ஹூ ஆம் ஐ – Part 4 70

“உனக்கு ஞாபகம் இருக்கா என்னை ஸ்கூல்ல சஸ்பெண்ட் பண்ண வச்சனான்னு சொன்னேனே ஒருத்தி அவ தான். இப்போ ரெண்டு குட்டி போட்டு செமத்தியா இருக்கா. போட்டோ பாக்கறியா”

“ஐயோ அனிதாவை பார்த்ததே போதும் மச்சி”

“ஆமா உனக்கு தான் மேகா இருக்காளே. அவ எங்கடா”

“வரேன்னு சொன்னா ஆளை காணோம்” அவளுடைய செல்போனுக்கு டயல் செய்தேன்.

“ஹாய் கார்த்தி. ஹாய் டியர்” என்று கையசைத்து கொண்டே வந்தாள்.

“இப்போ தான் உனக்கு டயல் செஞ்சேன்”

சரி பேசிட்டு இருங்க நான் போய் தம்மடிச்சிட்டு வரேன் கார்த்திக் எங்களை தனிமையில் விட்டுவிட்டு போனான்.

“டேய் அருண். நீ என்னவோ கார்த்தி லவ்னா இப்படி தான் சொன்னான்னு சொன்னே. அவன் டீசண்டா போய்ட்டான் பாரு குட் பாய்”

“மேகா நான் கண்டிப்பா போகணுமா. எனக்கும் இப்போ தேடினா கூட லண்டன்ல வேலை கிடைக்கும். உன் கூடவே நானும் UK வரேன்”

“உதை வாங்க போரே. அதுதான் தான் உலகத்துல நம்பர் 1 சப்ட்வெர் கம்பெனி, அதோட ஹெட் ஆபிஸ்ல வேலை கிடைச்சி இருக்கு, இந்த ஆபர்ச்சுனிட்டி எல்லாம் மிஸ் பண்ண கூடாது. நான் வீட்டுல பேசி எல்லாம் ஓகே வாங்கி வைக்கிறேன் செல்லம். ஆறு மாசம் கழிச்சி ட்ரைனிங் முடிச்சி அமெரிக்கா போறப்போ மேகா அருணா உன் கூட வரேன்.”

“அப்போ உன்னோட ஸ்டடிஸ்”

“உனக்கு வேலை அமெரிக்கால கிடைச்சப்பவே சில அமெரிக்கன் யூனிவெர்சிட்டிலயும் ஆஃப்லை பண்ணிட்டேன். லேட்டடா ஆஃப்லை பண்ணத்தாலே ஒரு வேலை கிடைக்கலன்னா பிரேக் இயர் விட்டு நெக்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணிக்கலாம்”

“ப்ரோமிஸ்”

“ப்ரோமிஸ் செல்லம்” அங்கேயே கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

கடந்த காலம்

நான் ஹைதராபாத் சென்று என்னுடைய ட்ரைனிங்கில் மும்முரமாக ஆனேன். மேகாவின் போன் நம்பேரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ட்ரைனிங் காலம் என்பதால் உடனே விடுமுறை அளிக்க மறுத்தனர் அதனால் அவளை என்னால் நேரில் சென்று பார்க்க முடியவில்லை. இரண்டரை மாத காலம் அவள் நினைவாகவே ஓடியது. அவளை பார்க்காமல் அவளின் குரலை கேட்காமல் தனிமை என்னை வாட்டி வதைத்தது.

முன்பே சொல்லி வைத்ததில் ஒரு அடுத்த வாரம் மட்டும் ஒரு நாள் லீவு போட அனுமதி கொடுத்தனர். மேகாவின் வீட்டிற்கே சென்று பார்த்து பார்த்து வரலாம் என்று டிக்கெட் முன் பதிவு கொண்டு இருக்கும் போது எனக்கு ஒரு பழக்கமில்லாத நம்பரில் இருந்து கால் வந்தது.

“ஹலோ”

மறுமுனையில் அழுகுரல் மட்டுமே கேட்டது.

“ஹலோ மேகா மேகா பேசு மேகா ஏன் அழுவுறே” அவள் அழும் குரலை கேட்ட எனக்கு தானாகவே அழுகை வந்தது.

“அருண் ஐ லவ் யு” அழுகையினூடே சொன்னாள்.

“ஐ லவ் யு டூ, உன்னோட வாய்ஸ் கூட கேட்காம எவ்ளவோ கஷ்டமா இருந்திச்சு தெரியுமா.

“நீ ஹைதெராபாத் கிளம்பிய அடுத்த நாள் வீட்டுல நம்ம லவ் மேட்டர் சொன்னதில் இருந்து வீட்டிலே ஒரே ப்ரொப்லெம் அருண். என்னை ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணி வச்சிட்டு போன், இன்டர்நெட் எல்லாம் கட் பண்ணிட்டாங்க. இப்போ தான் என்னோட கசின் திருட்டுதனமாக அவளோட போனை கொடுத்தா, உடனே உனக்கு பண்ணினேன் அருண். உன்னோட ஞாபகம் மட்டும்தான் என்னை தற்கொலை பண்ணிக்காம இருக்க வச்சது” அழுதாள்.

“தற்கொலையா என்ன இது லூசு மாதிரி..”

“அருண் எனக்கு நாளைக்கு காலையில கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்காங்க. நீ என்னை எப்படியாச்சும் வந்து கூட்டிட்டு போடா”

“என்னது விடிய காலையிலயா.. பஸ்ல கிளம்பினா வர மதியம் ஆகிடும் அதனாலே பிளைட்ல தான் வரணும். நான் புக் பண்ணிட்டு 5 நிமிசத்துல கால் பண்ணுறேன். வெயிட் பண்ணு”

அன்று இரவு ஒரு பிளைட்டும் இல்லை. மணி இரவு 9.30 ஆகி இருந்தது. விடியற்காலைக்குள் சென்னை அடைவது முடியாத காரியம். உடனே கார்த்திக்கிற்கு போன் செய்தேன்.

“என்னடா மச்சி” என்றான்.

அவனிடம் நிலைமையை எடுத்து சொன்னேன்.

“நான் இருக்கிறப்போ என்ன பயம் மச்சி. நான் இப்பவே சென்னை கிளம்புறேன் மேகாவை தூக்கிட்டு திருப்பதி வந்துடறேன், நீயும் கிளம்பி திருப்பதி வந்திடு. அங்கேயே வச்சி கல்யாணத்தை முடிச்சிடலாம்”

“டேய் இதுல ஏதும் ப்ரோப்லேம் வராதே”

“நீயும் மேஜர் அவளும் மேஜர் வேறென்ன ப்ரோப்லேம் இருக்கு”

“இல்லை அவங்க அப்பா அம்மா”

“அவனுங்க என்ன மினிஸ்டரா என்ன”

“இல்லை கவர்மெண்ட் எம்பலோயீஸ்னு மேகா சொல்லி இருக்கா”

“நீ எதையும் பத்தி கவலை படாதே மச்சி நான் பார்த்துக்கறேன். அவளை போனை மட்டும் கையில வச்சிக்க சொல்லு”