என் காதலி Part 9 100

என்று நினைத்து கொண்டு சுவாதி என்று சத்தமாக சொல்லி கொண்டு அவள் கிட்டே போனான் .அவள் மெல்ல என்ன விக்கி என்று திரும்பி கேட்க அவள் கண்களை நேருக்கு நேரே பார்த்த உடன் விக்கிக்கு திட்டும் மூடெ போயி விட்டது .சிறிது வினாடி அவள் கண்களையும் அவள் முகத்தையும் மட்டும் பார்த்து கொண்டு இருந்தான் .பின் மறுபடியும் என்ன விக்கி என்ன விஷயம் என்று சுவாதி கேட்கவும் நார்மாலகி விட்டு கேட்டான் .

ஹ என்ன ஆபிஸ் போகலையா நீ என்றான் .டேய் என் வயித்த பாருடா நல்லா பெருசு ஆகிடுச்சு .இப்ப போயி ஆபிஸ்க்கு ஆட்டோளையும் பஸ்லயும் போயிகிட்டு இருந்தேன்னா அப்புறம் எதாச்சும் ஆனாலும் ஆகிடும் .நான் இப்ப வாழ்றதே இதலாதான் என் குழந்தைக்கு எதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் அவளவுதான் என்று சொல்லி விட்டு அமைதி ஆனாள் .

யே நீ வேணும்னா டெய்லி என் கூட கார்ல வா நான் உன்னையே ஆபிஸ்ல விட்டுட்டு திரும்ப வரும் போதும் நானே வந்து கூப்பிட்டுக்கிரென் என்றான் .ம்ம் அது வேணாம் என்றாள் .ஏன் என் கூட வர பிடிக்கலையா என்றான் .டேய் அப்படி இல்லடா நான் எதுக்கு ரிஸ்க்ன்னு வேலைய விட்டு நின்னுட்டேன் .அது மட்டும் இல்லாம எல்லாரும் எப்படி கன்சீவ் ஆன யாரு குழந்தைக்கு அப்பான்னு கேப்பாங்க தேவையா எனக்கு அது அதான் வேலைய விட்டு நின்னுட்டேன் .

பேங்க்ல இருந்து கொஞ்சம் பணம் எடுத்துகிட்டேன் .அதுனால கனடா போற வரைக்கும் ஒரு ப்ராப்ளமும் இல்ல என்றாள் .உனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல நீ போற வரைக்கும் எனக்குதான் எல்லா ப்ராப்ளமும் என்று மனதில் நினைத்து கொண்டு ஓகே நான் போயிட்டு வரேன் சுவாதி என்று சொல்லிவிட்டு போக பார்த்தான் .டேய் இருடா ஒரு நிமிஷம் என்றாள் .என்ன என்றான் .

சாப்பிட்டு போ டிபன் சீக்கிரமே பண்ணி வச்சுட்டேன் ரெடியா இருக்கு என்றாள் ,வேணாம் இருக்கட்டும் ஆபிஸ்க்கு லேட் ஆகிடுச்சு அதுனால கிளம்புறேன் என்றான் .டேய் சும்மா சாப்பிடு நீதான் கார் வச்சு இருக்கேளே ஒரு நிமிசத்துல போயிட மாட்ட அதுனால சாப்பிடு என்றாள் . அப்படிங்கிற சரி கொடு சாப்பிடறேன் என்றான் .

அவள் கஷ்டப்பட்டு எழ போவதை பார்த்து விக்கி இரு நானே எடுத்துக்கிறேன் என்றான் .பின் கிச்சனில் போயி டிபன் எடுத்து சாப்பிட்டு கொண்டே அவள் பக்கத்தில் வந்தான் .அப்புறம் இனிமேல் புல்லா வீட்லதான் இருக்க போறியா என கேட்டான் .யே நீ ஒன்னும் நான் இருக்கதால எவளையும் கூப்பிட முடியாதுன்னு நினைக்காத நீ எப்பயும் போல எவள வேணும்னாலும் கூப்பிட்டு வா வரர்துக்கு முன்னாடி நான் அன்னைக்கு சொன்ன மாதிரி எனக்கு ஒரு sms அனுப்பிடு என்றாள் .

sms எல்லாம் நான் கரெக்ட்டா அனுப்பிருவேன் . ஆனா நீதான் சத்தம் போட்டு வாந்தி எடுத்து எல்லாத்தையும் கெடுத்து விட்டுருவ அதுவும் சரியா எல்லாம் செட் ஆகுறப்ப வாந்தி எடுத்து கெடுத்து விட்டுற என்றான் .யே டாக்டர் கொடுத்த மருந்த கரெக்ட்டா சாப்பிடறதால இப்ப அவளவா வாந்தி வர்றது இல்ல .அதையும் மீறி வாந்தி வந்தா என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்றாள் .

என்ன ஐடியா சொல்லு சொல்லு என்றான் .அலையாதடா பெருசா ஒன்னும் இல்ல நான் ரூம பூட்டிட்டு குழாயையும் நல்லா தொறந்து விட்டா அவளவா வாந்தி சத்தம் கேக்காது அதையும் மீறி நீ கூப்பிட்டு வந்த பிகர் எதுவும் கேக்குதுன்னு சொன்னான்னா அது தெரியாம குழாயை தொறந்து விட்டேன் இப்ப சரி பண்ணிறேன் சொல்லி சமாளிச்சு என்ஜாய் பண்ணு என்னைய நினைச்சு இனி நீ பயப்பட வேணாம் என்றாள் .

ஓகே ஐடியா பரவல நான் யூஸ் பண்ணிக்கிறேன் .நீ பாத்து இரு எத ஆச்சும்னா எனக்கு போன் அடி நீயும் எனக்கு பயப்பட வேணாம் என்றான் . ம்ம் ஓகே டீல் see இதான் நல்ல இருக்கு நமக்குள்ள இப்படி ஒரு நல்ல பிரண்ட்ஷிப் மட்டும் இருக்கறது எவளவு நல்லா இருக்கு என்றாள் .

அங்கிட்டு போடி என்று மனதில் நினைத்து கொண்டு ஆமா ரொம்ப நல்லா இருக்கு என்று பொய்யாக சொல்லி விட்டு நான் வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினான் .

பின் விக்கி ஆபிஸ் போனான் . வழக்கம் போல வேலைகளை ஓரளவு முடித்து விட்டு சிறிது ஓய்வு கிடைத்த போது சுவாதி சொன்னதை யோசித்து பார்த்தான் .

1 Comment

  1. Keep going, nice flow now… Well done. Waiting for next part!

Comments are closed.