என் மம்முக் குட்டிக் கண்ணிலிருந்து தண்ணி 17

அன்று அவளை வீட்டில் விடும் போது காரிலிருந்து இறங்கியவள் வீட்டில் அவள் அப்பா இருப்பதைப் பார்த்ததும் என்னை உள்ளே வரச் சொல்லி அவள் அப்பாவிடம் அறிமுகப் படுத்தினாள். அன்று கோர்ட்டில் நான் உதவியதை அவள் அப்பாவிடம் சொல்லி மீண்டும் தன் நன்றியைத் தெரிவித்தாள். நான் அவள் அப்பாவிடம் ” சார் நீங்க உங்கப் பெண்ணை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள்.. ஒரு சின்ன உதவிக்கு இதோட 20 முறை நன்றி சொல்லிட்டாங்க.. ஆனால் இவ்வளவு சா·ப்ட் கேரக்டர் வச்சுக்கிட்டு க்ரிமினல் லாயரா வர முடியுமான்னு சந்தேகமா இருக்கு. பேசாம அவங்களுக்கு ஏதாவது கார்ப்பரேட் லா வில் பய்ற்சிக் கொடுத்து லீகல் அட்வைசரா வேலைக்கு அனுப்பலாம்” என்றேன். அவள் அப்பா அதற்கு ” நோ நோ இது என் அப்பாவின் கனவு.. அவர் அந்தக் காலத்தில் பெரிய கிர்மினல் லாயர் அவரிடம் ஜுனியரா இருந்தவர் தான் உங்கள் சீ·ப்.. என்னவோ எனக்கு லாவில் ஆர்வம் வரவில்லை அதனால் என் அப்பா உயிருடன் இருந்தப்போது மம்தாவை வக்கீலாக்கனும்னு ஆசைப் பட்டார். அவர் ஆசைக்காகத்தான் அவளும் க்ரிமினல் ப்ராக்டீஸ் செய்கிறாள்” என்றார். பின் நான் என் அப்பாவைப் பற்றி சொன்னதும் என் அப்பாவும் அவரும் பால்ய சினேகிதர்கள் என்றுத் தெரிவித்தார். என் அப்பாவைக் கேட்டதாகச் சொன்னார்.

அங்கிருந்து கிளம்பும் போது மம்தா கார் வரை வந்து மீண்டும் “தேங்க்ஸ் அர்ஜுன்” என்றாள். “ஐயோ இது 21 ஆவது டைம் தேங்க்ஸ் சொல்றீங்க” என்றேன். அதற்கு அவள் “இந்த தேங்க்ஸ் கலையில் நீங்க செஞ்ச உதவிக்கு இல்லை.. எனக்காக நீங்க குடிக்காம வந்ததுக்கு.. நீங்க மட்டும் குடிச்சிருந்தா நான் ஆட்டோவில் தான் வந்திருப்பேன்.. அல்லது பயந்துக்கிட்டு தெரு முனையில் இறங்கியிருப்பேன்..இப்ப என் அப்பாவிற்கும் அறிமுகப் படுத்தியாயிற்று.. நீங்கள் அவர் ·ப்ரன்ட்டோட பையன் என்றதும் சந்தோசமாகவும் இருக்கு” என்றாள்..

அவளிடம் விடைப் பெற்று வீட்டிற்கு வந்து குளித்து விட்டு படுத்ததும் முதல் முதலாக மம்தாவின் நினைப்பு எனக்குள் வந்தது.. மனது அவளைப் பற்றி நினப்பதில் சந்தோசப் பட்டது. மம்தா போல ஒரு பெண்ணை மனைவியா அடைஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும் என நினைத்தேன்.. பின் ச்..சே என்ன இது உடன் வேலை செய்யும் பெண் பற்றி இப்படி நினைக்கலாமா என என்னைக் கடிந்துக் கொண்டேன். இதில் என்ன தப்பு.. காதல் தப்பில்லையெனில் அந்தக் காதல் யார் மேல் வேனும்னாலும் வரலாமே.. ஒரு நொடியில் டக்கென்றுத் தோன்றுவதுதானேக் காதல்.. இது சரியாத் தவரா.. இவரைக் காதலித்தால் பின்னால சுகமா இருக்கலாமா.. இவன் என்ன ஜாதி.. எவ்வளவு சம்பாதிக்கிறான் என்றெல்லாம் பார்த்தால் பின் அது எப்படி காதல் ஆகும்.. அது கணக்குப் பார்த்து வரும் வியாபாரம் ஆகிவிடும் என நினத்தேன்.

மறுநாள் சனிக்கிழமை.. காலை10.30க்குத் தான் எல்லோரும் ஆ·பீஸ் வருவார்கள்.சனிக்கிழமை 2 மணி வரைதான் ஆ·பீஸ். அன்று எல்லோரும் கேஸ¤வல் ட்ரெஸ் அணியும் நாள். நான் 10 மணிக்கெல்லாம் வெள்ளையில் டீ சர்ட்ம் ஒரு கருப்பு ஜீன்ஸ¤ம் போட்டு ஆ·பீஸ் சென்றேன். இன்று எப்படியும் மம்தாவிடம் காதலை சொல்லிவிடுவது என்று இருந்தேன். 10.15 க்கு மம்தா வந்தாள்.. என்ன ஆச்சர்யம் என்று அவளும் வெள்ளை சர்ட் கருப்பு ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அதைப் பார்த்ததும் எனக்கு சந்தோசம் தாங்க வில்லை .. அவளிடம் சென்று மதியம் லன்ச்க்கு ஹோட்டல் போகலாமா என்றேன். அவள் முகத்தில் சந்தோசம் தெரிந்தமாதிரி தோன்றியது. உடனே ஒத்துக் கொண்டாள். மதியம் பார்க் ¦க்ஷரட்டான் சென்றோம்.

