எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 195

“என்ன மச்சி.. நாட்டுல பொண்ணுகளுக்கா பஞ்சம்..?? இப்போ நாங்கல்லாம் லவ் பண்ணல.. எங்களுக்குலாம் பொண்ணுக கெடைக்கல..??”

என்று நாகுழற கேட்டான் கிஷோர். அவன் அவ்வாறு கேட்டதும், அசோக் இப்போது மீண்டும் நக்கலாக ஆரம்பித்தான்.

“யாரு.. நீங்க லவ் பண்ணின பொண்ணுகதான..?? ஒருத்தனை பிரண்டுன்னு நம்ம்ம்பி.. இன்னொருத்தன் அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனான்.. வீட்டுக்கு போனவன் என்ன பண்ணினான் தெரியுமா.. கூட்டிட்டு போன பிரண்டு தங்கச்சியையே.. உஷார் பண்ணிட்டான்..!!!!” – அசோக் அந்த ‘நம்பி’க்கு தனி அழுத்தம் கொடுத்து, அவ்வாறு சொன்னதும் கிஷோர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.

“ஒருத்தனை தம்பின்னு நம்ம்ம்பி.. அண்ணன் ஒருத்தன்.. தனக்கு பொண்ணு பாக்க தம்பிகிட்ட மேட்ரிமோனி ஐடி, பாஸ்வோர்ட் குடுத்தான்.. அதுல லட்டு மாதிரி ஒரு அலையன்ஸ் வந்ததும்.. வீட்டுக்கே தெரியாம தனியா லவட்டிட்டு வந்து.. இப்போ இவன் அந்த பொண்ணை லவ் பண்ணிட்டு இருக்குறான்..!!” – இப்போது வேணு தலையை தொங்கப்போடும் முறை.

“இன்னொருத்தன் ப்ளஸ் டூ படிக்கிறப்போவே பயங்கர கேடி, கிரிமினல் நாயி.. பையன் கணக்குல வீக்கா இருக்கானேன்னு.. ஒரு அப்பா பையன் மேல உள்ள அக்கறைல.. அவனை நம்ம்ம்பி.. கணக்கு ட்யூஷனுக்கு அனுப்பிச்சா.. பையன் கணக்கு டீச்சரையே கணக்கு பண்ணிட்டான்.. இவ்வளவுக்கும் அது அஞ்சு வயசு மூத்த ஆண்ட்டி..!!”

“ஒய்.. என் ஆளை ஆண்ட்டின்னு சொல்ற வேலைலாம் வச்சுக்காத அசோக்கு..!! அஞ்சு வயசுலாம் ஒன்னும் இல்ல.. மூணு வயசுதான் டிபரன்ஸ்..!!” என்று தாழ்ந்த குரலில் தன் மறுப்பை தெரிவித்தாலும், தலையை தொங்கப்போடவும் தவறவில்லை சாலமன்.

இப்போது கிஷோர் தன் தலையை நிமிர்த்தி அசோக்குக்கு பதில் சொன்னான்.

“மச்சி.. ‘All is fair in love and war’..!! காதல்ன்ற ஒரு விஷயமே.. நீ சொன்ன கம்ப்ளயின்ட் எல்லாத்தையும் சரி பண்ணிடும்டா..!!”

“போங்கடா.. என்னாலலாம் யாரோட நம்பிக்கையையும் கொன்னுட்டு.. அதுமேல காதல் செய்ய முடியாது..!!”

“அப்படிலாம் பாத்தா யாரையுமே லவ் பண்ண முடியாதுடா..!!”

“ஏன்.. பண்ணனும்னு நெனச்சா பண்ணலாம்..!!”

“சரி.. மத்தவங்கள விடு.. நீ எந்த மாதிரி பொண்ணை லவ் பண்ணுவ..??”

வேணு அந்த மாதிரி கேட்கவும் அசோக் சற்றே நிதானித்தான். சில வினாடிகள்..!! பிறகு.. எங்கோ சூனியத்தை வெறித்தவாறு மெல்லிய குரலில், ரசனையாக சொன்னான்.

