ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப! 103

பாக்யா ஏமாற்றமடைந்தாள். ”மாத்திட்ட பாத்தியா..? ”
”ஏய்.. என்னடி மாத்திட்டேன்.?”
”என்னை ஏமாத்தின.. நீ நல்லாவே இருக்க மாட்ட..” என்றாள். பின் ”ட்ராயிங் சொல்லித்தரதுக்கு பீஸ் கேட்டானே குடுத்தியா. ?”
சிரித்தாள் கோமளா ”ம்கூம்”
” ஏன்..?”
” அதுக்கப்பறம்.. அதப்பத்தி ராசு ஒன்னுமே பேசல .”
” நல்லா சமாளிக்கறடீ..! நீ நாசமாத்தான் போவ பாரு..”
” இப்ப நான் என்ன பண்ணிட்டேனுடி எனக்கு இப்படி சாபம் குடுக்கற..?”
”எங்கிட்ட.. பொய்.. பொய்யா சொல்ற இல்ல. .? அதுக்கு. .”

இருவரும் பேசியவாறு நடந்த ரோட்டை அடைந்தனர்.
ராசு எதிரே வந்து கொண்டிருந்தான்.
அவனை நெருங்கிய போது கோமளா.

52

” நீ ரொம்ப ஹைட்டு ராசு..” என்றாள்.
”ரெண்டு வருசம் போனா நீயும் என்ன மாதிரி வந்துருவே ” என்று விட்டு நிற்காமல் கடந்து போனான்.

பின்னால் விட்டு ”எங்கடா போற..?” எனக் கேட்டாள் பாக்யா
அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு. .பதில் சொல்லாமலே போனான்.
உடனே பாக்யா ”பாத்தியாடி ஒரு லொல்லு அவனுக்கு. .? பேசாம போறான்..?”
”ஆமா நீ ரொம்ப மரியாதையா பேசின பாரு.. உங்கிட்ட நின்னு பேசறதுக்கு.. ? நம்ம வயசுக்கெல்லாம் மாமானு கூப்பிடாம பேரு வெச்சு கூப்பிடறதே பெரிய விசயம். இதுல வாடா போடானு பேசறதெல்லாம் ரொம்ப ஓவர் தெரியுமா..?”
”அவனுக்கெல்லாம் இந்த மரியாதை போதும். ! நானா பேசினாலும். . அவன் பிலுக்கிட்டு போறான் பாத்தியா என்னமோ பெரிய இவளாட்டம் சொன்ன. .?”
” என்னருந்தாலும் ராசு வயசுல பெரியவன்டி..”
” ஆமா பெரிய இவன்..? அப்ப ஏன் பேசாம போறான். .?”
”அவன் வந்து பேசறப்ப எத்தனை தடவ நீ பிகு பண்ணிருப்ப .?”
”வரட்டும் அவன் பேசிக்கிறேன்” என்றாள்.

ஆனால் அவன் இருட்டின பின்னர்தான் வந்தான். பாட்டி இருந்ததால் அவனோடு சண்டை போட முடியவில்லை.
பாட்டிக்கு சமையல் செய்ய உதவி செய்தாள்.

தாத்தா நிறைய மாடுகள் வைத்திருந்தார். மலைக்கு ஓட்டிப் போய் தினமும் அதை மேய்த்து வருவது தான் அவரது வேலை. மாடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைத்த பின்.. வெந்நீரில் ஒரு குளியல் போடுவார். அப்பறம் கோவிலுக்குள் போய் புகுந்து கொண்டால்.. சாமி சிலைகளைக் கழுவிக் குளிப்பாட்டி.. பாலபிஷேகமெல்லாம் செய்து.. அவர் பூஜையை முடித்துக்கொண்டு வருவதற்கு ஒரு மணிநேரத்திற்கு மேலாகி விடும். அப்பறம் உணவைச் சாப்பிட்டு விட்டுப் போய் கோவில் மேடையிலேயே.. படுக்கை விரித்துப் படுத்து விடுவார்.

சமையல் முடிந்து தாத்தா சாப்பிட்டதும் பாட்டி சொன்னாள்.
” போய் மாமன கூட்டிட்டு வா ரெண்டு பேரும் சாப்பிடுவிங்களாம்..”

அவள் நகரும் முன் தாத்தா கேட்டார்.
” நீ ஏம்புள்ள ஊருக்கு போகல?”
” போகல தாத்தா. .” என்றாள்.
”உன் தம்பிக்காரன்… பள்ளிக்கொடம் லிவு விட்ட சாயந்திரமே ஓடிட்டான். ”

பாட்டி ” அங்க போனா.. அப்பன் நெறைய காசு குடுப்பான். சினிமா கூட்டிட்டு போவான்..” எனச் சிரித்து விட்டு. .” போய் மாமன கூட்டிட்டு வா ”என்றாள்.
அவனைப் போய்க் கூப்பிட வேண்டுமா.?
”காணம். ” என முணகினாள்.
” ரோட்டுக்கு அந்தப் பக்கம். . கொடிக்கம்பத்துல உக்காந்துருந்தாங்க பாரு..” தாத்தா.

