தன் வருங்கால கணவன் தன்னிடம் போன் நம்பர் வாங்கிய முறை பவித்ராவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றாலும், எப்படியோ தன் நம்பரை வாங்கி விட்ட அவன் இன்று கண்டிப்பாக ஒரு மெசெஜாவது அனுப்புவான் என்று நினைத்து இரவு படுக்கைக்கு வந்ததிலிருந்து தூங்காமல் வைத்திருந்தாள். அன்று அவள் தன் வருங்கால கணவனிடமிருந்து கண்டிப்பாக போனோ மெசெஜோ வரும் என்று தெரிந்து வைத்திருந்ததால் அவள் மனம் ஒரு வித பதட்டத்தில் தான் இருந்தது. அதனால் அவள் அன்று சீக்கிரமாகவே படுக்கைக்கு வந்து விட்டாள். படுக்கையறை கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டு போனை கையில் வைத்துக் கொண்டு உடலில் எதோ குறுகுறுக்க அவள் காத்திருக்க, அவள் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
ஹாய் என்று ஒரு புது நம்பரிலிருந்து மெசெஜ் வந்தது. உண்மையில் அவளுக்கு அது புது நம்பர் இல்லை. அவளுக்கு தான் ரமேஷ் நம்பர் தெரியுமே. அதை அவள் அப்போதே மை லைஃப் என்று சேவ் பண்ணி விட்டாள். அதனால் ரமேஷ் நம்பரிலிருந்து ஹாய் என்று மெசெஜ் வந்ததும் அவள் அது தன் வருங்கால கணவன் தான் என்று தெரிந்துக் கொண்டாள்.
ஆனால் வேண்டுமென்றே ஹலோ… யார் நீங்க? புது நம்பரா இருக்கு. எதுக்கு எனக்கு மெசெஜ் பண்ணுனீங்க? என்று மடமடவென்று டைப் அடித்து வரிசையாக மெசெஜ் அனுப்பினாள்.
ரமேஷ் : நான் தாங்க ரமேஷ்.
பவித்ரா : ரமேஷா? யார் அது? எனக்கு அப்படி யாரையும் தெரியாதே?
ரமேஷ் : நான் தாங்க உங்களை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை.
பவித்ரா : என்னது? கல்யாணம் பண்ணிக்க போறீங்களா? ஹலோ… யார் சொன்னாங்க அப்படி?
ரமேஷ் : என் அப்பா அம்மா தான் சொன்னாங்க. நீங்க ஓகே சொல்லிட்டீங்கன்னு…
பவித்ரா : ஓகே சொல்லிட்டா இப்படி அன் டைம்லே மெசெஜ் பண்ணுவீங்களா? இருங்க போனை என் அப்பா கிட்டே தரேன்.
ரமேஷ் : ஐயோ வேணாங்க. நான் ஒரு ஆர்வத்திலே மெசெஜ் பண்ணிட்டேன். ஸாரி…
இயல்பாகவே குறும்புக்கார பெண்ணான பவித்ரா சும்மா தன் வருங்கால கணவனை கலாட்டா பண்ண தான் அப்படி எல்லாம் ரிப்ளை பண்ணினாள். ஆனால் அவன் இவ்ளோ பயந்தாங்கொள்ளியாக இருப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் மிரட்டியதும் அவன் ஸாரி சொல்லி விட்டு ஆஃப் லைனே போய் விட்டான். பவித்ராவுக்கு ரொம்பவே ஏமாற்றமாக போய் விட்டது. ச்சே… என்ன இவன் இவ்ளோ பயந்தாங்கொள்ளியாக இருக்கிறான் என்று யோசித்தவள் தன்னையும் திட்டிக் கொண்டாள். பாவம் எவ்ளோ ஆசையா மெசெஜ் பண்ணி இருப்பார். தேவையில்லாம கலாட்டா பண்ணி இப்ப ஓடி போயிட்டார் என்று தன்னை தானே திட்டிக் கொண்டு படுக்கையில் விழுந்தாள்.
அடுத்த நாள் பவித்ரா தாங்க முடியாமல் அவளே ஹாய் என்று ரமேஷுக்கு மெசெஜ் அனுப்பினாள்.
ரமேஷ் : ஹாய்ங்க…
பவித்ரா : அதென்ன ஹாய்ங்க… ஹாய் சொன்னா ஹாய்ன்னு மட்டும் சொல்லுங்க… ங்க எல்லாம் வேண்டாம்.
ரமேஷ் : சரிங்க….
பவித்ராவுக்கு ஒரே சிரிப்பு. கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் பெண்ணை இவ்வளவு மரியாதையாக வார்த்தைக்கு வார்த்தை ங்க போட்டு மெசெஜ் பண்ணுகிறானே. ரொம்ப நல்லப் பையன் என்று நினைத்துக் கொண்டாள்.
பவித்ரா : பார்றா… திரும்பவும் ங்கவா? சரி என்ன நேத்து நைட் மெசெஜ் பண்ணிட்டிருக்கும் போதே சொல்லாம கொள்ளாம ஆஃப் பண்ணிட்டு போயிட்டீங்க. இப்படிதான் சொல்லி கொடுத்திருக்காங்களா உங்க அப்பா அம்மா? மேனர்ஸ் எல்லாம் கத்து குடுக்கலையா?
