இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 125

புன்னகையுடன் கிஷோரை வரவேற்ற ராஜாராம் சிரித்த முகத்துடன் “வாங்க மாப்ள.. உக்காருங்க” என்றார்.

ராஜாராமிற்கு எதிரில் உட்கார்ந்த கிஷோர், அவன் உதட்டில் புன்னகையை வெளிப்படுத்தி விட்டு கலையை எப்படி அங்கிருந்து அழைத்து செல்வது என்று தயங்கியவாறு இருந்தான்.

ராஜாராம்: என்ன மாப்ள, நாலு நாள் வீட்டுக்கு வரவே இல்ல. தினமும் வீட்டுக்கு வந்துட்டு போகலாம் ல.. எங்க கிட்டலாம் மூஞ்சி கொடுத்தே பேச மாட்டிங்கிறா.. உங்கள பாக்கும் போது தான் அவ முகத்தில கொஞ்சமாச்சும் சிரிப்பை பாக்க முடியுது..

இந்த வீட்டின் நிம்மதியை குழைத்த அந்த ராகுலை பழி வாங்குவதை விட்டுவிட்டு மறுபடியும் அவனிடமே கலையின் உடலை கொடுக்க போகும் தன் இயலாமையை எண்ணி வருத்தமுற்றான்..

கிஷோர்: எனக்கும் வரணும் னு தான் மாமா விருப்பம் ஆனா ஆஃபீஸ் ல கொஞ்சம் வேலை அதிகமா இருந்துச்சு.. அதான் வர முடியல..

“நிச்சயதார்தத்துக்கு அய்யர் நாள் சொன்னாங்களா?” என்ற கேள்வியை கனிவாக கேட்டுவிட்டு ராஜாராமிற்கு அருகில் மஞ்சு அமர்ந்தாள்..

தன்னை கண்டாலே எலியை பார்க்கும் பூனை போல விரட்டும் மஞ்சுவா இது? என்று வியந்த கிஷோர் “இல்ல அத்தை, அம்மாவும் அப்பாவும் ஜாதகம் பொருத்தம் மட்டும் பாத்தாங்க.. எட்டு பொருத்தம் வந்துச்சு, முக்கியமான பொருத்தம் எல்லாமே இருக்கு.. ஆனா நிச்சயதார்தத்துக்கு நாள் குறிக்குறதுக்கு நீங்க ரெண்டு பேரும் கூட இருக்கணும் ன்னு சொல்றாங்க” என்றான்..

ராஜாராம்: சரி மாப்ள.. அப்போ நாளைக்கு வீட்டுக்கு வந்து பாக்குறோம், அப்படியே அய்யரையும் போய் பாத்துடலாம்.. அப்பா ட்ட சொல்லிடுங்க..

கிஷோர்: சரி மாமா

சில வினாடிகள் அமைதி நிலவியது.. கலையின் அறையை கிஷோர் நோட்டமிட்டான்..

ராஜாராம்: கலை குளிச்சுக்கிட்டு இருக்கிறா மாப்ள.. ம்ம்ம்.. இன்னைக்கு உங்களுக்கு வேலை நிறையா இருக்கா?

கிஷோர்: இல்ல மாமா.. லீவ் சொல்லிருக்கேன்..

ராஜாராம்: அப்போ கலையை கூட்டிகிட்டு வெளியே எங்கயாச்சும் போயிட்டு வாங்க.. நாலு நாளா ரூமை விட்டு கூட வெளிய வர மாட்டீங்கிறா..

பழம் நழுவி பாலில் விழுவது இது தானா என்று நினைத்த கிஷோர் பணிவுடன் “சரி மாமா” என்றான்..

அடுத்த பத்து நிமிடங்கள் கடந்தது, அந்த வேளையில் கிஷோருக்கு மஞ்சு அவளாக காஃபி கொடுத்த அதிசயமும் நிகழ்ந்தது.. கலையும் குளித்து முடித்துவிட்டு பச்சை சுடிதாரில் தேவதை போல வந்து நின்றாள்.. அவளை அழைத்துக்கொண்டு வண்டியை முறுக்கி வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்..

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.