எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 51

“ப்ளாக்னா என்ன அர்த்தம்..?? துக்கம்.. தடங்கல்… அமங்களம்..!! இன்னைக்கு பாரு.. வொயிட் டி-ஷர்ட்.. மங்களகரமா வந்திருக்கா.. நல்ல அறிகுறிடா.. போய் பேசு போ..!!”

“வெள்ளை.. மங்களகரமா..?? மஞ்சளைத்தான அப்படி சொல்வாங்க..??”

“ஓ..!! அப்போ வெள்ளைக்கு என்ன..?? ஆங்.. சாந்தம்.. சமாதானம்..!! அவ நல்ல மூட்ல இருக்கான்றதுக்கு இதைவிட வேற என்னடா ப்ரூஃப் வேணும்..?? கெளம்புடா.. டைம் வேஸ்ட் பண்ணாத..!!”

ஏதேதோ லாஜிக் எல்லாம் சொல்லி, நண்பர்கள் மூவரும் அசோக்கை ஏற்றிவிட, அவனோ இன்னும் தயக்கத்துடனே அமர்ந்திருந்தான். நேற்று பார்த்த அவளுடைய ஆவேசமும், அந்த ஒற்றைக்கால் செருப்பும், இன்னுமே அவனுடைய மூளையை தாக்கி இம்சை செய்தன. உடலிலும் மனதிலும் ஒரு படபடப்பை கிளறி விட்டிருந்தன. சில வினாடிகள் அவ்வாறு தடுமாறியவன், அப்புறம் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுந்தான்.

“மச்சீஈஈ.. எல்லாம் எனக்காக நல்லா வேண்டிக்கங்கடா..!!” சொல்லிவிட்டு அசோக் நகர முயல,

“ஏய் ஏய்.. இந்தாடா.. இதையும் எடுத்துட்டு போ..!!” என்று கிஷோர் பாஸ்தா ப்ளேட்டை அவன் கையில் திணித்தான்.

“டேய்… நே..நேத்து மாதிரி எதுவும் ஆயிடாதுல..??” அசோக் பரிதாபமாக கேட்க,

“ஐயே… தைரியமா போ மச்சி..!! சத்தியமா நேத்து மாதிரி நடக்க சான்சே இல்ல.. எல்லாம் நான் அப்போவே நல்லா பாத்துட்டேன்..!!” உறுதியான குரலில் சொன்னான் சாலமன்.

“ந..நல்லா பாத்துட்டியா..?? எதை..??” அசோக் குழப்பமாய் நெற்றி சுருக்கினான்.

“அவ காலை..!! இன்னைக்கு ஷூ போட்டுட்டு வந்திருக்கா மச்சி.. சத்தியமா நேத்து மாதிரி நடக்க சான்சே இல்ல..!!”

சாலமன் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சொல்ல, அசோக் அவனை எரித்து விடுவது போல முறைத்தான். கையிலிருந்த பாஸ்தாவை அப்படியே அவன் தலையில் கொட்டிவிடலாமா என்று யோசித்தான். அப்புறம் ‘மவனே.. உன்னை வந்து வச்சுக்குறேன்..!!’ என்று சன்னமான குரலில் அவனை எச்சரித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

தடதடத்த இதயத்துடனே நடந்து சென்று, அந்தப்பெண் அமர்ந்திருந்த டேபிளை நெருங்கினான். அருகே நிழலாடவும், அவள் தலையை நிமிர்த்தி இவனை ஏறிட்டாள். அவளுடைய திராட்சை விழிகளில், இப்போது தன் பிம்பம் விழுந்திருக்கிறது என்ற உணர்வே, அசோக்கின் மனதை சில்லிட்டுப்போக வைத்தது. அவன் இப்போது ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தியவாறே,

“ஹாய்..!!!!” என்று இளித்தான்.

அவள் இவனை ஒருவித சலனமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை முறைக்கிறாளோ என்று கூட அசோக்குக்கு தோன்றியது. புருவத்தை ஒருமாதிரி உயர்த்தி, ‘என்ன..??’ என்று அந்த புருவ அசைவாலேயே கேட்டாள்.

“அ..அது.. ஆக்சுவலா.. அ..அங்க எங்கயுமே உக்காரதுக்கு இடம் இல்லங்க.. இஃப் யூ டோன்ட் மைண்ட்.. இ..இங்க நான் உக்காந்துக்கலாமா..??”

1 Comment

  1. Varakkal thangal

Comments are closed.