எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 37

“ஏண்டா… எ..என்ன நெஞ்சழுத்தம் உனக்கு.. எவ்வளவு தைரியம் இருந்தா.. என் ஆபீசுக்கே வந்து.. என்கிட்டயே.. என் பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லுவ..?? உ..உன்னை என்ன பண்றேன் பாரு.. என்ன பண்றேன் பாரு இப்போ..!!” என்று கறுவியவர், அசோக்கின் சட்டையை பிடித்த பிடியை விடாமல், இன்னொரு கையால் டேபிள் ஓரத்தில் இருந்த தனது செல்போனை எட்டி எடுத்தார்.

“ஸார்.. நீங்கதான ஸார் காதல் ஒரு அழகான விஷயம்னு சொன்னீங்க..?? இப்போ திடீர்னு டென்ஷன் ஆகுறீங்க..?? ப்ளீஸ் ஸார்.. எங்க காதலை பிரிச்சிடாதீங்க..!!”

அசோக் கிண்டலாக சொன்னதை கண்டுகொள்ளாத பரந்தாமன், கையிலெடுத்த செல்போனின் பட்டன்களை, பதற்றத்தில் நடுங்கிய விரல்களால் படபடவீன அழுத்தினார். கோபத்தில் வெடவெடத்த உதடுகளுடன் முணுமுணுத்தார்.

“எனக்கு தெரியும்.. எனக்கு முன்னாடியே தெரியும்.. அந்த திருட்டு சிறுக்கி என்னைக்காவது ஒருநாளு.. இந்த மாதிரி எவனையாவது இழுத்துட்டு வருவான்னு.. அவளை..”

அவர் அந்த மாதிரி முணுமுணுத்ததுந்தான் அவர் தன் மகளுக்கு கால் செய்கிறார் என்று அசோக் புரிந்து கொண்டான். உடனே அவர் கையிலிருந்த செல்போனை பிடுங்கி அவரை தடுத்தான்.

“ஸார் ஸார்.. இருங்க ஸார்.. அவசரப்படாதீங்க.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..!!”

“எதைடா பொறுமையா கேக்க சொல்ற.. நீயும் என் பொண்ணும் டாவடிச்ச கதையை.. பொறுமையா உக்காந்து கேட்டுட்டு இருக்க சொல்றியா..??”

“ஹையோ.. நான் சும்மா சொன்னேன் ஸார்.. எங்களுக்குள்ள எந்த லவ்வும் இல்ல.. உங்க பொண்ணை நான் பாத்தது கூட கெடயாது.. அவங்க பேர் கூட எனக்கு தெரியாது..!!”

அசோக் அவ்வாறு சொன்னதும், பரந்தாமன் பட்டென முகம் மாறினார். அவர் முகத்தில் கொப்பளித்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து, குழப்பம் நிரம்பியது.

“ஏ..ஏய்.. எதுக்குடா பொய் சொன்ன..??”

“மொதல்ல நீங்க உக்காருங்க ஸார்..!!”

அசோக் அவரை சேரில் அமர வைத்தான். அவருடைய உடல் இன்னும் அதிர்வில் இருந்து மீளாமல் நடுங்கிக் கொண்டிருந்தது. அசோக்கையே எரித்துவிடுவதுபோல் ஆத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

“டென்ஷன் ஆகாதீங்க ஸார்.. ரிலாக்ஸ்..!! இந்தாங்க.. இந்த தண்ணியை கொஞ்சம் குடிங்க..!!”

சற்றுன் அவர் தன் பக்கமாக நகர்த்தி வைத்த தண்ணீர் க்ளாஸை, இப்போது அசோக் அவர் பக்கமாக நகர்த்தி வைத்தான். அவரும் அதை எடுத்து மொத்த தண்ணீரையும் கடகடவென தன் தொண்டைக்குள் சரித்துக் கொண்டார். தண்ணீர் குடித்த பின்பும் அவரது கொதிப்பு அடங்கியது மாதிரி தெரியவில்லை. ‘தஸ்.. புஸ்..’ என்று பெரிது பெரிதாக மூச்சு விட்டார். மார்பு சரக் சரக்கென ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அசோக் அவனது நடிப்பை மேலும் கொஞ்ச நேரம் தொடர்ந்திருந்தால், மாரடைப்பில் போய் சேர்ந்திருப்பார் போல் தெரிந்தது. அந்த மாதிரி திணறல் மூச்சு விட்டுக்கொண்டே அசோக்கைப் பார்த்து கேட்டார்.

“சொ..சொல்லுடா.. ஏன் பொய் சொன்ன..??”

“ஒண்ணுல்ல ஸார்.. சும்மா.. ஒரு உண்மையை கன்ஃபார்ம் பண்ணிக்கலாமேன்னுதான்..!!”

“என்ன உண்மையை..??” அவர் குழப்பமாக கேட்க, இப்போது அசோக் புன்னகையுடன் சொன்னான்.

“உங்களுக்குலாம் கதைலயும், சினிமாலயும்தான் ‘காதல் அழகான விஷயம்’..!! இல்ல..?? அதே உங்க குடும்பத்துல நடந்தா.. அசிங்கம்..!! ஏத்துக்க மாட்டிங்க..!! ஆனா.. எவனோ லவ் பண்ணி, எப்படியோ நாசமா போகட்டும்னு.. படம் மட்டும் வரிசையா எடுத்து ரிலீஸ் பண்ணிடுவீங்க..!! காதலை வச்சு.. நல்லா காசு பாத்து.. அதை மட்டும் பேங்க்ல போட்டு வச்சுப்பிங்க.. ஆனா அந்த காதலை மட்டும் உங்க வீட்டுக்குள்ள விட மாட்டீங்க..!! அப்படித்தான ஸார்..?? சூப்பர் ஸார்.. உங்க கொள்கையை நெனச்சா எனக்கு அப்படியே புல்லரிக்குது..!!”

Updated: June 3, 2021 — 3:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *