யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 5 229

ரவி ” இல்ல..கா நானும் ரொம்ப வருஷமா பாத்துட்டு இருக்கேன் அம்மாக்கு என்ன புடிக்கவே இல்ல. . வெளியேதான் சும்மா பேசிட்டு இருக்காங்க ஆனா அப்பா மேல இருக்கற கோவத்துல என்ன உள்ளுக்குள்ள வெறுத்துகிட்டு இருக்காங்க. . ஏன்.. கா.. அப்பா ஜாடையில நான் பொறந்தது என்னோட தப்பா. .ச்சே எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா கா..” என அழுதுக்கொண்டே கூறினாள். .

ரவியின் இந்த சொற்கள் அம்மாவின் மனதில் ஏதோ பாதிப்பை ஏற்படுத்தியது. .. உண்மையும் அதுதானே. .!!

தேன்மொழி ” டேய். .. அதெல்லாம் கெடயாது. . நி மனச போட்டு கொழப்பிக்காதே.. வா நம்ம ரூம்க்கு போலாம் ” என ரவியை அவன் அறைக்கு அழைத்துச் சென்று மருந்து போட்டு கட்டு போட்டாள் . . பின்பு தன் மடியில் ரவியை தூங்கவைத்தாள். .* அவனுக்கும் உறக்கம் தேவைப்பட்டதால் உடனே உறங்கினான். .

மதியம் யாரும் சாப்பிடவே இல்லை.* அம்மா அவள் அறையில் கனத்த மனதுடனும், தேனும் ரவியும் நன்றாக* உறங்கி கொண்டும் இருந்தனர்.

மாலை மணி 5:35

தேனும் ரவியும் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருந்தனர்.அம்மா அனைவருக்கும் காப்பி போட்டு எடுத்து வந்து தேனிடம் நீட்டினாள் அவள் எடுத்துகொண்டாள், பின்பு ரவியிடம் காப்பியை நீட்டினாள் . ஆனால் ரவியோ அம்மாவை மதிக்காமல் டீவியையே பார்த்துக்கொண்டிருந்தான். ..

தேன்மொழி ” ரவி. .* காப்பி எடுத்துகோ டா.. அம்மா பாரு எவ்வளவு நேரம் நீட்டிகிட்டே இருக்காங்க ”

ரவி ” அக்கா. . உன் கையால விஷத்த கூட குடு குடிக்கிறேன்* ஆனா ….” என அம்மாவை முறைத்து விட்டு வீட்டைவிட்டு வெளியில் சென்று விட்டான். இருவருக்கும் பயங்கர அதிர்ச்சியாய் இருந்தது . இந்த அளவுக்கு ரவி கோவபட்டு யாரும் பார்த்ததில்லை. .

தேன் ” மா .. அவன எதுக்குமா சந்தேக பட்டு அடிச்ச ”

அம்மா* ” தெரில டி … ஒன் வீக்குல இருந்தே மூட் அவுட் ல இருந்தேனா அதானு நெனக்கிறேன் ” என வருந்தினாள்

மணி இரவு 9:00

ரவி இன்னும் வீட்டிற்கு வரவில்லை.. அம்மாவும் தேனும் அவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தனர். . சிறிது நேரம் கழித்து கையில் பிளாஸ்டிக் பையுடன் வந்தான்.

தேன்* ” எங்கடா போன. .. உன்னால யாரும் சாப்பிடவே இல்ல.. கை கழிவிட்டு சீக்கிரம் வா ”

ரவி ” சாரி கா.. ப்ரென்ஸ கூட இருந்தேனா நேரம் போனதே தெரியல. .”

அனைவரும் சாப்பிட அமர்ந்து கொண்டிருந்தார்கள்.. ரவி அந்த பையில் இருந்து இரண்டு பொட்டலங்களை எடுத்து வைத்தான். .

2 Comments

  1. Bro nice seekiram next episode but amma postion konjam korainga bro

  2. 4th part kanoom.
    Pls 4th part details

Comments are closed.