எனக்கு அவளை கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் போல தோன்றினாலும், அது மீண்டும் ஒரு ஆரம்பமாக போய் விடக் கூடாது என்று என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றேன். ஆனால் லாவண்யாவின் விழிகளில் தெரிந்த ஏக்கம் என்னை தடுமாற வைத்துக் கொண்டிருந்தது.
இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க, லாவண்யா வாய் விட்டு கேட்டு விட்டாள்.
கடைசியா ஒரு டைம்….
என்ற படி அவள் முகத்தை என் முகம் நோக்கி நெருக்கமாக கொண்டு வர…
நான் அவளை அனுமதிப்பதா? மறுப்பதா என்று தடுமாற….
நல்லவேளையாக நீண்ட நேரமாகியும் நான் வராததால் என் கணவர் மீண்டும் ஹாலுக்குள் நுழைந்தார். அவரை கவனித்து விட்ட லாவண்யா டக்கென்று விலகிக் கொண்டாள்.
எங்கள் இருவர் நிலைமையை என் கணவர் கவனித்து விட்டாரா இல்லையா என்று புரியாமல் நான் அவரை பார்க்க, அவரோ எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் டைமாயிட்டிருக்கேன்னு வந்தேன். ஸாரி என்றார்.
நான் லாவண்யாவை சரி நீ கிளம்பு என்பது போல பார்க்க…..
என் போன் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.
சுனில்…
ஒரு வேகத்தில் அட்டெண்ட் செய்து டேய்… போனை எடுக்கலைன்னா விட வேண்டியதுதானே. மேனர்ஸ் இல்லை என்று கத்தி விட்டேன்.
போனை கட் பண்ணி விட்டு நான் என் கணவரையும் லாவண்யாவையும் வேதனையாக பார்க்க, என் கணவர் கொஞ்சம் நிதானமா ஹேண்டில் பண்ணு அமுதா என்றார்.
லாவண்யாவும் ஸாரி நான் யோசனை சொல்லலாமான்னு தெரியலை. பட்… பசங்க குணத்தை சரியா கணிக்க முடியாது. சம் டைம்ஸ் ப்ராப்ளம்ஸ் க்ரியேட் பண்ணிடுவாங்க. கொஞ்சம் பொறுமையா பேசி புரிய வைக்கிறது சேஃப்ன்னு தோணுது என்றாள்.
நான் உடைந்து அழ துவங்க, லாவண்யா என்னை நெருங்கி தோள் தொட்டு ஆறுதலாக அணைத்துக் கொண்டு, என்ன இப்படி வீக்கா இருக்கீங்க? உங்க கெத்து தான் உங்க அழகே. இவனெல்லாம் சின்ன பையன். நிதானமா ஹேண்டில் பண்ணி கழட்டி விடுங்க. மனசை தளர விடாதீங்க என்றாள்.
பதில் சொல்வதற்குள் மீண்டும் போன்.
சுனில்…
அந்த நாய் தான்…
நான் லாவண்யாவையும் என் கணவரையும் குழப்பமாக பார்க்க…
இருவரும் கண்களாலேயே அட்டெண்ட் பண்ணி பேசு என்றனர்.
நான் அட்டெண்ட் பண்ணி போனை காதில் வைக்க…
அந்த பக்கம் சுனில்…

Shh, habba.
Its dragging. Now what are you going to write? One last time to give sunil a chance. And then she will continue with all with the pernission of husband because of the pleasure that she gets.
Enough man…