ப்ரீத்தியின் தோட்டத்தில் வேலை! 29

எனக்கு நான் பிறந்ததிலிருந்தே யாருக்கும் வணக்கம் சொல்லிப் பழகாததால் பதில் வணக்கம் சொல்ல சங்கடமாக இருந்தது.. கதிரிடம் ” கதிர் இவளுக்கு ·ப்ரன்ட் என்றால் எனக்கும் ·ப்ரன்ட்தான். நன்பர்களுக்குள் ·பார்மாலிட்டித் தேவையில்லை.. சும்மாக் கைகுடுங்க” என்று அவன் கையைப் பிடித்துக் குளுக்கினேன். பின் “நீங்க மட்டும் வணக்கம் சொன்னீங்கல்ல அதுக்குப் பதில் வணக்கம் இந்தாங்க” என்று அவனைப் பார்த்து வணங்கினேன். அவன் என் பேக்கை எடுக்க முயன்றப்போது நான் மறுத்து “கதிர் தப்பா நினைக்காதிங்க என்னால் முடிந்த என் சம்பந்தப் பட்ட வேலைகளை நானே செய்துக்கொள்வது என் பழக்கம்.. இந்தப் பைகளை ஈசியாத் தூக்க முடியும்..நானேத் தூக்கி வருகிறேன்” என சொல்லி என் பைகளைத் தூக்கிக் கொண்டு உள்ளேச் சென்றேன்.

கதிர் இளமையில் வறுமைக் காரனமாக சற்று ஒல்லியாக இருந்தான். சற்றே சிவந்த மாநிறம். 5.9 உயரம். ஸ்ப்ரிங் போல சுருண்டக் கேசம். கடின வேலைக் காரணமாக இருகிய உடல். ஒரு லுங்கியும் பனியனும் அணிந்திருந்தான்.. அவனைத் தூக்க அனுமதியாமல் நானே எனது பைகளைத் தூக்கி வந்தது அவனை மிகவும் கவர கண்களில் சந்தோசம் தெரிய கதிர் என்னிடம் ” ரொம்ப நாளுக்குப் பிறகு மனித மனதை மதிக்கிற ஒருவரைப் பார்க்கிறேன்.. ரொம்ப சந்தோசம்ங்க” என்றான். ப்ரீத்தி உடனே கிண்டலாக ” என்னடா அசடு வழியிற.. அப்ப என்ன நான் உன்னை மதிக்காதவளா?” என்றாள்.

பிறகு கதிரிடம் “கதிர் இன்று இரவு வேட்டைக்குப் போகலாமா?” என்றாள். அவன் “இன்று வேன்டாம். 2 நாளில் பெருமாள் மலை திருவிழா வருகிறது அதனால் நம்ம மலை முழுதுமே ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மிருகங்கள் வெளியே வராது அதனால் 3 நாள் போகட்டும்” என்றான். எனக்கு வேட்டை என்றதும் ஆச்சர்யமாக இருந்தது. மறுநாள் காலை ஆற்றில் குளிக்கலாம் என முடிவு செய்தோம். கதிர் காலையில் வருவதாகச் சொல்லி விடைபெற்றான்.

இரவு சாப்பிட்டதும் வீட்டிற்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டு அதில் அமர்ந்து நானும் ப்ரீத்தியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவளது சிற்றன்னை வந்தாள். ப்ரீத்தி அவளுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தாள்.ஐந்து நிமிடம் கழித்து அவள் சென்றதும் ப்ரீத்தி என்னிடம் “சுகந்தா ஏனோத் தெரியவில்லை என் சித்தியிடம் எனக்கு ஒரு பாசம் வரவேயில்லை. அதற்காக அவங்களை வெறுக்கவுமில்லை. அவங்களும் வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லாமலேயே வாழ்ந்துவிட்டார்கள். கதிருக்குக் கூட அம்மா இல்லை. அவன் அப்பா இன்னொரு கல்யானம் செய்துக்கவில்லை. என் சின்ன வயதில் இருந்தே அவனிடம் மட்டும் தான் நான் என் உனர்வுகளைப் பகிர்ந்துக்கிட்டு இருக்கேன். உனக்கு ஒன்னுத் தெரியுமா கதிர் ரொம்ப புத்திசாலி. நான் திண்டுக்கல்லில் படித்தேன்.. ஆனால் அவன் இங்க ஒட்டன்சத்திரத்தில்தான் படித்தான் 12ம் வகுப்பில் 1156/1200க்கு வாங்கினான். நம்மலவிட 1 வருடம் சீனியர்.