இவள்…எப்படி…கள்ளக்காதலில்… 76

சில நாட்களில் சரவணன் என்ற என் பெயர் எனக்கு மறந்து போனது. “பெரியகடக்காரர் ” என்ற பேர் நிலைத்தது..டவுனில் இருக்கும் என் இரண்டடுக்கு மாடி ஜவுளிக்கடை எனக்கு இன்னும் மரியாதையை கூட்டியது… மீரா “பெரியக்கடகாரம்மா” ஆகினாள்.
கோயில் திருவிழாவில் என் பங்கு பேர்பாதியாக இருந்தது. வயது முதிந்தவர்களும் வணக்கம் வைத்தனர். ஊரில் யார் வீட்டில் தேவையானாலும் என் வீட்டிற்கு பத்திரிகை முதலில் வந்தது.. அந்த ஊரில் முதலில் கார் வாங்கியவன் நான்தான். பெரிய மனிதர்கள் வீட்டு தேவைக்கு என்னை அழைத்தனர்.
அன்று மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்கு கிளம்ப என் புல்லேட்டை உசுப்புகையில், “சரவணா” …குரல் கேட்டு திரும்பினேன் ..அவன் நின்று பல்லைக்காட்டி கொண்டிருந்தான். முகம் நிறைய சந்தோசம்..மிக நெருக்கமான முகம் …

சின்ன பிள்ளையாக இருக்கும் போது பக்கத்து கிராமத்திற்கு மேட்ச் விளையாட போவோம்…கிரிக்கெட் …..அப்போதையை உயிர் நாடி…
குமரேசன், புளிக்கொம்பு, வானவன், சுரேசு, ஆயுபு …என பெரிய பட்டாளம்..இப்போது என்னை அழைத்தவன்..பிரபு…எங்கள் அறிவியல் வாத்தியார் மகன்…என்னைவிட மூன்று வயது சிறியவன் …வீடு மேட்டு தெரு …
“நல்ல இருக்கியாடா ? ” வாஞ்சையாக கேட்டான்
பழைய சிநேகிதன் …நான் வண்டியை நிறுத்தி விட்டு கடைபையனிடம் , “தயாளா!! ரெண்டு டீ சொல்லு” என்ற படி அவனை அணைத்து கொண்டேன்.
மணி போனது தெரியவில்லை….பேசிக்கொண்டே இருந்தோம்..ஒரு டீ நான்கானது …சிகரெட்டு துண்டுகள் கிழே சிதறிக்கிடந்தது..
அபுதாபியில் இருந்ததாக சொன்னான்..
“கல்யாணம் ஆகிடுச்சா?” என்றேன்
“இல்லை டா ..தங்கச்சிக்கு முடிக்கணும்” என்றான்
பின், “நேத்து மதனிய கோயில்ல பாத்தேன்… ஐயருதான் சொன்னாரு ..உன் சம்சாரமென்று”
நான் புன்னகைத்தேன், “வீட்டுக்கு வாயேன்..சாப்பிட்டுட்டு கிளம்புவ!”
“இல்ல டா! ஏக வேல.. பாப்பாவுக்கு வரன் பாக்கற விஷயமா கிளம்புறேன். .. இன்னொரு நாள் வரேண்டா” விடைப்பெற்றான்.

