ஆமா கிழிஞ்சிருச்சி நான் கீழ குதிக்கும்போது பாத்துகிட்டே தான இருந்தீங்க …. ?
பேண்ட் மாட்டிருக்குன்னு சொல்லப்படாதா ?
நான் அதை கவனிக்கல …
உன் மேல தப்ப வச்சிக்கிட்டு ஏன்டா அவளை குறை சொல்ற ?
என் மேல என்ன தப்பு ?
அவ குதிக்கும் முன்ன பாக்குறதில்லையே …
நான் குதிக்கவே வேண்டாம்னு சொல்றேன் …
அப்புறம் எப்படி இறங்குவா ?
ஏறவே வேண்டாம்னு சொல்றேன் …
அப்புறம் எப்படி ஃபிரஷா டேஸ்ட் பண்ணுவா ?
அதான் அவன் கீழ பறிச்சி போட்டானே அதை சாப்பிட்டா பத்தாதா ?
நீ கேட்ச் பிடிச்சியா ? மண்ணுல போட்ட … மண்ணுல போட்டதை அவ சாப்பிடணுமா ?
பெரியம்மா உங்ககிட்ட பேச முடியாது ….
இங்க பாரு அவ மேல எந்த தப்பும் இல்லை சும்மா கடந்து குதிக்காத …
நான் அவளை குதிக்க வேண்டாம்னு சொல்றேன் …
சரி விடுங்க அத்தை … நான் எதுவும் பண்ணல நொண்டி மாதிரி சும்மா உக்காந்தே இருக்கேன் என்று என் மனைவி கண்ணீர் சிந்த …
ஐயோ கல்யாணம் பண்ணி ஒரு வாரத்துல இப்படி அழ வச்சிட்டேனே நான் தான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேனோ …
பேசிக்கொண்டே கோவிலுக்கும் வந்து சேர்ந்துட்டோம் ..
சரி இனிமே சண்டை வேண்டாம் பேசாம சமாதானப்படுத்திடுவோம் …
அப்ப தெரியாது … இவளை சமாதானப்படுத்துவதே பெரும் பாடாக இருக்க போகிறது என …
இல்லை வீணா இப்ப உனக்கு தான அசிங்கம் இப்படி பேண்ட் இல்லாம இருக்கியே …
ம் பொண்டாட்டி மானத்தை காப்பாத்த நீங்க உங்க பேண்ட் கழட்டி குடுங்களேன் …
ச்சை எனக்கு இது தோணவே இல்லை பாரு ஒரு நிமிஷம் இரு … நான் அவசரமா கழட்டி அவளிடம் குடுக்க …
இது எப்படி சார் உங்க தொப்பைக்கும் சேத்து அளவெடுத்து தப்பீங்களா ? எனக்கு வேண்டாம் சாமி …
சரி நீ கேக்க மாட்ட சாப்பிட்டு போயி நானே டிரஸ் வாங்கிட்டு வரேன் …
ம்ம் ….
சரி வாங்க சாமி கும்பிடுவோம் !!