கடா..!! ஆனா.. ஓட்டுறது ஒரு அர்த்தத்தோட ஓட்டுங்க.. சும்ம்ம்மா ஏதாவது சொல்லனுமேனு சொல்லாதீங்க..!!”

“இப்போ என்ன நாங்க ஓட்டுனதுல உனக்கு அர்த்தம் புரியல..??”

“ம்ம்ம்…?? சரி.. நேத்து நான் பயந்து போய் திரும்ப வந்துட்டேன்.. ஒத்துக்குறேன்..!! ஆனா.. சொரணை கெட்ட பயன்னு சொன்னா என்ன அர்த்தம்..?? அப்படி என்ன சொரணை கெட்டு போயிட்டேன்..??”

“பின்ன என்ன..?? நீதான நேத்து பெரிய புடுங்கி மாதிரி.. ‘அந்தப் பொண்ணை லவ் பண்ண வச்சு காட்டுறேன் பாருங்கடா’னு.. சவால் விட்டுட்டு போன..?? ‘சப்பை.. சப்பை மேட்டர்’னு.. சவடாலா பேசுன..?? அப்புறம் பேசாம பம்மிட்டு.. ஆல் ஹோல்ஸையும் அமுக்கி பொத்திட்டு திரும்ப வந்துட்டா.. உன்னை சொரணை கெட்ட பயன்னு சொல்லாம வேற என்ன சொல்றது..?? பேசுனா.. பேசுன மாதிரி செய்யணும்டா..!!”

“ஹேய்..!!! கொஞ்சமாவது மனசாட்சியோட பேசுங்கடா..!! கையில செருப்பை எடுத்து என் மூஞ்சிக்கு முன்னாடி ஆட்டுறா.. காளி மாதிரி அப்படியே ஆவேசமா நிக்கிறா.. அவகிட்ட போய் ‘ஹாய்.. ஹவ் ஆர் யூ.. ஐ லைக் யூ..’ அப்படின்னு இளிச்சுக்கிட்டே டயலாக் பேச சொல்றீங்களா..??”

“பேசிருக்கணும் மச்சி.. சொரணை இருக்குறவனா இருந்தா பேசிருக்கணும்.. அந்த செப்பலால ரெண்டு அப்பு வாங்கிருந்தா கூட தப்பே இல்ல..!!” சாலமன் கிண்டலாக சொல்ல,

“ம்ம்.. உனக்கு வேணா உன் ஆளுட்ட வாங்கி வாங்கி.. செருப்படி படுறதுலாம் சகஜமாகிப் போயிருக்கலாம்.. என்னாலலாம் முடியாது..!! நேத்து அவ ஏதோ பேட் மூட்ல இருந்தா.. அதான் பேசாம பேக் அடிச்சுட்டேன்.. வேணுன்னா இன்னைக்கு அவ வரட்டும்.. கண்டிப்பா போய் பேசுறேன்.. அவளை லவ் பண்ண வச்சு காட்டுறேன்..!!” அசோக் பொறுமையாக பதிலளித்தான்.

“அவதான..?? வருவா வருவா..!! நல்லா வாயை ஆ’ன்னு பொளந்துட்டு உக்காந்திரு..!!”

1 Comment

Add a Comment
  1. Varakkal thangal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *