எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 9

“ஒன்னு… நா..நான்.. நான் ரொம்ப ரொம்ப அன்பானவன்ங்க..!! ரெண்டு.. எ..என்னை கட்டிக்கப் போற பொண்ணை ரொம்ப பத்திரமா.. ரொம்ப பாதுகாப்பா பாத்துப்பேன்..!!”

“பாதுகாப்பா பாத்துப்பிங்களா..?? ஹ்ஹ.. அதுலாம் ஒரு பெரிய விஷயமாங்க..??” அவள் அசால்ட்டாக சொல்ல,

“என்னங்க இப்படி சொல்லிட்டிங்க..??” அசோக் வியப்பாக கேட்டான்.

“ஆமாம்..!! ஒரு கோல்கேட் பேஸ்ட் வாங்கி குடுத்தா மேட்டர் முடிஞ்சது.. அவங்களே பாதுகாப்பு வளையம்லாம் குடுப்பாங்களே.. ப்ராப்ளம் சால்வ்ட்..!!”

“என்னது..????” அசோக் முகத்தை ஒருமாதிரி அஷ்டகோணலாக சுளித்தான்.

“அதுசரி.. இதுலாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க..??”

“அ..அது.. வேற ஒன்னுல்ல.. நீ.. நீ..நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கள்ல.. அதனால..” என்று அவசரமாய் சொல்லிவிட்டவன், பிறகு “ஸாரி..” என்று திருட்டு முழி முழித்தான்.

“அடடா.. அதுக்கு நாந்தான தேங்க்ஸ் சொல்லணும்.. நீங்க ஏன் ஸாரி சொல்றீங்க..??”

“இ..இல்ல.. ஒருவேளை நீங்க வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தா..??” படபடப்பில் அசோக் உளறி கொட்ட ஆரம்பித்திருந்தான்.

“வாட்..?? நான் யாரை லவ் பண்றேன்..??”

“ஹையோ.. அதான் ஒருவேளைன்னு சொன்னேனே.. ஒரு சந்தேகந்தாங்க..!! அ..அப்படி யாராவது இருக்காங்களா..??” அசோக்கின் குரலில் ஒரு குறுகுறுப்பு.

“ஹாஹா.. இல்ல…!!” அவள் புன்னகையுடன் மறுக்க,

“வாவ்..!! தேட்ஸ் நைஸ்.. தேட்ஸ் ரியல்லி நைஸ் யு நோ..!!” அசோக் உற்சாகமானான்.

“அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு சந்தோஷப் படுறீங்க..??”

“எனக்கு அப்போவே தெரியுங்க.. நீங்க யாரையும் லவ் பண்ணிட்டு இருக்க மாட்டீங்கன்னு..!! இந்த சாலமன் நாயிதான் என்னை கன்ஃயூஸ் பண்ணிவிட்டுட்டான்..!!”

“என்ன கன்ஃயூஸ் பண்ணான்..??”

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. இத்தனை நாளா உங்களை யாரும் விட்டு வச்சிருக்க மாட்டாங்கன்னு சொல்லி.. ரொம்ப கன்ஃயூஸ் பண்ணிவிட்டுட்டான்..!!”

“ஓ..!! அதுசரி.. அது யாரு அந்த சாலமன் நாயி…??”

“ஹாஹா.. அது என் ஃப்ரண்டுங்க.. அதோ.. அங்க உக்காந்திருக்கான்.. அவன்கூட ரெண்டு பேர் உக்காந்திருக்குறாங்களே.. அவங்களும் என் ஃப்ரண்ட்ஸ்தான்..!!”

“ஓ..!!”

“ஆக்சுவலா அவங்கதான்.. உங்களை பாத்து செலக்ட் பண்ணி..” உளறிவிட்ட அசோக் உடனே நாக்கை கடித்துக் கொண்டான். வாயிலேயே பட் என்று தட்டிக் கொண்டான்.

“வாட்..??” அவளுடைய முகத்தில் எக்கச்சக்க குழப்பம்.

“ஐயோ.. கோவப்படாதிங்க.. நா..நான் அதுக்கு முன்னாடியே உங்களை பாத்துட்டேன்.. ப்ராமிஸ்..!!”

“நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு ஒன்னும் புரியல..!!” அவள் சலிப்பாக தலையசைத்து கொண்டாள்.

“இ..இல்லைங்க.. ஆ..ஆக்சுவலா நான் என்ன சொல்லவந்தேன்னா.. ம்ம்ம்ம்.. என்ன சொல்ல வந்தேன்..?? ம்ம்ம்ம்.. நான் உங்களை இங்க அடிக்கடி பாத்திருக்கேங்க.. அழகா இருக்கீங்கன்னு தோணும்.. நல்ல பொண்ணுன்னு தோணும்.. பேசிப்பாக்கலாம்னு தோணும்..!!”

“ஓ..!!”

“ஆ..ஆனா.. நீங்கதான் என்னை கவனிச்சிருக்கீங்களான்னு எனக்கு தெரியலை..!! நான் கூட இங்க அடிக்கடி… ஆங்… நேத்து நீங்க செருப்பை எடுத்து காட்டுனீங்கள்ல.. அது என் மூஞ்சிக்கு முன்னாடிதான்..!!”

ரொம்ப பெருமையாக சொல்லிமுடித்தான் அசோக். உளறலின் உச்சபட்சத்தை எட்டியவன், லூசுத்தனமாக பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை கூட உணரவில்லை. தன்னைப் பற்றி அவளுக்கு நினைவூட்டியாயிற்று என்று அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். அவளுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. தான் அவனை டேமேஜ் செய்ததை விட, அவன் தன்னைத்தானே இன்னும் அதிகமாய் டேமேஜ் செய்து கொள்கிறானே என்பதை நினைக்கையில், அவளுக்கு சிரிப்பு பீறிட்டு கிளம்பியது. முன்பை விட அதிகமாக சிரித்தாள்.. வாய் விட்டு.. கலகலவென..!!

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!”

அவள் சிரிக்கையில் மிகவும் அழகாக இருந்தாள். ஒரு குழந்தையின் குதுகலம் அவளுடைய முகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் தெரிந்தது. அவளுடைய முத்துப்பற்களின் ஜொலிஜொலிப்பும்.. ஆரஞ்சு அதரங்களின் மினுமினுப்பும்.. பளிங்கு கண்களின் பளபளப்பும்.. அருகில் இருந்து பார்த்த அசோக்கின் மனதுக்குள் அதகளம் செய்தன..!! அவள் சிரித்துக்கொண்டே இருந்தாள். தத்துபித்தென்று உளறிவிட்டோம் என்பதை தாமதமாக புரிந்து கொண்ட அசோக், இப்போது ஒரு அசட்டுப் புன்னகையுடன்..

“ஹலோ.. சிரிக்காதிங்க ப்ளீஸ்..!! நான் உங்கட்ட நெறைய விஷயம் சொல்லனும்னு நெனச்சேன்.. எல்லாம் இப்படி ஆர்டர் மிஸ் ஆகி.. அதது இஷ்டத்துக்கு வெளில வருது..!!” என்று பரிதாபமாக சொன்னான்.

1 Comment

Add a Comment
  1. Varakkal thangal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *