இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 126

கிஷோர்: (நீண்ட பெருமூச்சு விட்டு) இல்ல அது.. நீ அன்னைக்கு

ராமின் கைபேசி க்கு மூக்கு வேர்த்தது போல சினுங்கியது..

ராம்: ண்ணே!! இங்க பாரு வனிதா போன் போட்டுட்டா.. எடுக்கலேனா என்னை தொலைச்சுருவா.. நாம அப்புறம் பேசுவோம்..

“அவகிட்ட அப்புறம் பேசு டா.. நான் ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்” என்று சொல்ல நினைத்தாலும் அதை சொல்ல முடியாமல், ஒரு வித இயலாமையோடு கிஷோர் தயக்கத்தோடு நகராமல் நின்றிருந்தான்.. அவன் மனதில் இருந்த சுமையை பற்றி ராமிடம் பேசுவதற்கு அவன் மனதளவில் முழுமையாக தயாராகவில்லை..

ராம்: (இன்னும் என்ன என்பது போல் கிஷோரை பார்த்து நினைத்து கெஞ்சலாக) ண்ணே!! கொஞ்சம் தனியா பேசணும்..

கிஷோர் அதே நீண்ட பெருமூச்சு விட்டு கதவை சாத்திவிட்டு வெளியே சென்றான்..

கட்டிலில் கலை தலைகாணியை கட்டிப்பிடித்த படி உதட்டில் புன்னகையுடனும் கண்களில் கிஷோருடன் சேர்ந்து வாழ போகும் வாழ்க்கை கனவுகளுடனும் நிம்மதியாக இருந்தாள்.. அவள் மனதில் ஒரு மூலையில் ராகுல் பற்றிய சிறிய அச்சம் இருந்தாலும் அதை ஓரம் கட்டிவிட்டு தனது வாழ்வை தன்னை முற்றிலுமாக புரிந்து கொண்ட கிஷோருடன் வாழ போகிறோம் என்ற இன்பத்தில் மூழ்கி இருந்தாள்..

அவள் கண்கள் அவ்வப்பொழுது மேசையில் இருந்த கைப்பேசியை நோட்டம் விட்டு கொண்டிருந்தது.. கிஷோரிடம் இருந்து அழைப்பு வரும் என்று வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்தாள்.. திடிரென்று கைப்பேசியின் திரை மின்ன, கட்டிலில் இருந்து துள்ளி எழுந்து பார்க்க எதோ ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது..

கலை: “ஹலோ!!”

மறுமுனை: என் வீட்டுக்கு விளக்கேத்தி வைக்க போற ராசாத்தி.. என்னம்மா பண்ணுற..

கலைக்கு முகம் மலர்ந்து வாயெல்லாம் பல்லாக “அத்தை.. சும்மா தான் இருக்கேன்.. அப்புறம் எங்க அப்பா”

புவனேஷ்வரி: ஆமா உங்கப்பா சரி ன்னு சொல்லிட்டாங்களாமே.. ரொம்ப சந்தோசம் ம்மா.. கிஷோர் வந்ததும் சொன்னான்.. சொன்னதுமே உங்க மாமா என்னை கையோட ஜோசியர் வீட்டுக்கு கூட்டி வந்துட்டாரு.. சரி ம்மா உங்க அம்மா இருந்தா கொடேன்..

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.