ஹோட்டலில் ஒரு ஓரமாக இருந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன். அமர்ந்ததும் அங்கு வந்த பேரரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு மம்தா பக்கம் திரும்பினேன். “மம்தா நான் உங்களிடம் ஒன்று சொல்லப் போகிறேன்.. அதைக் கேட்டு நீங்க என்னைத் தப்பா நினைக்க வேண்டாம்.. சரி விசயத்துக்கு வருகிறேன்.. நேற்று உங்கள் வீட்டிற்கு வந்து சென்றதும் எனக்குத் தூக்கமே வரவில்லை.. உங்களைப் பற்றிய நினைவாகவே இருந்தது. நைட் ரொம்ப நேரம் கழித்து நான் உங்களைக் காதலிப்பதாக உணர்ந்தேன். முதலில் இது தப்பு எனத் தோன்றியது.. ஆணால் யோசித்துப் பார்த்தப் போது என் காதலை தெரிவிக்காமலே சாக அடிக்க மனம் வரவில்லை.. அதுதான் உங்களிடம் ப்ரபோஸ் பன்னுவோம் நீங்க சம்திச்சால் தொடர்வோம் இல்லாவிடில் காதலை மறந்துவிட்டு நன்பர்களாக இருப்போம் என முடிவு செய்தேன்.. இதை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் உங்கள் இக்ஷ்டம்.. ஆனால் எனக்குப் பதில் மட்டும் தேவை” என்றேன்.

ஹோட்டலில் ஒரு ஓரமாக இருந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன். அமர்ந்ததும் அங்கு வந்த பேரரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு மம்தா பக்கம் திரும்பினேன். “மம்தா நான் உங்களிடம் ஒன்று சொல்லப் போகிறேன்.. அதைக் கேட்டு நீங்க என்னைத் தப்பா நினைக்க வேண்டாம்.. சரி விசயத்துக்கு வருகிறேன்.. நேற்று உங்கள் வீட்டிற்கு வந்து சென்றதும் எனக்குத் தூக்கமே வரவில்லை.. உங்களைப் பற்றிய நினைவாகவே இருந்தது.

நைட் ரொம்ப நேரம் கழித்து நான் உங்களைக் காதலிப்பதாக உணர்ந்தேன். முதலில் இது தப்பு எனத் தோன்றியது.. ஆணால் யோசித்துப் பார்த்தப் போது என் காதலை தெரிவிக்காமலே சாக அடிக்க மனம் வரவில்லை.. அதுதான் உங்களிடம் ப்ரபோஸ் பன்னுவோம் நீங்க சம்திச்சால் தொடர்வோம் இல்லாவிடில் காதலை மறந்துவிட்டு நன்பர்களாக இருப்போம் என முடிவு செய்தேன்.. இதை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் உங்கள் இக்ஷ்டம்.. ஆனால் எனக்குப் பதில் மட்டும் தேவை” என்றேன்.

மம்தா என்னை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.. ” என்ன மம்தா அப்படிப் பார்க்கிறீர்கள்… இதில் தப்பு எதுவும் இல்லையே.. காதல் என்பது இயற்கையான உணர்வு.. யாருக்கு வேண்டுமென்றாலும் யார் மீது வேண்டலும் வரலாம்.. அதை ஏற்பதும் மறுப்பதும் அடுத்தவரின் உரிமை.. உங்களுக்கு வேண்டாம் எனத் தோணினால் நீங்கள் சொல்லிவிடலாம்.. அதற்கானக் காரணம்கூட நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றேன்.

அதற்கு மம்தா, “அர்ஜுன்.. நீங்க என்னை ஹோட்டலுக்கு அழைத்ததும் உடனே சரியென்றேன் ஆனால் இதை நான் உங்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை.. என் மீது உங்களுக்கு காதல் இருக்கும் என நான் சுத்தமாக எதிர் பார்க்கலை உங்களை காலேஜிலேயே எனக்கு நல்லாத் தெரியும்.. எந்தப் பெண்ணுடனும் வழிந்ததில்லை.. நிச்சயமாக ஒரு ஸ்ட்ரெயிட் ·பார்வேர்ட் மேன் எப்படி இருக்கனுமோ அதுப் போல தான் இருந்தீர்கள்.. நேற்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள் .. என்னுடன் கூடவே இருந்து உதவினீர்கள்.. இதெல்லாம் உங்கள் இயல்பு. ஆனால் நேற்று எங்கள் வீட்டிற்கு வந்துப் போனதிலிருந்து எனக்கும் உங்கள் நினைவாகவே இருந்தது.நானும் என்னுள் உங்களைக் காதலிப்பதை உணர்ந்தேன். அதனால் நானும் இன்று என் காதலை ப்ரப்போஸ் செய்வதாக இருந்தேன். நீங்கள் லன்ச்சுக்கு அழைத்ததும் சந்தோசமாக இருந்தது. எப்படியும் இன்று சொல்லி விடுவது என இருந்தேன்.. ஆனால் எனக்கு முன்னால் நீங்க இப்படி சொன்னதும் எனக்கு நம்பவே முடியவில்லை.. நான் ரொம்ப லக்கி” என்றாள்.