என் போன் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே இருந்தது. ஸ்கூலில் இருந்து என் சக ஆசிரியைகள், ஆசிரியைகள் என்ற நிறைய பேர் அழைத்தார்கள். சிலருக்கு மட்டும் அட்டெண்ட் பண்ணி காய்ச்சல் என்று சொன்னேன். பார்க்க வருவதாக சொன்னவர்களை இல்லை இப்ப ஓரளவு சரியாகிடுச்சு. நாளைக்கு வந்திடுவேன் என்று சமாளித்தேன். பசங்க மூன்று பேரும் மாறி மாறி கால் பண்ணியிருந்தார்கள். கண்டிப்பாக வாட்ஸ் அப்பில் நிறைய மெசெஜ் வந்திருக்கும். நான் நெட் ஆன் பண்ணவே இல்லை. லாவண்யா நிறைய டைம் கால் பண்ணி இருந்தாள். அவளுடைய காலையும் எடுக்கவில்லை. இனி மீண்டும் வீட்டில், வேலை வெட்டி இல்லாமல், யாருடனும் பழகாமல் பேசாமல் தனிமையில் வாழ வேண்டும் என்பது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
நாளை பிரின்ஸிபல், கரஸ்பாண்ட்ண்ட் எல்லோரிடமும் என்ன காரணம் சொல்வது, எப்படி சமாளிப்பது என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
இந்த லாவண்யா வேறு என்னை பற்றி கண்டிப்பாக பிரின்ஸ்பல்லிடமும், கரஸிடமும் பேசியிருப்பாள். அவர்கள் என்னை அடைய நினைத்திருப்பார்கள். அதையும் எப்படியாவது சமாளிக்க வேண்டும்.
சட்டென்று வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள எத்தனை பேரை சமாளிக்க வேண்டியிருக்கிறது என்பது புரிய புரிய மலைப்பாக இருந்தது.
நான் என் கணவர் பேச்சை கேட்டு அவருடைய ஆசைகளுக்கு ஒத்துக் கொண்டு ஒரு வேசி போல நடந்துக் கொண்டது சரியா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது அதிலிருந்து வெளியில் வருவது மிகப் பெரிய போராட்டமாக இருக்கும் போல இருந்தது.
இரவு உணவை சீக்கிரமாகவே முடித்து விட்டு ஏழு மணி சுமாருக்கு ஹால் ஷோபாவில் நானும் என் கணவரும் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். டிவியில் சன் ம்யூசிக் ஓடிக் கொண்டிருந்தது. விவஸ்தை இல்லாமல் அந்த நேரத்திலேயே மிட் நைட் மசாலா டைப் பாட்டுகள் ஓடிக் கொண்டிருந்தன. நான் சலிப்போடு சேனலை மாத்துங்க என்றேன் என் கணவரிடம்.
பலவிதமான குழப்பமான மனநிலைகளால் எனக்கு இப்போது காமம் என்பது முக்கியமான விசயமாக தெரியவில்லை. இதிலிருந்து ப்ரசனை இல்லாமல் வெளியில் வந்து என் கணவருடன் நிம்மதியாக வாழ முடிந்தால் போதும் என்று நினைத்தேன்.
என் கணவர் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு சேனலை மாற்ற என் போன் மீண்டும் அடிக்க ஆரம்பித்தது. எடுத்துப் பார்த்தேன். லாவண்யா. கட் செய்தேன். இரண்டு நாட்களாக அவள் அழைத்த போதெல்லாம் அட்டெண்ட் செய்யாமல் தானாக கட் ஆவது போல செய்தேன்.
இன்று எரிச்சலில் இரண்டு ரிங்கில் நானாகவே கட் செய்தேன். அடுத்த செகண்ட் மீண்டும் போன் அடிக்க அட்டெண்ட் செய்து அவளை திட்டி விடலாமா என்று போனை எடுத்து பார்த்த போது அழைப்பில் இருந்தது சுனில்.
என் கணவரை பார்த்தேன். என்ன என்பது போல என்னை பார்த்தார். நான் போன் ஸ்க்ரீனை அவரிடம் காட்டினேன். அவர் அட்டெண்ட் பண்ணி பேசு என்றார். நான் வேண்டாம் என்பது போல தலையாட்டி மறுத்தேன். போன் அடித்து அடித்து ஓய்ந்து கட் ஆனது.
என் கணவர் என் தோளை ஆதரவாக வளைத்து அணைத்துக் கொண்டு ஆரம்பத்திலே கொஞ்சம் சிரமமா தான் இருக்கும். நீ பேசாம இந்த மூணு பசங்க, அந்த லாவண்யா இவங்க கிட்டே எல்லாம் ஓபனா பேசி புரிய வைச்சு கழட்டி விடுறதுதான் நல்லது. பார்க்காம, பேசாம, போன் அட்டெண்ட் பண்ணாம அவாய்ட் பண்ணிட்டே இருந்தா விட மாட்டாங்க. நீ ஓபனாவே சொல்லிடு, என் ஹஸ்பண்ட் சந்தேகப்படுறார். இனி இதெல்லாம் வேண்டாம்ன்னு திரும்ப திரும்ப சொன்னா கொஞ்சம் முரண்டு பிடிச்சாலும் மெல்ல மெல்ல புரிஞ்சுட்டு விலகிப்பாங்க என்று சொல்ல நான் அவரை பார்த்து புன்னகைத்தேன்.
இருவரும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்துக் கொள்ள, என் கணவர் மீண்டும் சன் ம்யூசிக் போட்டார். கமலஹாசன் நடித்த சிவப்பு ரோஜாக்கள் படத்தில் இருந்து நினைவோ ஒரு பறவை பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அதை பார்த்த என் கணவர் சிரித்தார்.
நான் அவரை கேள்விக்குறியாக பார்க்க அவர் இந்த பாட்டிலே சில செக்ஸ் விசயங்களை அழகா நுழைச்சிருப்பாங்க. எத்தனை பேர் அந்த வரிகளை அர்த்தம் புரிஞ்சு கேட்டிருப்பாங்கன்னு தெரியலை என்றார்.
நான் செக்ஸ் விசயம்ன்னா. புரியற மாதிரி சொல்லுங்க என்றேன்.
இப்ப கேளு… அந்த வரிகள் இப்ப தான் வரும் என்றார்.
நான் டிவி பக்கம் பார்வையை திருப்ப, என் கணவர் இந்த வரிகளை கவனமா கேளு என்றார். நானும் பாடல் வரிகளில் கவனம் செலுத்த…
கமலஹாசன்:
ரோஜாக்களில் பன்னீர்த் துளி வழிகின்றதேன்? அது என்ன தேன்?
ஸ்ரீதேவி:
அதுவல்லவோ பருகாத தேன். அதை இன்னும் நீ பருகாததேன்
கமலஹாசன்:
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
ஸ்ரீதேவி:
வந்தேன் தர வந்தேன்
விளக்கமெல்லாம் தேவைப்படாமல் அந்த வரிகளில் புதைத்திருந்த அர்த்தம் எனக்கு புரிய நான் என் கணவரை காதலாக பார்க்க, அவர் என் காதில் அந்த வரிகளை சொன்னார்.
அதற்காக தான் அலைபாய்கிறேன்…
என் மனம் மெல்ல ரொமான்ஸ் மூடுக்கு செல்ல…
என் கணவர் இந்த வரிகளை கவனமா கேளு என்றார். நானும் பாடல் வரிகளில் கவனம் செலுத்த…
கமலஹாசன்:
ரோஜாக்களில் பன்னீர்த் துளி வழிகின்றதேன்? அது என்ன தேன்?
