ஹூ ஆம் ஐ – Part 4 70

“ஹ்ம்ம்”

“நீ ஒன்னும் பீல் பண்ணாம திருப்பதி வா. நாளைக்கு கல்யாணம் முடிஞ்சா பார்ஸ்ட நைட் வேற. ஸ்ட்ரெஸ் அதிகமா இருந்தா எழும்பாது, புரியுதா மச்சி” என்று அவனுக்கே உரிய ஸ்டைலில் சொல்லவிட்டு போனை கட் செய்தான். அட்ரினலின் ரஷ் தரும் போதையை விரும்புபவன் கார்த்திக், அவன் எப்படியும் மேகாவை கூட்டி கொண்டு வந்துவிடுவான் என்பது எனக்கு தெரியும். மேகாவிற்கு தைரியமூட்டி போனை மட்டும் வைத்திருக்க சொல்லி விட்டு திருப்பதி கிளம்பினேன். விடியற்காலையில் திருப்பதி போய் ஒரு ரூம் எடுத்து விட்டு கார்த்திக்கின் போனிற்காக காத்து கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில் போனடித்தான்.

“டேய் மேகாவோட அப்பா அம்மா எல்லாம் கவர்ன்மென்ட் ஆஃபீஸர்னு சொன்னே”

“அவ சொன்னது தாண்டா சொன்னேன்”

“ரெண்டு பேருமே பெரிய இடம்டா, ஜெனரல் செகிரேட்டரி லெவல். மினிஸ்டர் எல்லாம் ரொம்ப பழக்கம் வேற. சுத்தி எக்க சக்க போலீஸ் அது இல்லாம பெரிய ரௌடி கும்பல் வேற. ”

“அய்யயோ. டேய் அப்போ மேகாவை கூப்பிட்டு வரலையா”

“ஹாஹாஹா என்னை நம்பி சொல்லிட்டே. எப்படியோ மூட்டையில கட்டி தூக்கி வந்துட்டேன். பாவம் அவ தான் கொஞ்சம் கஷ்ட பட்டுட்டா”

“உனக்கு தான் கார்த்தி இதுல ரொம்ப கஷ்டமே” மேகாவின் குரல் கேட்டது.

“மச்சி மேகா கிட்ட போன் கொடு”

“அடப்பாவி அருண் பிகரு வந்தவுடனே நண்பனை கழட்டி விட்டியே”

“ஹெலோ அருண் சொல்லுடா”

“ஐ லவ் யு. சீக்கிரம் வா மேகா உன்னை கட்டிபிடிக்கணும் போல இருக்க”

“டேய் அதெல்லாம் எல்லாம் கல்யாணத்தை முடிச்சிட்டு பண்ணிக்கலாம். என் போன் கார் ஸ்டெரியோ கூட கனெக்ட் ஆகி இருக்கு பார்த்துக்கோ”

“சீஸ்”

“சரி இவனுங்க பின்னாடியே பாலோ பண்ணி வராத மாதிரி கொஞ்சம் சுத்த விட்டுதான் வரணும். நீ கல்யாணத்துக்கு எல்லாம் ரெடி பண்ணி வை”

நான் கல்யாணத்துக்கு தேவையான அனைத்தயும் வாங்கி தயாராக வைத்துவிட்டு அம்மாவுக்கு போன் செய்தேன்.

“அம்மா”

“சொல்லுடா கண்ணு. படிப்பு எல்லாம் எப்படி போகுது”

“படிப்பு இல்லமா, ட்ரைனிங்”

“அதுதான். என்ன கண்ணு இந்நேரத்துல போன் பண்ணி இருக்கே”

“அம்மா நான் மேகான்னு என் கூட படிக்குற பொண்ண காதலிக்குறேன்னு சொல்லி இருந்தேன்ல அந்த பொண்ணுக்கு கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க அதனால அவள தூக்கிட்டு வந்து அவசர அவசரமா கல்யாணம் பண்ணப் போறேன். உங்க ஆசீர்வாதம் வேணும்”

“நீ மகராசனா இருக்கணும் கண்ணு”

“சரி மா நாம் எல்லா பிரச்சனையும் அடங்கின உடனே வீட்டுக்கு அவள கூட்டிட்டு வரேன்”

“சரி கண்ணு நீ பாத்து பத்திரமா இரு”.

என் நண்பன் கார்த்தி என்னுடைய மேகாவை பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து சேர்த்தான்.

மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
சஞ்சீவ சரத சதம்

மிஸ் மேகா ஆகாஷ் மிஸஸ் மேகா அருண் ஆனாள்.

“மாப்ள வாழ்த்துக்கள்டா” என்னை கட்டி அணைத்து கொண்டான்.

“டேய் நீ செஞ்ச ஹெல்ப்புக்கு எல்லாம் எப்படி திரும்ப செய்ய போறேன்னு தெரியல”

“இப்படி எல்லாம் பேசாதே மச்சி. நான் என்ன உன் கிட்ட எதிர்பார்த்தா செய்யுறேன்”

“ஹ்ம்ம் பேச மாட்டேன் மச்சி”