இந்த 3 மாதங்களில் நாங்கள் நிறையப் பேசினோம்.நாங்கள் ஒருவரை ஒருவர் போ வா என ஒருமையில் அழைத்துப் பேச ஆரம்பித்து விட்டோம். மம்தா ஆ·பீஸில் நிறைய வேலைக் கற்றுக் கொண்டாள். வாரத்தில் 2 நாட்களாவது சின்ன சின்ன விசயங்களுக்காக கோர்ட்டில் நேரில் ஆஜரானாள். இப்போது அவளுக்கு பயம் போய்விட்டது. நான் அவளை ஆ·பீஸ் வேலையில் கவணம் செலுத்தி நிறையக் கத்துக் கொள்ளச் சொன்னேன். ஒரு அட்வகேட்டின் வெற்றி கோர்ட்டில் வாதடுவதில் 30% சதவீதம் இருந்தால் பின்னால் அந்த வழக்குக்காக தயார் செய்வதில் 70% இருக்கிறது. மம்தாவும் அதைப் புரிந்துக் கொண்டு வழக்குகளுக்குத் தேவையான ரூலிங்ஸ் எடுப்பதிலும் பழைய கேஸ் லா தேடுவதிலும் நேரத்தை செலவுசெய்து அதில் தன் திறமையை வளர்த்துக் கொண்டாள்.
அன்று காந்தி ஜெயந்தி ஆ·பீஸ் விடுமுறை.. மதியம் டி.டி.கே ரோடில் உள்ள காபூல் ரெஸ்டாரென்ட்டில் சாப்பிட்டோம். நான் அவளிடம் பக்கத்தில் நாரதகான சபாவில் உன்னிக் கிருக்ஷ்ணன் கச்சேரி இருக்கிறது போகலாமா எனக் கேட்டேன்.. அவள் சம்மதிக்கவே இருவரும் நாரதகான சபா சென்று டிக்கெட் வாங்கி உள்ளே சென்றோம். கச்சேரி ஆரம்பிக்க 1/2 மணி நேரம் இருந்தது. அப்போதுதான் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தனர். அரங்கம் காலியாக இருந்தது. நான், ” மம்தா வர சணிக்கிழமை வானியம்பாடி பக்கத்தில் ஒரு ஆக்சிடன்ட் கேஸ்சுக்காக ஸ்பாட் ஸ்டடி பன்னப் போகிறேன் நீயும் வருகிறாயா.. ஒரு மணி நேர வேலை பின் அங்கிருந்து பக்கத்தில் ஏலகிரி போய்விட்டு நைட் திரும்பிவிடலாம்” என்றேன். அதற்கு அவளிடமிருந்து பதில் உடனடி பதில் வரவில்லை.. ” என்ன மம்தா” என்றதும்.. “ஸாரி அர்ஜூன்.. வெளியூருக்கெல்லாம் உங்களோடு என்னால் வர முடியாது.. இப்பவே என் அப்பாவிற்கு துரோகம் செய்கிறேனோ என்ற ·பீலிங் எனக்கு அதிகமாக இருக்கு.. நான் இதுவரை அவரிடம் எதையுமே மறைத்தச்தில்லை.. ஆனால் நாம் லவ் பன்னுவதை 3 மாசமா மறைத்திருக்கிறேன். நான் ரொம்ப கில்டியா ·பீல் பன்றேன்” என்றாள்.