ஊருக்கு வந்ததிலிருந்து ஒரு வெள்ளிகிழமை கூட தவறவிட்டதில்லை…புத்தீஸ்வரர் கோயில் ..பலநூறாண்டாக கம்பீரமாக என் ஊரின் நடுவே வீற்றிருந்தது… வெள்ளிக்கிழமை மீரா குழந்தைகள் சகிதமாக அந்தி நேர பூஜையை பார்த்துவிடுவேன்…வீட்டிலிருந்து நடக்கும் தூரம்தான் என்றாலும் காரை எடுத்துக்கொண்டு புத்தீஸ்வறரை தரிசனம் பண்ணிவிட்டு..அப்படியே கடைக்கு கூட்டி சென்று விடுவேன்…இரவு …கோபாலசெட்டி கடையில் மணக்க மணக்க சாப்பிட்டுவிட்டு வீடு வருவோம்…
நான் காரை அணைத்துவிட்டு இறங்க மீரா குழந்தைகளுடன் காரை சுற்றியபடி வந்தாள்..அவுளுக்கு மட்டும் இந்த புடவை கட்டும் கலையை யார் கற்று தந்தார் என்று தெரியவில்லை..அவள் கட்டினால் தான் எந்த புடவையும் அழகாக இருக்கும்..
முத்தாச்சி கிழவி குரல் கொடுத்தது, “பெரியாகடக்காரம்மா ..பூவாங்கி தலையில் வச்சிக்கிட்டு போங்க”
புன்னகையுடன் முத்தாச்சி பூ மாலை கடையை அன்றினாள் மீரா..கிழவி ஒரு பூப்பந்தை நீட்ட, “ஏன் …பெரியம்மா இவளவு பூவு ” என்றாள்..
முத்தாச்சி கிழவி வாஞ்சையுடன் மீராவை பார்த்து, “ஏம்மா ..தேங்கா நாறு மாதிரி முடி வச்சிருக்கிறவ எல்லாம் தோரணம் தோரணமா வச்சிக்கிட்டு அலையுறா..கருநாகம் மாதிரி இந்தாதண்டி முடியிருக்க உனகேன்னமா” மீரா புன்னகையுடன் வாங்கி தலையில் வைத்து கொண்டாள்..நான் பெருமிதத்துடன் முத்தாச்சிக்கு பணத்தை கொடுத்து விட்டு வந்தேன்.
புத்தீஸ்வரர் தரிசனம் முடிந்தது நான் மண்டபத்தில் அமர, மீரா வடக்கே ஒன்று தெற்கே ஒன்று என்று ஓடிக்கொண்டிருந்தா என் குழந்தைகளை சமாளித்துக்கொண்டிருந்தாள்… அவள் இன்ப சலிப்புடன் குழந்தைகளை செல்லமாக அதட்டிய படி மேய்த்துக்கொண்டிருந்ததை நான் ரசித்தபடி அமர்ந்திருந்தேன். ..
“சரவணா” குரல் கேட்டு திரும்பினேன். பிரபு எனஅருகில் வந்தமர்ந்தான் ..
“வாடா” என்றுவிட்டு…மீராவை நோக்கி, “அம்மாடி …என் பிரெண்டு” என்றேன். மீரா முந்தியை ஒருகையால் பிடித்தபடி இருகரம் கூப்பி வணக்கம் செய்தாள்..,பின்,”நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் கொழந்தைகளை கவனிக்கிறேன் : என்ற படி போய் விட்டாள்..
நாங்கள் கொஞ்சம் பழைய கதை பேசினோம்…எங்கள் இருவரை தவிர வேறு கூட்டாளிகள் இந்த ஊரில் இப்போதில்லை..திருவிழாவுக்கு எப்போதாவது வருவதுண்டு என்று பிரபு கூறினான்..
நான் மீராவை கிளம்ப சொல்ல அவளும் பிரபுவுக்கு ஒரு புன்முறுவலோடு “வரேங்க ” என்றாள்.

ஒரு ஞாயிற்றுகிழமை நான் கடைக்கு கிளம்பும் நேரத்தில் கதவுதட்டபட …”மீரா! யாரு பாரு” என்றேன் . மீரா சமையலை பாதியில் விட்டுவிட்டு கதவை திறந்தாள்..பின் சில வினாடி நின்றுவிட்டு..”என்னங்க ..உங்க பிரெண்டு வந்துருக்காங்க” என்றாள்.

நான் என் காபியை உறிஞ்சியபடி வாசலை பார்க்க..பிரபு உள்ளே வந்தான் ..
“என்னடா..எவ்ளோ காலைல “என்றேன்.
“ஒன்னுமில்லைடா ! வெட்டியா வீட்ல இருக்கேனா..போர் அடிச்சது ..உன்னை பாக்கலாம்னு”
நான் மீராவுக்கு குரல் கொடுத்தேன் , “மீரா! பிரபுவுக்கும் ஒரு காபி கொண்டா”
நான் பிரபுவை பார்த்து ,”டேய்! நீ தப்ப நினைக்கிலைனா …நீ ஏன் என் கடைலயே சேர்ந்துக்க கூடாது”
பிரபு யோசித்துவிட்டு, ” வேணாம் டா. இப்போ நீயும் நானும் நல்ல பிரெண்டா இருக்கோம்…கடைன்னு வந்துட்டா முதலாளி தொழிலாளின்னு வந்துடும்”
அது என்னக்கும் சரின்னு பட்டது…
காபியை உரிந்துவிட்டு வைத்தவன், “மதனி! கை பக்குவம் சூப்பர்” என்றான்…மீரா ஒரு புன்முறுவலை மட்டும் பதிலாக தந்துவிட்டு போய் விட்டாள் .

இரவு நான் படுக்கும் போது மீரா மெல்ல கேட்டாள், “அவரை உங்களுக்கு எவ்வளவு நாளாய் தெரியும்?”
“யாரை..பிரபுவையா…சின்ன வயசுல இருந்து…ஒன்னா பழகினோம்”
“அவருக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகல?”
“இப்போதானே 27 வயசு ஆகுது..ஏன் கேக்கிற ? ”
“இல்ல காலா காலத்துல கல்யாணம் அகிடுச்சினா…. ” மீரா இழுத்தாள்..
“என்னம்மா! சொல்லு?”
“ஒன்னுமில்லைங்க”
“எதோ சொல்ல வர..ஏன் முழுங்குற”
“இல்லை.. காலா காலத்துல கல்யாணம் அகிடுச்சினா….போறவர பொம்பளைங்கள மொறச்சிகிட்டு இருக்க மாட்டார் இல்ல”
“ஏன் ? உன்கிட்ட எதாவது…”
“ஐய்யய்யோ..! இல்லீங்க… பொதுவா கொஞ்சம் பொம்பளைங்கல பாத்தா பல் இளிகிராரு அதான் ”
“வயசு அப்படிதான் இருப்பான் விடு”
இருவரும் சலனமில்லாமல் தூங்கி போனோம்.