ப்ரீத்தியின் தோட்டத்தில் வேலை! 30

என் வற்புருத்தலினால் அவனை தின்டுக்கல்லில் ஒரு எஞ்சினியரிங் காலேஜ்ல் என் அப்பா சேர்த்தார். முதல் வருடம் மட்டும்தான் அவர் ·பீஸ் கட்டினார். அவனது முதல் வருட மார்க்கைப் பார்த்ததும் கல்லூரி மேலாளரே அவனுக்கு இலவசக் கல்வி என் அறிவித்தார். இதுவரை 6 சப்ஜக்ட்டில் பல்கலைகழக கோல்ட் மெடல் வாங்கியிருக்கான். சென்னையில் உள்ள TCS ல் மாதம் 40000 ரூபாயில் வேலைக் கிடைத்துள்ளது. அவன் எழுதிய ப்ரோக்ராம் ஒன்று ஜப்பானில் ஒரு கண்காட்சியில் முதல் பரிசை வென்றிருக்கிறது. அதனால் அவனுக்கு 5 லட்சம் பரிசுக் கிடைத்தது..அதை அவன் என்ன செய்தான் தெரியுமா.. இங்க பக்கத்தில் வத்தலகுண்டு அருகே உள்ள ஒரு அநாதை இல்லத்திற்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டான். இவ்வளவு சாதித்தும் விடுமுறை நாட்களில் எங்கள் தோட்டத்தில் வேலை செய்வான். இங்கு வேலை செய்யும் மற்றவர் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லித் தருவான்” என்றாள்

இதைக்கேட்டதுமே என் மனதில் கதிர் ஒரு பெரிய ஹீரோ போலத் தெரிந்தான். மானசீகமாக அவனைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். என் மனதில் காதல் எண்ணம் தோண்றியதுமே ப்ரீத்தியிடம் சொல்லி அவளுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா என்றுக் கேட்டேன். ” சுகந்தா நீ தான்டி அவனுக்கு சரியான ஜோடி.. இரன்டுப் பேருமே அடுத்தவர்களுக்காக தன் ஆசைகளை விட்டுத்தருபவர்கள்.. நீங்கள் கல்யானம் செய்துக்கிட்டா அதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும். உங்கள் காதலுக்கு என்னால் ஆன உதவியை செய்கிறேன்” என்றாள். இரவு வெகு நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்

அடுத்த நாள் காலை நானும் ப்ரீத்தியும் ஆற்றுக்குக் குளிக்கச் சென்றோம்.கதிர் எங்களுக்குத் துணையாக வந்தான்.எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் ஆற்றில் இறங்கவில்லை. அவனது கன்னி¢யம் எனக்குப் பிடித்திருந்தது. குளித்துவிட்டு தென்னந்தோப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தப் போது எனதுக் காதலை கதிரிடம் தெரியப் படுத்தினேன். அவன் குடும்ப அந்தஸ்தைக் காரணம் காட்டி அதை ஏற்க மறுத்தான். ப்ரீத்தி எடுத்துச் சொல்லியும் அவன் சமாதானமடையவில்லை.

நான் எனதுப் பெற்றோர் அமெரிக்காவிலிருந்துத் திரும்பியதும் கதிரின் அப்பாவை சந்திக்க வைப்பதாகச் சொன்னேன்.அதற்கு அவனும் அது சரியான யோசனை ஆனால் ஒரு சமையல் காரரிடம் என் அப்பா சம்மந்தம் பேச வருவதால் அவர் மனம் சங்கடப் படுமென்றும் என் பெற்றோர் சம்மதித்தால் கதிரும் அவன் அப்பாவும் என் வீட்டிற்கு வந்துப் பேசுவதாகவும் சொன்னான். அதே நேரத்தில் பெற்றோர் சம்மதம் கிடைக்கும் வரை நாம் நன்பர்களாகவே இருப்போம் என்றும் சொன்னான்.அவனது அணுகுமுறை என்னை மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது. அவனைத் தீவிரமாகக் காதலிக்க ஆரம்பித்தேன்.

ப்ரீத்தியின் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு காலையும் மதியமும் அவள் வீட்டிலேயே உணவு தயாராகும். எல்லோரும் வீட்டின் பின்புறம் இருக்கும் கொட்டகைக்கு வந்து சாப்பிடுவார்கள். விடுமுறை நாட்களில் கதிரும் அங்கேதான் உணவருந்துவான் என ப்ரீத்தி சொன்னாள் அடுத்த நாள் காலையிலிருந்து நானும் காலையும் மதியமும் அங்கு சாப்பிடப் போவதாக முடிவெடுத்தேன். கோடை விடுமுறை என்பதால் அங்கு உள்ளப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தரவும் முடிவெடுத்தேன்.

அவன் என்னை சாப்பாடு மட்டும் ப்ரீத்தியின் வீட்டில் சாப்பிட்டுக்கச் சொல்லியும் நான் கேட்கவில்லை. எனது இந்த முடிவு கதிரின் மனதைத் தொட்டது.. அங்குத் தங்கியிருந்த 20 நாட்களும் நல்ல முறையில் கழிந்தது. எனது வாழ்க்கையில் முதன் முதலில் ஏழை மக்களுடன் பழகக் கிடைத்த வாய்ப்பு. அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பும் போது கதிரைப் பிரிய மனம் வரவில்லை. கடைசி 2 நாட்களும் அழுகையிலேயேக் கழிந்தது. என்ன சொல்லி என்னை சமாதானப் படுத்துவது என்று அவனுக்கும் தெரியவில்லை. அவனிடம் மொபைலும் கிடையாது. ஈ மெயில் தான் ஒரே வழி. அவன் காலேஜ் லேபில் தான் நெட் கனெக்க்ஷன் இருப்பதால் சாட்டிங்க்கும் சான்ஸ் இல்லை.

ப்ரீத்தியின் அப்பாவால் வரமுடியாத்தால் ரயில்வே ஸ்டேசனுக்கு எங்களை வழியனுப்ப கதிர்தான் வந்தான். எனது அழுகை அவனைக் கக்ஷ்டப் படுத்தியிருக்கும் போல.. என்னிடம் ” சுகந்தா எனக்கும் உன் மேல் ரொம்ப ஆசை.. ஆனால் லவ் பன்ன எனக்கு என்ன தகுதி இருக்கு. என்னுடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நான் ப்ரீத்தியின் அப்பாவை நம்பித்தான் வாழவேண்டும். இந்த நிலையில் உன் காதலுக்கு சரி சொல்ல என் மனசாட்சி இடம் தரவில்லை. நீயும் நானும் இன்னும் எவ்வளவோக் காலம் வாழப் போறோம். இன்னும் 1 வருடம் நான் படிச்சு முடிச்சுட்டு சென்னைக்கு வேலைப் பார்க்க வந்துவிடுவேன். அப்பவும் நீ என் மேல் காதல் வைத்திருந்தால் சொல்லு.. அதன் பிறகு என் வாழ்க்கையில் எனக்கு எல்லாமே நீதான்” என சொன்னான்.