நான், “என்ன மம்தா பேசுகிறாய்.. நான் என்ன உன்னைக் கெட்ட வழியில் நடத்துகிறேனா.. இவ்வளவு நாளில் உன்னிடம் ஏதாவது தவராக நடக்க முயன்றிருக்கேனா.. உன் ·பீலிங்ஸ்க்கு எவ்வளவு மரியாதைத் தரேன்.. அது என்ன வெளியூர் என்றால் வர மாட்டாய்.. அவ்வளவுதான் என் மீது நீ வச்சிருக்கும் நம்பிக்கையா” எனக் கேட்டேன். உடனே என் மேல்-கையை (Upper arms) தன் இருக் கைகளால் பிடித்துக் கொண்டு “ஐ யம் சாரி.. சாரி. மன்னிச்சிக்க.. ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்க உன் மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை எனக்கு என் மேல நம்பிக்கை இல்லை.. நீ எனக்காக இவ்வளவு ஜென்டிலா பிகேவ் பன்னும்போது நான் ரொம்ப கில்டியா ·பீல் பன்றேன்.. தேவையில்லாமல் உன்னை காயப்போடுறேன்னு கவலையா இருக்கு. அதே நேரம் மத்தக் காதலர்கள் போல நெருக்கமா இருக்க என் மனதில் பயமா இருக்கு..” என்று சொல்லி என் தோளில் முகத்தை சாய்த்துக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.. அன்றுதான் முதல் முதல் நாங்கள் தொட்டுக் கொண்டது.. நான் என் வலதுக் கையை மம்தாவின் முதுகைச் சுற்றி அவளது வலது தோளில் வைத்து ஆறுதலாக லேசாக அழுத்தி, ” மம்தா.. இப்ப என்ன சொல்லிட்டேன் எதுக்கு அழுகிறாய்.. ப்ளீஸ் கண்ணைத் துடைச்சுக்க” என்றேன்.
“இல்ல அர்ஜூன் நான் இன்னும் ரொம்ப அழனும் என்னைக் கண்ட்ரோல் செய்யாதே நான் உன் தோளில் சாய்ஞ்சுக்கிட்டு அழறேன்.. எனக்குப் போதும் எங்கிற வரையில் அழறேன்.. அழுதால்தான் என் மனம் ஆறுதல் அடையும்” என்று சொல்லி இன்னும் பிடியை அழுத்தமாக்கி சாய்ந்துக் கொண்டாள். அன்று கச்சேரி முடியும் வரை என்னை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். முடியும் தருவாயில் சற்று முன்புறம் நகர்ந்து என் நெஞ்சில் முத்தமிட்டாள். என் காதுக்கருகே வந்து ” அர்ஜூன் சாட்டர்டே நாம ஸ்பாட் ஸ்டடி பன்னப் போகலாம்.. நான் வரேன்” என்றாள்.
” இல்லை மம்தா நான் இந்த வாரம் நம்ம பேரன்ட்ஸ் கிட்டப் பேசி நம்ம காதலுக்கு சம்மதம் வாங்குகிறேன்.. அதுக்கப்புறம் நீ எந்த மனப்போராட்டமும் இல்லாமல் என்னிடம் பழகலாம். நான் கல்யானத்துக்குக் கூட ரெடி. என்ன… என் கல்யானப் பரிசா என் அப்பாவிற்கு ரிட்டயர்மென்ட் கொடுத்துவிட்டு அவர் ஆ·பீஸ நான் நடத்தலாம் என்று இருக்கிறேன்.. அதுக்கு இன்னும் 1 வருடமாவது அனுபவம் வேனும்.. இப்போதைக்கு நம்ம காதலுக்கு பர்மிசன் வாங்கி விடுகிறேன்” என்றேன். என் பதிலில் ரொம்பவும் நெகிழ்ந்துப் போன மம்தா என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்.
அந்த வாரம் சனிக்கிழமை இரவு என் தாய் தந்தையரிடம் என் காதலைத் தெரிவித்தேன். அன் அப்பாவிற்கு அவர் நன்பரின் மகள் என்றதும் மிக சந்தோசம். மறு நாள் காலை அப்பாவின் நன்பரான என் சீ·ப் ஐக் கூட்டிக் கொண்டு மம்தாவின் வீட்டிற்கு சென்றார். அவள் அப்பாவும் இதற்கு சம்மதித்தார். தன் பெண் நல்லத் துனையைத் தேர்ந்தெடுத்திருப்பதாகப் பாராட்டினார். நான் கல்யானத்தை இன்னும் ஒரு வருடம் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்றதை 3 பேருமே மறுத்தனர். பின் மம்தாவும் வற்புருத்தியதால் ஒரு வழியாக சம்மதித்தனர். எங்கள் சீ·ப் ஊர் கண் ஒரு மாதிரி இருக்காது அதனால் நிச்சயதார்த்தம் செய்துவிடலாம் என்றார்.