எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 194

அவளை இதே ஃபுட் கோர்ட்டில் அசோக் ஓரிரு தடவைகள் பார்த்திருக்கிறான். எப்போதும் தனியாகத்தான் வருவாள். தனியாக வரிசையில் நின்று, பிடித்த உணவை வாங்கிக் கொள்வாள். தனியாக சென்று அமர்ந்து கொள்வாள். யாரிடமும் பேச மாட்டாள். தனியாகவே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பிறகு காணாமல் போவாள்.

அசோக் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் ஒருமுறை இவனை எதேச்சையாக திரும்பி பார்த்தாள். அவளுடைய பார்வையில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை. ஓரிரு விநாடிகள்தான். அப்புறம் வேறெங்கோ பார்வையை செலுத்தி வெறித்தாள். அசோக் அதன்பிறகும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சற்றுமுன் அவன் சொன்ன, ‘Perfect Stranger’ என்ற வார்த்தைகள், அவனது மூளையை அவசரமாய் குறுக்கிட்டன.

வடபழனியில் இருந்து வளசரவாக்கம் வருவதற்குள்ளாகவே அசோக் கண்ணயர்ந்திருந்தான். அவனுடைய தலை கார் சீட்டில் சாய்ந்து அண்ணாந்திருக்க, வாய் ‘ஆ’வென்று பிளந்திருந்தது. ஆல்கஹாலால் குழம்பிப் போயிருந்த அவனது மூளை, அன்று முழுதும் அவனை பாதித்த விஷயங்களை எல்லாம், கடுகளவும் லாஜிக் இல்லாமல் கண்களுக்குள் படமாக ஓட்டிக்கொண்டிருந்தது.

கொட்டும் மழையில்.. கோரமான பற்களுடனும்.. கொலைவெறி கொப்பளிக்கும் விழிகளுடனும்.. பரந்தாமன் ஷிவாவையும், ப்ரியாவையும்.. கோடாரியுடன் விரட்டினார்..!! ‘யாரைப்பாத்து ஆண்ட்டின்னு சொன்ன..? யாரைப்பாத்து சொன்ன..? இனிமே சொல்லுவியா..? சொல்லுவியா.. சொல்லுவியா..??’ என்று சாலமனின் ஆள் ‘குண்டு’ கேத்தரினா.. பற்களை நறநறவென கடித்தவாறு.. அசோக்கின் முகத்திலேயே பாக்ஸிங் பழகினாள்..!! ‘இவன் ஆளு ரொம்ம்ம்ப வயலண்டா இருக்காடா..’ என்று கிஷோர் யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான்..!!

இந்த லட்சணத்தில்.. இவர்கள் சரக்கடித்த பாரில்.. எய்ட்டி ஃபோர் இன்ச் எல்.ஈ.டி டிவியில் ஓடிய.. ஐ.பி.எல் மேட்சின் எஃபக்ட் வேறு.. அவனுடைய கனவில் தெரிந்தது..!! வான்கடே மைதானத்தின் மையத்தில்.. வானை முட்டிவிடுவது மாதிரி நின்றது.. ஒரு ராட்சத வடிவ ராயல் சேலன்ச் குவார்ட்டர் பாட்டில்..!! தந்தூரி அடுப்பில் சுடப்பட்டு கருகிப்போன லெக்பீஸ் ஒன்று, அந்த பாட்டில் மீது ஸ்டைலாக சாய்ந்திருந்தது..!! ஃபுட் கோர்ட்டில் பார்த்த அந்த ஸ்ட்ரேஞ்சர் அழகி (நம்ம ஹீரோயின்தான்).. சியர்லீடர் கெட்டப்பில் மஞ்சள் நிற கச்சையும், குட்டைப்பாவாடையும் அணிந்து கொண்டு.. கையில் சிவப்பு நிற பாம்பாம்களுடன்.. முகத்தை வேறு சோகமாக வைத்துக்கொண்டு.. ராட்சத ராயல் சேலன்ச் பாட்டிலை சுற்றி சுற்றி வந்து.. கிறிஸ் கெயிலுடன் கங்ணம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாள்..!! இதெல்லாம் பத்தாதென்று, எந்த சம்பந்தமுமே இல்லாமல்.. ஹர்பஜன் சிங் வேறு இடையில் புகுந்து.. ‘ஹே.. பல்லே பல்லே பல்லே..’ என்று ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியுடன் தவ்வித்தவ்வி குதித்துக் கொண்டிருந்தார்..!!

“மச்சி வீடு வந்துடுச்சுடா..!!”

Updated: June 3, 2021 — 3:03 am