இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 89

ராம்: அண்ணே!! அவங்க அம்மா தான இது எல்லாத்துக்கும் காரணம்.. அவங்க இப்போ என்ன சொல்றாங்க..

கிஷோரின் மனம்: ஹையோ இவன் வேற கலையோட அம்மா பத்தி பேசும் போதெல்லாம் எனக்கு ஈர கொலையெல்லாம் நடுங்குது.. கலையோட அம்மா கூட தான் இவன் தப்பு பண்ணான் ன்னு அவனுக்கு தெரிஞ்சா??? இவன் தான் என்னோட தம்பி ன்னு கலையோட அம்மா க்கு தெரிஞ்சா?? ச்சா எல்லாத்தையும் விட இது தான் எனக்கு பெரிய பிரச்சனையா இருக்கு.. அன்னைக்கு அவன்கிட்ட பேசலாம் ன்னு ஆரம்பிக்கும் போது அம்மாவும் அப்பாவும் வந்து பேச முடியாம கெடுத்துட்டாங்க.. கடவுளே இதுல இருந்து என்னை எப்படியாச்சும் காப்பாத்திடு..

கிஷோர்: எனக்கு தெரில டா.. ரொம்ப அழுதாங்க ன்னு அவர் சொன்னாரு.. நான் போனப்போ ரூமுக்குள்ளயே தான் இருந்தாங்க.. நான் பாக்கல..

புவனேஷ்வரி: அப்படி அடிக்கிற அளவுக்கு என்னடா பிரச்னை.. அவளும் சொல்ல மாட்டிங்கிறா.. நீயும் சொல்ல மாட்டிங்கிற..

கிஷோர் திருதிருவென முழித்து விட்டு “ஒன்னும் இல்லமா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவி வீட்டின் வெளியே காற்று வாங்க வர.. வனிதாவின் ஸ்கூட்டி வந்து நின்றது..

கிஷோர்: (முகத்தில் புன்னகையுடன்) வா வனிதா..

ஆனால் அவளோ முகத்தில் வருத்தம் மட்டுமே காட்டியபடி “என்ன அத்தான்.. அக்கா வீட்டுல ஏதோ பிரச்சனையா? ராம் இப்போ தான் சொன்னான்.. அக்கா இருக்காங்களா?” என்றாள்..

கிஷோர்: உள்ள தூங்கிட்டு இருக்கா வனிதா.. நீ உள்ள போ.. எல்லாரும் உள்ள தான் இருக்காங்க..

தனக்குள் இருந்த ஆதங்கத்தை தன் குடும்பத்தின் முன்பு வெளிக்காட்டாமல் அடக்கி கொண்டிருந்த கிஷோர் அதற்கு மேலும் முடியாமல் வெளியே வந்தான்.. அழகாக சென்று கொண்டிருந்த கலையின் வாழ்வில் நான் செல்லாமல் இருந்திருந்தால் அவள் எப்பொழுதும் போல பொழுதை கழித்துக் கொண்டிருப்பாள்.. நான் சென்றதால் பாவம் அவளுக்கு எவ்வளவு இன்னல்கள் முதலில் ராகுலை இழுத்து விட்டேன், இப்பொழுது அவர்கள் குடும்பத்தில் பெரிய மனக்கசப்பு ஏற்பட காரணமாகி விட்டேன்.. என்றெல்லாம் அவன் யோசிக்க அவன் விழிகளில் நீர் உடைத்து வெளியே வர துடித்துக் கொண்டிருந்தது..

கண்களை மிக இறுக்கமாக மூடினான்.. உலகமே கும்மிருட்டாக மாறியது.. உள்ளுக்குள் எழும் மனக்குமுறலை அடக்க அடக்க அவன் சுவாசத்தின் வேகம் அதிகரித்து சீரற்ற நிலைக்கு மாறிக்கொண்டிருந்தது.. ராகுலின் மேல் கோபத்துடன் கண்களை திறந்தான்..

கண்களை திறந்து பார்த்தவன் தன் கண்களை நம்ப முடியாமல் அதிர்ந்து போனான்..

சில வினாடிகள் சுவாசிக்க மறந்தான்..

வீட்டின் வாசலில் நின்ற அவனுக்கு எதிரே இருக்க வேண்டிய வீட்டின் வெளிக்கதவு காணவில்லை.. சுற்றிலும் இருந்த வீடுகள், வெளிக்கதவை தாண்டியதும் இருக்கும் தார்சாலை, சாலையில் ஆங்காங்கே இருக்கும் மின் கம்பங்கள், அந்த நகரில் எங்கிருந்து பார்த்தாலும் கம்பீரமாய் காட்சி அளிக்கும் ஐந்தாறு தெருக்களுக்கு அப்பால் இருந்த கோயிலின் கோபுரம்.. என்று எதுவுமே காணவில்லை.. கண நேரத்தில் அனைத்தும் காற்றில் கரைந்தது போலிருந்தது..

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.