அது அவளுக்கும் தெரியும். ராசுவும் கோமளாவும் பேசிக்கொண்டிருந்தனர். கிழவனை மனதில் திட்டியவாறு எழுந்து போனாள். அருகில் போகவில்லை. ரோட்டின் இந்தப் பக்கமே நின்று..
”ஆத்தா கூப்டுது..” என்றாள்.
உடனே கோமளா ”இங்க வாடி” எனக் கூப்பிட்டாள்.
”ஏன்..?”
” வான்றன்ல..?”
அருகே போனாள் ”என்ன..?”
கோமளா சன்னக் குரலில் ”ரவி ஒன்னு குடுத்தான்.” என்றாள்
”என்ன. .?”
” நீயே பாத்துக்க..” எனக் கொடுத்தாள்.
வாங்கிப் பார்த்தாள். மூன்று விதமான டிசைன்களில்.. ஸ்டிக்கர் பொட்டு.
”இத நீயே வெச்சிக்க..” என கோமளா மடிமேல் தூக்கி வீசிவிட்டு உடனே அங்கிருந்து ஓடிவிட்டாள் பாக்யா.

அவளது மனசெல்லாம் படபடவென அடித்துக்கொண்டது.
ரவி கொடுத்து விட்டது சந்தோசம்தான் என்றாலும். . அதை அவளால் ராசு முன்பாக ஏற்க முடியவில்லை. ஏனெனில் அவள் ஆசைப்படுவது தெரிந்தாலே.. ராசு வாங்கிக் கொடுத்து விடுவான்.
பாத்ரூம் போய் சிறிது நேரம் நின்று.. தன் படபடப்பை சீராக்கிக் கொண்டு சாப்பிடப் போனாள். ராசுவும் வந்து விட்டான். அவனோடு எதுவும் பேசாமலே சாப்பிட்டாள்.

வெளித்திண்ணையில்படுத்த பாட்டி தூங்கிவிட்டாள்.
கோவில் மேடையில் படுத்த தாத்தாவும் தூங்கிவிட்டார்.
வீட்டினுள்.. பாக்யாவும். . ராசும்தான். ஆளுக்கொரு பாயில் படுத்திருந்தனர்.
படுத்து நீண்ட நேரமாகியும் பாக்யாவுக்கு தூக்கமே வரவில்லை.
ராசு தூங்கிவிட்ட்னா என்ன.?

பாக்யா மெல்ல..
”ராசு..”என்றாள்.
தலை திருப்பி அவள் பக்கம் பார்த்தான்.
”தூங்கிட்டியா..?” எனக் கேட்டாள்.
”ஏன். .?” ராசு .
”கால் வலிக்குது..”

சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

பாக்யா ”சமாதானமா போயிடலாம். சண்டை வேண்டாம்..” என்றாள்.
பெருமூச்சு விட்டான் ”எத்தனை நாளைக்கு. .?”
”அதெல்லாம் சொல்ல முடியாது. ! இப்போதைக்கு சமாதானம். .” எனச் சிரித்தாள்.

” ஏன் ரொம்ப கால் வலிக்குதா.?”
” ம்…!”
”அதானே.. தேவைன்னாத்தானே சமாதானமாவிங்க..” என எழுந்தான்.
அவள் பேசவில்லை.
நகர்ந்து வந்து அவளருகே உட்கார்ந்து எதுவும் பேசாமல் அமைதியாக அவள் கால்களை அமுக்கி விட்டான்.

பாக்யா மெதுவாக”கோபமா இருக்கியா..?” எனக்கேட்டாள்.
” ம்..” என்றான்.
” இருந்துக்கோ.. இருந்துக்கோ.” எனச் சிரித்தாள்.
அவன் பொருமையாக அவள் காலமுக்கி விட்டுக் கொண்டிருக்க… அவள் பெருமூச்சு விட்டாள்.
”உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்”என்றாள்.
”ம்..?”
” நீ கோமளாவ லவ் பண்றியா?”
”ம்கூம். .”
” ரெண்டு பேரும் க்ளோசா பழகறீங்க..?”
”அவளவிட உன்கூடத்தான் க்ளோசா இருக்கேன்.! நாம பண்றமா..?”
” நம்ம இது வேற..! அப்ப நீ அவள லவ் பண்ணல..?”
” இல்ல. .!”
அவளது மனசு அமைதியானது ஒருவகை சந்தோசம்.!
நிம்மதி. .!!!!

பாக்யாவின் மனதில் படர்ந்த நிம்மதி. . அவளைக் குளுமையாக்கியது.
ஆனாலும் அவனைச் சீண்டினாள்.
”ஏன் அவள லவ்வலாமில்ல.?”
உதட்டில் குறுநகை படற அவளைப் பார்த்தான் ராசு.

” அவளவா..?”
” அவளுக்கென்ன.. கருப்பாருந்தாலும். . ஆள் நல்லா கலையாத்தான இருக்கா.?”

அவன் பேசாமல் சிரித்தான்.