என் காதலி Part 4 113

சுவாதி அஞ்சலி கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லமால் அமைதியாக இருந்ததால் சரி நீ என்னையே அக்கான்னு கூப்பிடுரத வச்சு நீ உண்மைலயே என்னையே உன் அக்காவாதான் பாக்குறேன்ன்னு நினைச்சேன்.

ஆனா நீ அப்படி நினைக்கல போல சரி நான் வெளிய போயிட்டு வரேன் . இனிமேல் என்கிட்ட எதுவும் பேசாத என்று அஞ்சலி வருத்ததோடு சொல்லிவிட்டு கிளம்பும் முன்

சுவாதி அவர்களை தடுத்து அஞ்சலி தோளில் சாய்ந்து அழுதுகொண்டே அக்கா போகாதிங்க அக்கா என்று அவர்களை கட்டிபிடித்து அழுதாள் .சரி அழுகாதடி வந்து உக்காரு என்று அவளை சமாதனபடுத்தி அஞ்சலி உக்கார வைத்தார் ,அவள் இன்னும் அழுது கொண்டு இருந்தாள் .

சரி சொல்லு நீ கர்ப்ப்மாதான இருக்க என அஞ்சலி கேட்க சுவாதி ஆமாம் என்பது போல தலை மட்டும் ஆட்டினாள் . யார் உன் கர்ப்பத்துக்கு காரணம் உன் பழைய லவ்வர் டேவிட்டா என அஞ்சலி கேட்க்க உடனே சுவாதி அய்யோ இல்லக்கா என்றாள் . அப்ப யாரு என அஞ்சலி கேட்க சுவாதி தலையை குனிந்து கொண்டே விக்கி என்றாள் மெல்ல .என்னது மக்கியா என புரியமால் கேட்டாள் அஞ்சலி

மக்கி இல்லக்கா விக்கி விக்னேஷ் என்றாள் சுவாதி. ம்ம் ஏதோ ஒன்னு . ஓகே யாரு அவன் உன் கூட வேலை பாக்குரவனா என கேட்டார் அஞ்சலி . இல்ல என்றாள் .அப்ப யாரு அவன் என கேட்க அவன் டேவிடோட பிரண்டு என்று சுவாதி சொன்னாள் ,

ம்ம் என்ன நீங்க ரெண்டு பேரும் இப்ப லவ் பண்றிங்களா ரிலெசன்ஷிப்ல இருக்கிங்களா என அஞ்சலி கேட்க

இல்லக்கா என்றாள் சுவாதி .அப்புறம் எப்படிடி இப்படி ஆச்சு என கேட்டாள் . டேவிட் கல்யாணம் அன்னைக்கு நான் பிலிங் ஆகி பப்ல ஓவரா குடிச்சுட்டு கிடந்தேன் . அப்ப அவன் தான் என்னையே தாங்கி கூப்பிட்டு போனான் .இங்க நம்ம ஹோஸ்டலுக்கு குடிச்சதால வர முடியல அதனால அவன் ரூமுக்கு போனேன் அப்பதான் இது நடந்துச்சு என்றாள் சுவாதி .

என்ன நீ குடிச்சத வச்சுக்கிட்டு அவன் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டு இப்படி பண்ணிட்டனா என அஞ்சலி கேட்டாள் .இல்லாக்கா அன்னைக்கு அக்சுவலா அன்னைக்கு நான்தான் குடி போதைல அவன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டேன் .அவன் வேனாம்தான் சொன்னான் .

அதன் பின் சிறிதுநேரம் இருவரும் அமைதியாக இருந்து விட்டு அஞ்சலி கேட்டாள் நீ இப்படி ஆயிருக்கது அவனுக்கு தெரியுமா என கேட்டாள் . ம்ம் தெரியும் என்றாள் சுவாதி.என்ன சொன்னான் என கேட்டார் அஞ்சலி . என்ன சொன்னான் அபார்சன் பண்ண சொன்னான் வேற என்ன சொல்வான் என்றாள் சுவாதி ஒரு விரக்தியோடு .