ஆசை மட்டும் சிறிதும் குறையவே இல்லை 4 59

”இரண்டு பேரும் இங்கே என்ன செய்கிறீர்கள்.. அண்ணா..?” என் தங்கை கேட்க… மகிழ்வதனி முந்திக் கொண்டு சொன்னாள்.

”உன் அண்ணா.. தனிமையை நாடி வந்து.. அமைதியை விரும்புகிறாராம்..! விழா மண்டபத்து கொண்டாட்டங்களில் அவர் மனம் லயிக்கவில்லையாம்..! அதோ தெரிகிறதே.. தூரத்து நிலா.. அதைக் கண்டு அவரது மனம் ஆனந்தமடைகிறதாம்..! அதுதான்… நானும் அவர் மோன லயத்தைக் களைக்க முயன்று கொண்டிருந்தேன்..! நல்லவேளை.. நீ இங்கு வந்தாய்.. எனக்குத் துணையாக..!”

” ஆம்.. தேவி..! என் அண்ணாவுக்கு.. இளம்பிராயம் முதலே.. அந்த நிலா மீது ஏனோ.. அவ்வளவு காதல்..!! நிலா உதயமாகும் நேரம் எல்லாம்.. என் அண்ணா.. மேன் மாடத்தில்தான் தனித்திருப்பார்..!! அந்த நேரத்தில் அவரை யார் தொந்தரவு செய்தாலும்.. அவருக்கு பிடிக்காது..!!” என.. தன் பங்குக்கு.. என்னைப் பற்றித் தம்பட்டம் அடித்தாள் என் தங்கை.. அலைக்குமரி..!!

இப்படி இரண்டு வாயாடிப் பெண்கள் இருக்குமிடத்தில்.. எந்த ஆண் மகனுக்குத்தான்.. காதல் உண்ர்வு தழைத்தோங்கும்..??

அதன்பிறகு.. நான் அதிகம் பேசாமல் அமைதியை கடை பிடித்தேன். மகிழ்வதனியின்.. மேனி அழகை.. நிலவொளியில் என்னால் ரசிக்க மட்டுமே முடிந்தது..!!

இரவு….!! அரண்மனை நந்தவனத்தில் நான் தனியாக உலாவிக் கொண்டிருந்தேன். பலவகை மலர்களும்.. இரவில் பூத்துக் குலுங்க.. மலர்களின் சுகந்த மணத்தில் என் மனம் மயங்கியிருந்தது. இளந் தென்றலின்.. இதமான தாலாட்டில் என் மேனி சிலிர்த்துக் கொண்டிருந்தது..! வானத்து நிலவு இப்போது நடுவானில் இருந்தது..!

நிலா பெரிய வட்டமாக இல்லை.. இப்போது..! உதயமான போது இருந்ததிலிருந்து.. பாதி நிலவு இளைத்து விட்டது போல.. சின்ன வட்டமாகக் காணப்பட்டது..! அதில் களங்கமும் இப்போது சேர்ந்து கொண்டிருந்தது..! தூரத்தில் தாரகைகள் எல்லாம்.. அழகழகாய் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன..!!

சிறிது நேர உலாவலுக்குப் பின்.. பனித்துளி படர்ந்த.. நுனிப்புல்மீது.. உட்கார்ந்து.. கரங்களால் தடவிப் பார்த்து.. உள்ளங்கையில் படர்ந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டு.. மெதுவாகப் பின்னால் சாய்ந்து மல்லாந்து படுத்தேன்.!

ஒரு வித மோன லயிப்பில்.. வானத்தையும்.. அதனடியில் காணப்படும்.. வான மண்டலக் காட்சிகளையும்.. ரசித்துக் கொண்டிருந்த என்மேல்.. திடுமென எதுவோ ஒன்று வந்து விழுந்தது..!

‘என்ன அது..?’ திடுக்கிட்டு.. பின்.. நிலவொளியில் தெரிந்த அதைக் கையிலெடுத்தேன். அது ஒரு பூச்செண்டு..!!

‘ஆ… இது எப்படி.. என்மேல்..? யார்..? எங்கிருந்து..?’ படுத்தவாக்கிலேயே.. சுற்றிலும் என் பார்வையை ஓட்டினேன். சற்றுத் தள்ளி.. பூச்செடி மறைவில் இருந்து.. அந்த மெலிதான அசைவு தெரிந்தது..! கூடவே.. நந்தவனப் பூக்களின் வாசணை மிகுந்த நறுமணங்களையும் கடந்து.. வந்த.. அந்த புனுகு பூனை வாசணை…?? அது.. என் அன்புக்குரியவளின்.. பூ மேனி வாசணையல்லவா..!!

மகிழ்வதனி.. என்னைக் காண வந்திருக்கிறாள் என்கிற.. உணர்வே.. என்னை மிகவும் களிப்படையச் செய்தது.! எதையும் நான் அறியாதவன் போல.. மீண்டும் மல்லாந்து படுத்து.. வானத்தை நோக்கினேன். சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு பூச்செண்டு காற்றில் பறந்து வந்து என் மேல் விழுந்தது. அதை எடுத்து முகர்ந்தவாறு..

”விளையாடியது போதும்..!! மரியாதையாக என்னிடம் வந்து விடு.. மோகினிப் பெண்ணே..!! நீ யாருடன் விளையாடுகிறாய்.. என்று தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறாய்..!!” என்றேன்.

செடி மறைவில் இருந்து.. ‘க்ளுக் ‘ கென அவளது சிருங்காரச் சிரிப்பொலி கேட்டது.
”யாருடன் விளையாடுகிறதாம்.. இந்த மோகினிப் பெண்..??”

”தெரிந்து கொள்ள ஆவலா.. மோகினியே..?”

”ஆமாம்..!!”

”சரி.. கேட்டுக்கொள்..! நான் உதய சந்திரன்.. என்.. உயிரில் கலந்த.. அன்புக் காதலியின் பெயர் மகிழ்வதனி..!! மகிழ்வதனி என்கிற பெயரைக் கேட்டு.. அவளை நீ.. மெல்லினம் படைத்தவள் என்று எண்ணி விடாதே..!! அவள் பார்க்கத்தான்.. பூ போல இருப்பாள்..!! பழக்கத்தில் அவள் ஒரு ராட்சசி.. மனதைக் கொள்ளை கொண்டு விடுவாள்..!! பேச்சில் அவள் ஒரு அரக்கி.. மனதை நார் நாராக கிழித்து விடுவாள்..!! கோபத்தில அவள் ஒரு பத்ரகாளி.. ருத்ரதாண்டவமே ஆடி விடுவாள்..!! அகில உலகத்தையும் காத்தருளும்.. உமை மணாளனாகிய.. அந்த சிவ பெருமானே.. அவளைக் கண்டால் அஞ்சி விடுவார்.. அவ்வளவு கோபக்காரி அவள்..!! அவளது ஆருயிர்க் காதலனான.. என்னுடன் சாதாரன ஒரு இரவு மோகினிப்பெண் விளையாடுகிறாள் என்று தெரிந்தால்… அவ்வளவுதான்.. உன் நிலமை..!!” என நான்.. அளந்து விட்டேன்.