“நான் லவ் பண்றதா இருந்தா.. யாராவது ஒரு ‘Perfect Stranger’-ஐத்தான் லவ் பண்ணுவேன்..!!”

“ம்ம்.. பாத்துடா.. கடைசில அவ ‘Perfect Psycho’-வா இருக்கப்போறா..!!”

வேணு கிண்டலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமனின் செல்போன் கிணுகிணுத்தது. யார் அழைப்பது என்று எடுத்து பார்த்தான் சாலமன். பார்த்ததுமே, ஏதோ தங்க வேட்டையில் வென்றவன் மாதிரி துள்ளிக் குதித்தான். அசோக்கைப் பார்த்து கத்தினான்.

“மச்சி.. நான் சொன்னேன்ல.. ப்யூச்சர்ல யூஸ் ஆகும்னு..?? இன்னைக்கே யூஸ் ஆகிடுச்சுடா.. எனக்கு மிஸ்ட் கால் குடுத்திருக்கா.. ஐயோ.. எனக்கு தலயும் புரியல.. காலும் புரியல..!! இருங்கடா.. இதோ வந்துர்றேன்..!!” என்றவாறு செல்போனை எடுத்துக்கொண்டு ஓடினான். அவனுடைய சந்தோஷத்தை பார்த்து கிஷோருக்கும் ஆசை வந்திருக்கும் போலிருக்கிறது.

“மச்சி.. நீங்க பேசிட்டு இருங்கடா.. நான் இதோ வந்துர்றேன்..!!” என்றவாறு பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டே கிளம்பினான். அவன் சென்ற சில வினாடிகளிலேயே,

“மச்சி.. நீ சாப்பிட்டுட்டு இருடா.. இதோ வந்துர்றேன்..!!”

சொல்லிக்கொண்டே வேணுவும் அசோக்கை தனியாக விட்டுவிட்டு, அங்கிருந்து அகன்றான். அசோக் எல்லோரும் செல்வதையே ஒருவித ஏக்கத்துடன் பார்த்தான். திடீரென தனியாகிப்போனதும், சாப்பிட்டுக்கொண்டிருந்த ப்ரைட் ரைசை அதற்கு மேலும் உண்ண மனமில்லாமல், ஓரமாக ஒதுக்கி வைத்தான்.

அசோக் எல்லாரிடமும் காதலைப்பற்றி சற்று ஏளனமாக பேசினாலும், ‘உங்களைப்பாத்து எனக்கு காதலிக்கிற ஆசையே போயிடுச்சு..’ என்று நண்பர்களிடம் சொல்லியிருந்தாலும், அவன் மனதில் எப்போதும் ஒரு மெலிதான ஏக்கம் உண்டு.. தனக்கென்று ஒரு பெண் இல்லையே என்ற ஏக்கம்..!! அதுவும்.. இந்த மாதிரி.. நண்பர்கள் எல்லோரும் தனித்து விட்டு செல்கையில்.. பேசுவதற்கு யாரும் இல்லாத சூழலில்.. அந்த ஏக்கம் சற்று அதிகமாகவே மேலெழும்..!!

இப்போதும் அப்படித்தான்..!! ஒரு மாதிரியான விரக்தி உணர்வு மனதுக்குள் மெல்ல பரவியது..!! அந்த ஃபுட் கோர்ட்டை ஆக்கிரமித்திருந்த மக்களை இலக்கில்லாமல் வெறித்தான்..!! அப்போதுதான் அசோக்கின் கண்ணில் அவள் பட்டாள்.

அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு சற்று தள்ளி.. தனியாக.. தட்டில் இருந்த உணவை உண்ண மறந்தவளாய்.. எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.. அமைதியே உருவாக..!! அழகாக.. அழகாக.. மிக மிக அழகாக இருந்தாள்..!! தேவதைக்கு ஜீன்சும், டி-ஷர்ட்டும் மாட்டி விட்ட மாதிரி.. தேன் நிலாவுக்கு பொட்டும், லிப்ஸ்டிக்கும் போட்டு விட்ட மாதிரி..!!

Updated: June 3, 2021 — 3:03 am