இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 79

கிஷோர் ஏதோ புரிந்தது போல மேற்கொண்டு மனதில் எதுவும் எண்ணங்களை எழுப்பாமல் அவன் நிற்கும் அதே பாதையை திரும்பி பார்த்தான்.. முற்களும் கற்களும் குழிகளுமாய் நீண்ட பாதையாய் இருந்தது.. அவனுடைய எண்ணங்கள் தான் அவன் கால்கள் என்று புரிந்து கொண்டான், தன் வாழ்வில் தான் கடந்து வந்த பாதையை கூர்ந்து கவனித்தான்..

சிறுவயதில் இருந்தே தேவைக்காக மட்டுமே தன்னை பயன்படுத்திக் கொண்ட நண்பன் என்ற தோல் போர்த்திய சந்தர்ப்பவாதிகள், தோழமையுடன் நம்பி ஆரம்பித்த தொழிலை அபகரித்து கொண்டே துரோகிகள்.. என்று அவன் வாழ்க்கையில் கடந்த வந்த பாதை முழுதும் ஏமாற்றம், துரோகம், வஞ்சகம் நிறைந்து இருந்தது.. தன் வாழ்க்கையில் சந்தித்த வலிகள் அனைத்துக்கும் மகுடம் வைப்பது போல இப்பொழுது ராகுல் இருக்கிறான்.. என் வாழ்வில் நான் செல்லும் பாதை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று நொந்து உள்ளுக்குள் புழுங்கினான்.. யாருக்கும் எந்த தீங்கும் இழைப்பதற்கு நினைத்து கூட பார்த்தது இல்லையே எனக்கு ஏன் இவ்வளவு மோசமான பாதை.. வஞ்சங்கள் நிறைந்த இந்த பாதையில் என்னுடைய வாழ்க்கையின் பயணத்தை தொடர்ந்தால் இலக்கின் பாதி தூரத்தை கடக்கும் முன்னரே வஞ்சத்தால் குத்தி கிழிக்கப்பட்டு மரணித்து விடுவேனே..

நான் செல்வதற்கு வேற பாதையே இல்லையா? என்று காது ஜவ்வு கிழியும் வண்ணம் ஓலமிட்டான்..

வாழ்க்கை முழுதும் கள்ளம் கபடம் அறிந்திராமல் தூய்மையாக இருந்த கிஷோரின் மனது ராகுலின் வஞ்சகத்தால் அடிவாங்கி, அவன் மனம் இவ்வளவு நாள் கடந்து வந்த பாதையில் இருந்து விலகி மாற்று பாதையை தேடியது..

தன்னுடைய பாதையை ஒட்டியது போலவே ஒரு புதிய பாதை பச்சை புற்களை கிழித்துக்கொண்டு தோன்றியது.. சிறிய கற்கள் கூட இல்லாமல் நடப்பதற்கே சுகமாக இருக்கும் ஆற்று மணல் போல மென்மையான பாதை..

கிஷோர் தாமதிக்காமல் அந்த பாதைக்கு தாவினான்.. தன் வாழ்க்கையின் புது அத்தியாயம் இங்கே இருந்து தொடங்க போகிறது என்பது போல உணர்ந்தான்.. முன்பு போலவே ‘நடந்து செல்’ என்று அவன் மூளை இட்ட கட்டளையை அவன் கால்கள் மறுத்தது.. இந்த புதிய பாதையில் இருந்து ராகுலிடம் மன்னிப்பு கேட்டால் அவன் மன்னித்து விடுவான் என்று நினைத்துக்கொண்டு, அவனிடம் மன்னிப்பு கேட்க எண்ணினான்.. ஆனாலும் அவன் கால்கள் அசையவில்லை..

மீண்டும் மீண்டும் ராகுலிடம் மன்னிப்பு கேட்க கால்கள் அசையாமல் அப்படியே இருந்தது.. தன்னுடைய எண்ணங்கள் தானே கால்கள் இப்பொழுது என்னாயிற்று என்று விளங்காமல் தவித்தான்..

அவன் நின்று கொண்டிருந்த பாதை அதனுடைய வேலையை கிஷோரின் மேல் காட்ட தொடங்கியது.. கிஷோரின் மனதை வேறு விதமாக சிந்திக்க தூண்டியது..

மன்னிப்பு கேட்டு கேட்டு நொந்து போன கிஷோர், தவறு இழைத்தவன் அவன் ஆனால் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணினான்.. அந்த எண்ணம் அவன் மனதில் தோன்றியதும், மறத்து போயிருந்த அவன் கால்களில் ரத்தம் பாய்ந்தது போலிருந்தது..

“மன்னிப்பு கேட்க வேண்டியது அவன்” என்று அடுத்த எண்ணம் உதிக்க கால் கட்டை விரல் துடித்தது..

“கலைக்கு அவன் கொடுக்குற தொல்லைக்கு அவனை பதில் சொல்ல வைக்கணும்” என்ற எண்ணத்தால் பத்து கால் விரல்களும் துடித்து ஆட்டம் போட்டது.. உடல் முழுதும் புது ரத்தம் பாய்ந்தது போன்று ஒரு அற்புத உணர்வு.. அந்த உணர்வை மேலும் பருக உடல் தூண்ட அவனுடைய எண்ணங்கள் தீவிரம் அடைந்தது..

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.