விக்கி ஸ்டீரிங்கில் சாய்ந்து முதன் முதலில் சுவாதியை பார்த்தது ஞாபகத்திற்கு வந்தது .அது ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவளை முதன் முதலில் பார்த்ததை நினைத்து பார்த்தான் .
அப்போது எல்லாம் விக்கி டேவிட் மணி மற்றும் வள்ளி என எல்லாரும் அப்போது எப்போதும் ஒன்றாக சனி ஞாயிறு எங்காச்சும் போவார்கள் அப்போது எல்லாம் விக்கிக்கு ஒரு பொன்னை கரெக்ட் பண்ண போகிறான் என்றால்
அந்த பொன்னை கரெக்ட் பண்ணுவதற்கு முன்பு எப்போதும் அவன் கூடவெ இருக்கும் அவன் பெஸ்ட் பிரண்டான டேவிடை கூப்பிட்டு தூரத்தில் இருந்து இருவரும் பார்த்து இருவரும் நன்கு சைட் அடித்து விட்டு டேவிட் ஓகே நோ என்று சொல்லி இருவரும் அந்த பொண்ணுக்கு மார்க் போட்டு விட்டு கிண்டல் அடித்து சிரித்து கொண்டு இருப்பார்கள் . அதன் பின் தான் விக்கி கரெக்ட் பண்ணவே போவான் .
அன்றும் ஒரு ஞாயிற்று கிழமை எல்லாரும் மாலுக்கு செல்லும் முன் டேவிட் மணி வீட்டில் வைத்து சொன்னான் .இன்னைக்கு உங்க எல்லாத்துக்கும் நான் கண்டிப்பா சுவாதிய introduce பண்ணி வைக்கிறேன் என்று சொன்னதும் எல்லாரும் ஹ என்று கத்தினார்கள் . அதற்கு முன்பு டேவிட் சுவாதி என்ற ஒரு பெண்ணை காதலிப்பதாக அவர்களிடிம் இரண்டு வாரங்களுக்கு முன்பு எல்லாரிடமும் சொல்லி இருந்தான் .ஆனால் சுவாதி பிஸி ஆக இருந்ததால் டேவிட் அவர்கள் யாருக்கும் இன்னும் சுவாதியை அறிமுகப்படுத்தவில்லை .
அதான் அவன் introduce பண்ணி வைக்கிறேன் என்று சொன்னவுடன் எல்லாரும் கத்தினார்கள் .
அப்பா இனிமேல் ஆச்சும் மும்பைல தமிழ் பேச தெரிஞ்ச பொண்ணு ஒருத்தி எனக்கு பேச துணைக்கு கிடச்சா என்றாள் வள்ளி சந்தோசமாக . ஆமாடா நீயும் லைப்ல என்னையே மாதிரியே செட்டில் ஆக போறத நினச்சா சந்தோசமா இருக்கு என்றான் மணி .
உன்னையே மாதிரியே புதை குழில விழ போறான்னு சொல்லு என்று மணியை விக்கி மனதிற்குள்ளே திட்டி கொண்டு இப்ப ஏன் டேவ் வெட்டியா லவ் பண்றான் சரி நம்ம எதாச்சும் சொன்னா நம்மள எல்லாரும் திட்டுங்க நம்ம இதுகள கண்டுக்காமா சீக்கிரம் மாலுக்கு போயி எவலயைச்சும் கரெக்ட் பண்ணுவோம் என்று விக்கி நினைத்து கொண்டான் .சரி சரி வாங்க முதல மாலுக்கு போவோம் அங்கதான் அவள வர சொல்லிருக்கேன் என்றான் டேவிட் , சரி என்று எல்லாரும் கிளம்பினார்கள் .
அங்கு மாலுக்கு போன உடன் எல்லாரும் ஒரு இடத்தில சுவாதிக்காக காத்து உக்காந்து கொண்டு இருந்தனர் . அப்போது டேவிட் அவளுக்கு போன் பண்ணி விட்டு வந்து எல்லாரிடமும் சொன்னான் சாரி அவ டிராபிக்ல மாட்டிகிட்டலாம் அதுனால வர எப்படியும் முக்கால் மணி நேரமாகுமாம் அதுனால என்று இழுத்தான் . இன்னைக்கு எவளவு நேரமானாலும் பரவல உன் வருங்கால மனைவிய பாத்துட்டுதான் போறோம் என்றான் மணி .ஆமா கரெக்ட் என்றாள் வள்ளி .
Keep going, nice flow now… Well done. Waiting for next part!