எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 37

“இது எந்த பேக்ட்ராப்ல..?? நல்லா பளீர்னு வெயில் கொளுத்துற பாலைவனத்துலையா..??” இப்போது அவரது குரலில் நக்கல் மிதமிஞ்சி போயிருந்தது.

“இ..இல்ல ஸார்.. அது வேற மாதிரி தீம்..!!”

“அட போங்க தம்பி..!!” அவர் சலித்துக்கொண்டார்.

“ஸார்.. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. நான் ஸ்டோரியை முழுசா சொல்றேன்.. இந்த ஸ்டோரி கண்டிப்பா வொர்க்கவுட் ஆகும் ஸார்.. படம் பாக்க வர்றவங்கள எப்படிலாம் பயமுறுத்தலாம்னு.. நான் புது புது ஐடியாஸ் வச்சிருக்கேன் ஸார்.. மக்கள் அதெல்லாம் கண்டிப்பா ரசிப்பாங்க..!!”

“ஹாஹா.. மக்கள் இந்த மாதிரி கதைலாம் ரசிக்க மாட்டாங்க தம்பி.. நான் இருபத்திரண்டு வருஷமா இந்த ஃபீல்ட்ல இருக்கேன்.. மக்களோட ரசனையை பத்தி எனக்கு நல்லா தெரியும்..!! வேற ஏதாவது நல்ல ஸ்டோரி இருந்தா சொல்லுங்க..!!” அவர் பேசிய விதத்தில் அசோக் மிகவும் சோர்ந்து போனான்.

“ஓ..!! நல்ல ஸ்டோரினா.. எப்படி..??” என்று சுரத்தில்லாமல் கேட்டான்.

“ஏதாவது லவ் ஸ்டோரி தம்பி..!!”

அவ்வளவுதான்..!! அந்த ‘லவ்’ என்ற வார்த்தையை கேட்டதுமே அசோக்குக்கு ரத்த அழுத்தம் குபுக்கென எகிற ஆரம்பித்தது. அவன் முகத்தில் தெரிந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இப்போது சட்டென வடிந்து போனது. ஒற்றை விரலால் நெற்றியை தேய்த்தவாறே, எதிரே இருந்தவரை எரிச்சலாக பார்த்தான். அவ்வளவு நேரம் பரந்தாமனிடம் இருந்த ஒரு அலட்சிய மனோபாவம், இப்போது அசோக்கையும் தொற்றிக் கொண்டது. இப்போது சற்றே கிண்டலான குரலில் கேட்டான்.

“ஓ.. லவ் ஸ்டோரிதான், உங்க பாஷைல நல்ல ஸ்டோரியா..??”

“என்ன தம்பி தெரியாத மாதிரி கேக்குறீங்க.. தியாகராஜ பாகவதர் காலத்துல இருந்தே.. அதுதான எவர்க்ரீன் ஹிட் ஃபார்முலா.. அதைத்தான மக்கள் ரசிக்கிறாங்க..??”

“அப்படிலாம் ஒன்னும் இல்ல ஸார்.. ஸ்டோரியும், சொல்ற விதமும் நல்லா இருந்தா போதும்.. எந்த மாதிரி ஸ்டோரியா இருந்தாலும் மக்கள் ரசிப்பாங்க..!! இப்போ பிஸ்ஸானு ஒரு படம் வந்து பிச்சுக்கிட்டு ஓடுது.. பாத்திங்கல்ல..??”

“ஹாஹா.. நான் அப்படிலாம் புதுமுயற்சி பண்ணி ரிஸ்க் எடுக்க ரெடியா இல்ல தம்பி..!! என்னோட படங்கள் எப்போதும் மெல்லிய காதல் உணர்வுகளை சொல்ற படமாத்தான் இருக்கும்.. நான் ஏற்கனவே எடுத்தது ரெண்டும் லவ் ஸ்டோரிதான்.. இனிமே எடுக்க போறதும் லவ் ஸ்டோரிதான்..!! அலைபாயுதே, துள்ளுவதோ இளமை மாதிரி.. ஃப்ரெஷா, யூத்ஃபுல்லா ஒரு ஸ்டோரி இருந்தா சொல்லுங்க.. இப்போவே அக்ரீமன்ட் போட்டுக்கலாம்..!!”

“ஓ..!! பெத்தவங்களையும், டீச்சர்சையும் எப்படிலாம் ஏமாத்தலாம்னு கத்துக்குடுக்குற மாதிரி படம் எடுக்க சொல்றீங்க..?? அப்படியா..??”

“ஹாஹா.. என்ன தம்பி நீங்க.. அதெல்லாம் பாத்தா சினிமாவே எடுக்க முடியாது.. அப்படிப்பாத்தா.. நீங்க சொன்ன பேய்க்கதை மட்டும் என்ன ஒழுங்கா..?? பேயை நேர்ல பாத்திருக்கீங்களா நீங்க..??”

“இல்ல..!!”

“அப்புறம்.. அது மக்களுக்கு மூட நம்பிக்கையை வளக்குற மாதிரிதான..??”

“காதல்ன்ற பேர்ல ஆடியன்ஸ் அறியாமலே அவங்க மனசுல விஷத்தை கலக்குறதுக்கு.. கற்பனைன்ற பேர்ல நேர்மையா அவங்களை கொஞ்ச நேரம் பயமுறுத்துறது ஒன்னும் தப்பு இல்ல ஸார்..!!”

“அட.. காதல்னு அழகான ஒரு விஷயம் இருக்குறப்போ.. பேய் பூதம்னு எதுக்கு தம்பி படம் பாக்க வர்றவங்கள பயமுறுத்தனும்..?? நீங்க ஒன்னு பண்ணுங்க..”

“என்ன..??”

“கொஞ்ச நாள் டைம் எடுத்துக்கங்க.. ஒரு நல்ல லவ் ஸ்டோரி ரெடி பண்ணிட்டு வந்து என்னை பாருங்க.. சரியா.??”

Updated: June 3, 2021 — 3:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *