ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப! 19

என்ன சொல்வது..?
உடனே சமாளித்தாள்.!
” நா ஒன்னும் பண்ணல.. அவன்தான். . அப்படி நெனச்சிட்டு சுத்திட்டிருக்கான்.”
ராசுவிடம்.. அவள் சொன்ன முதல் பொய் அதுதான். அவளும் காதலித்துக் கொண்டுதான் இருந்தாள்.
”யாரு அவன். ?”ராசு.
மெள்ள.. ”ரவி..” என்றாள்.
” யாரு. . இந்த ரவியா.?”
” ம்..” லேசான வெட்கம் வந்தது ”பேரவே கெடுக்கறான். ”
அவளை உற்றுப் பார்த்தான் ”நீ பண்ணலதான..?”
”சத்தியமா இல்ல. .” என திடமாகச் சொன்னாள்.
ராசு அதை நம்பினான். ”ஒன் சைடா பண்றானா..?” எனக்கேட்டான்.
அவள் பேசவில்லை.

அதேநேரம்… அவளது பெரியம்மா பெண்ணான கோமளவள்ளி வந்தாள்.
பாக்யாவை விட மூன்று மாதங்கள் பெரியவள். அதேபோல அவள் பூப்படைந்ததும்.. சரியாக மூன்று மாதம் முன்புதான்.
பாட்டி வீட்டை ஒட்டி. . கோவிலின் பின்புறமாக அவர்களது வீடு.
கோமளா.. பாக்யாவைப் போல அழகோ.. நிறமோ இல்லை. கருப்புதான். ஒல்லியான உடம்புக்காரி. ஆனால் நன்றாகப் படிப்பாள். எதையும் சட்டென கிரகித்துக் கொள்ளும் புத்திக்கூர்மை உண்டு.
ராசுவைப் பார்த்து..
” உன்ன எங்கம்மா கூப்பிடுது ராசு. .” என்றாள்.
அவன் ”உனக்கும் நான் ராசுவா?” என்றான்.
” ஏன் இவள்ளாம் பேரு வெச்சு கூப்டறா..?”
” அது சரி…” சிரித்தான்.
”நான் இவளவிட மூணு மாசம் பெரியவளாக்கும் தெரிஞ்சிக்கோ..”
” சரிடி.. கருவாச்சி. .! வாயப் பாரு.. வாய..”
” ஆ .! எங்க வாயெல்லாம் நல்லாத்தான் இருக்கு..! மொதல்ல.. உன் வாயப் போய் கண்ணாடில பாரு. . உனக்கே வாந்தி வரும்..”
என்றாள்.
அவள் கன்னத்தைப் பிடித்து ‘வெடுக’ கெனக் கிள்ளினான்.
” கருவாச்சிக்கு.. அழகில்லேன்னாலும்… வாய் ரொம்பவே இருக்குடீ..”
” இல்லேன்னா உங்கூடல்லாம் குப்ப கொட்ட முடியுமா..?”
” அப்படியே குப்ப கொட்டிட்டாலும்..! இரு டீ உன்ன வந்து வெச்சிக்கறேன்”
” ஆ.! நீ வெச்சிக்கறதுக்கு நான் ஒன்னும் உன் வெப்பாட்டி இல்ல”எனச் சிரித்தவாறு எட்டப் போய் நின்றாள் ”அதுக்கு வேற எவளாவது இருந்தா போய் பாரு. .”

ராசு போனதும். .
”நீ ரொம்ப ஓவரா பேசறடி ”என்றாள் பாக்யா.
” எல்லார்ட்டயும் இப்படி பேசமுடியுமா.. ? இவன்ட்டதான.?”

பாத்ரூம் அருகே கூட்டிப் போய்க் கேட்டாள் பாக்யா.
” ராசுகிட்ட என்னைப் பத்தி நீயா சொன்ன. .?”
”சத்தியமா இல்லப்பா..! உன்னப்பத்திலாம் ஒன்னுமே பேசல.” என்றாள் கோமளா.
” என் மேட்டர் அவனுக்கு தெரிஞ்சு போச்சு. .”
” அய்யய்யோ..” என்றாள் கோமளா ”ஆனா சத்தியமா நான் சொல்லடி..”
” வேற யாரு சொல்லிருப்பா..”
” நீ என்ன சொன்ன..?”
” நா லவ்வே பண்ணலேனு சத்தியமே பண்ணிட்டேன்.” எனச் சிரித்தாள் பாக்யா ”நம்பிட்டான் ”
”பொய் சத்தியம் பண்ணா லவ் பெயிலியர் ஆகிருன்டி..” என்றாள் கோமளா.
”க்கும். . போடி..” என அலட்சியமாகச் சொன்னாள்.
☉ ☉ ☉

அதன் பிறகு.. அடுத்த சில மாதங்களில் தீவிரமான காதலில் விழுந்தாள் பாக்யா. அவளது காதல் விவகாரம் ஊர் முழுவதும் பரவி விட்டது. அவளது பெற்றோருக்கும் தெரிந்து விட்டது.
அவளது குடிகார அப்பா ஒரே ஒரு முறை மட்டுமே சத்தம் போட்டார். அதன் பிறகு கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் அம்மா அவ்வப்போது கண்டித்துக்கொண்டுதான் இருந்தாள்.
பாட்டி மிகவும் கண்டிப்பாக இருந்தாள். அவள் வாசலில் போய் நிற்கக் கூடாது. பெண்களோடு கூட வெளியில் போய் விளையாடக்கூடாது. மாலை பள்ளி விட்டு வந்தால் படிக்க வேண்டும் என கண்டிப்பு அதிகமானபோதும். .. அவளது காதல் மட்டும். . கட்டுப்படவே இல்லை.

பாட்டிக்குத் தெரியாமல்.. பள்ளி விட்டு வரும்போதும்.. காலையில் பள்ளிக்குப் போகும் போதும். . ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக்கொண்டுதான் இருந்தாள்.

ஒருசில வார இறுதி நாளில்.. அவளது பெற்றோரிடம் அனுப்பி வைப்பாள் பாட்டி.
அப்போது பஸ்ஸில்.. அவளைப் பின் தொடர்வான் ரவி.!
தவிற.. அவளது காதலுக்கு. . கோமளவள்ளி மிகவும் உறுதுணையாக இருந்தாள். நிறைய தூதூ போவாள்.
அவளது காதல் ராசுவுக்குத் தெரிந்த பின்… அவனும்.. அவளிடம் சிறிது கண்டிப்பு காட்டினான். நிறைய அறிவுரை சொன்னான். இது காதலிக்க ஏற்ற பருவம் அல்ல.. என்றான்.
அவன் சொன்னது கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அவளால் காதலை விடமுடியவில்லை.
ராசு அவளைக் கண்டிப்பதால்.. அவனிடம் அடிக்கடி. . மனஸ்தாபம் வந்தது. சில சமயம் சண்டை கூட வரும்.
அவள் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்தால்.. அவனாக வந்து வலியப் பேசி… சமாதானம் செய்வான்.!
அதுவரை அவளும் அவனோடு பேசவே மாட்டாள்.!

அன்று. .!
பள்ளி விட்டு வந்து எழுதிக்கொண்டிருந்தாள் பாக்யா. பள்ளிச் சீருடைகூட மாற்றவில்லை.

ராசு கேட்டான் ”என்ன எழுதற?”
”ஹோம் ஒர்க்..”
” துணிகூட மாத்தல..?”
உதட்டைப் பிதுக்கி ”ப்ச் ” என்றாள் ”அழுக்குதான்..”

அருகில் உட்கார்ந்து அவள் எழுதுவதைப் பார்த்தான்.
” கையெழுத்து நல்லாருக்கு. .”
” தேங்க்ஸ்..” சிரித்தாள்.
” ஆனா தலையெழுத்துதான் என்னன்னு தெரியல..”

நிமிர்ந்து அவனைப் பார்த்து..
”ஹ்ஹா..” எனச் சிரித்தாள்.
அவள் கண்ணத்தில் தட்டி.. ”ம்.. எழுது.. எழுது..” என்றான்.

மறுபடி குணிந்து எழுதினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *