எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 192

“ம்ம்.. எந்த மாதிரி அட்வர்டைஸ்மண்ட்ஸ்லாம் பண்றீங்க..??”

“மெயினா ஆட் ஃபில்ம்ஸ்தான் ஸார்.. மோஸ்ட்லி டிவி கமர்ஷியல்ஸ்..!! இப்போ கொஞ்ச நாளா இன்டர்நெட் அட்வர்டைசிங்லயும் கான்சன்ட்ரெட் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்..!!”

“எப்படி.. எல்லாம் டைரெக்ட் டீலிங்தானா..??” அவர் கேட்டுவிட்டு அசோக்கையே கூர்மையாக பார்க்க, இப்போது அசோக் சற்றே தடுமாற்றமாய் நெளிந்தான்.

“இ..இல்ல ஸார்.. பாலாஜி அட்வர்டைசிங்கோட டை-அப் வச்சிருக்கோம்.. அவங்கட்ட இருந்து ப்ராஜக்ட் எடுத்து பண்றோம்.. அவங்க ப்ரொடக்ஷனுக்கு அப்பப்போ எங்க டீமை யூஸ் பண்ணிப்பாங்க..!!”

“ஆங்.. அப்படி சொல்லுங்க..!! ம்ம்ம்.. பரவால.. நல்லா புளியங்கொம்பாதான் புடிச்சிருக்கீங்க..!! பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணி எவ்வளவு நாளாச்சு..??”

“நாலு வருஷம் ஆச்சு ஸார்..!!”

“இப்போ என்ன திடீர்னு பிரச்சனை..??”

“எ..என்ன பிரச்சனைனா..?? பு..புரியல ஸார் ..!!”

“இல்ல.. பிசினஸ்ல ஏதும் ப்ராப்ளமான்னு கேட்டேன்..??”

“ஐயோ.. அதுலாம் ஒன்னும் இல்ல ஸார்..!! பிசினஸ்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு.. ரொம்ப ஃபாஸ்ட் க்ரோத்னு சொல்ல முடியாட்டாலும்.. ஸ்டெடியா முன்னேறிட்டு இருக்கோம்..!!”

“அப்புறம் ஏன் சினி இண்டஸ்ட்ரிகுள்ள வர ஆசைப்படுறீங்க..??”

“அ..அது.. அது..”

“ம்ம்.. சொல்லுங்க தம்பி..!!”

“இ..இது.. இது எனக்கு ஒரு பேஷன் மாதிரி ஸார்.. இப்போ கொஞ்ச நாளாத்தான்.. ஒரு ஒன் இயராத்தான் இந்தமாதிரி பெரிய ஸ்க்ரீன் மேல எனக்கு ஆசை..!! மூவீஸ் டைரெக்ட் பண்ணனும்னு எனக்குள்ள ஒரு கனவு..!!”

“ஹாஹா.. கனவுதான..?? காண வேண்டியதுதான்..!! இப்போத்தான் ஆளாளுக்கு டைரெக்டர் ஆகணும்னு கனவு வந்துடுதே.. உங்களுக்கும் வந்ததுல ஒன்னும் தப்பு இல்ல.. ஹாஹா..!!”

சொல்லிவிட்டு அவர் சிரித்தார். அவர் சிரிப்பில் இருந்த கிண்டல் அசோக்கை சற்றே எரிச்சலுற செய்தது. ஆனாலும், அவர் புதுமுக இயக்குனர்களை வைத்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்திருக்கிற தயாரிப்பாளர் என்ற நினைவு அசோக்கின் மனதை குறுக்கிட, எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டான்.

“தம்பி தப்பா எடுத்துக்க கூடாது.. நான் ஏன் சொல்றேன்னா.. எப்போவுமே இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட கூடாது..!!” சொல்லிவிட்டு அவர் பல்லிளித்தார்.

Updated: June 3, 2021 — 3:03 am