ரமேஷ் : நீங்க தானேங்க அப்பா கிட்டே சொல்றேன்னு மிரட்டுனீங்க.
பவித்ரா : அது சும்மா…
ரமேஷ் : சும்மாவா?
பவித்ரா : ம்…
ரமேஷ் : அப்ப உங்களுக்கு என் கூட பேச விருப்பம் தானே?
பவித்ரா : ம்…
ரமேஷ் : எல்லாத்துக்கும் ம் தானா? ஏன் எல்லா பொண்ணுங்களும் இப்படி இருக்கீங்க?
பவித்ரா : ஓ… அப்ப ஐயா நிறைய பொண்ணுங்க கூட சாட் பண்ணுவீங்களோ?
ரமேஷ் : ஐயையோ… இல்லைங்க… நான் ரொம்ப நல்ல பையன். என் ப்ரண்ட்ஸ் தான் சொல்வாங்க. பொண்ணுங்க எல்லாத்துக்கும் ம்… ம்… ம்… னு மட்டும் தான் ரிப்ளை பண்ணுவாங்கன்னு.
பவித்ரா : உங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் உங்களை விட விவரமான ஆளுங்களா இருப்பாங்க போல…
ரமேஷ் : ஆமாங்க… ஒவ்வொருத்தனும் இரண்டு மூணு பொண்ணுங்களை கரெக்ட் பண்ணி வைச்சிருக்கானுங்க. எப்பவும் சாட் தான்.
பவித்ரா : ஆனா உங்க ப்ரண்ட்ஸ் ரொம்ப கெட்ட பசங்களா இருப்பாங்க போல. அவங்க கூட எல்லாம் சேராதீங்க.
ரமேஷ் : சரிங்க…
பவித்ரா : எல்லாத்துக்கும் சரிங்க தானா? என்னை கொறை சொன்னீங்க… ம்… ம்… ம்… மட்டும் சொல்றேனேன்னு.
ரமேஷ் : பவித்ரா…
பவித்ரா : ம்…
ரமேஷ் : நீ ரொம்ப அழகா இருக்கடி…
பவித்ரா : என்னது டியா? ஓய் மிஸ்டர்… என்ன ஆரம்பத்திலே ங்க ங்கன்னு ரொம்ப மரியாதையா பேசிட்டு இப்ப மெதுவா டி போட்டு பேசி பார்க்குறீங்க.
ரமேஷ் : நான் கட்டிக்க போற பொண்ணு தானே…
பவித்ரா : அதுக்காக… இப்ப தான் பேச ஆரம்பிச்சிருக்கோம். அதுக்குள்ளே டியா?
ரமேஷ் : ஓ… அப்படியா? அப்ப ஒரு நாலு நாள் கழிச்சு டி போட்டா ஓகேவா?
பவித்ரா : பரவால்லே… இப்பவே போடுங்க…
ரமேஷ் : என்னது?
பவித்ரா : என்ன என்னது?
ரமேஷ் : இப்ப என்ன சொன்னீங்க?
பவித்ரா : என்ன சொன்னேன்?
பவித்ராவுக்கு உண்மையில் புரியவில்லை. என்ன சொல்கிறான் இவன் என்று குழம்ப…
ரமேஷ் : நீங்க கடைசியா அனுப்புன மெசெஜ் படிச்சுப் பாருங்க…
பவித்ரா மெசெஜ் எல்லாம் ஸ்க்ரோல் செய்து படித்து பார்த்தும் அவளுக்கு எதுவும் புரியவில்லை.
பவித்ரா : எனக்கு ஒண்ணும் புரியலை. நீங்களே சொல்லுங்க…
ரமேஷ் : சரி விடுங்க… நீங்க ரொம்ப நல்ல பொண்ணு. இவ்ளோ அப்பாவியா இருப்பீங்கன்னு நினைக்கலை.
பவித்ரா : இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?
ரமேஷ் : ஐயோ… இப்ப வேண்டாங்க. நீங்க டென்சனாகிட்டீங்க. அப்புறமா சொல்றேன். இப்ப வேற பேசுங்க.
பவித்ரா : சாப்டீங்களா?
ரமேஷ் : ஹா… ஹா…
பவித்ரா : என்ன இளிப்பு?
ரமேஷ் : இல்லை அதென்ன சாட்ன்னாலே சாப்டீங்களா? தூங்கலையா? அப்புறம்… இந்த மாதிரி மெசெஜ் தான் அதிகம் இருக்குமா?
பவித்ரா : ஏய்… நீங்க பேசுறதை பார்த்தா உங்களுக்கு நிறைய பொண்ணுங்க கூட கனெக்சன் இருக்கும் போல இருக்கே.
ரமேஷ் : ஐயையோ… ஏங்க அப்படி சொல்றீங்க?
பவித்ரா : மெசெஜ் எல்லாம் எப்படி இருக்கும்ன்னு ரொம்ப விவரமா பேசுறீங்களே?
ரமேஷ் : ஐயோ… இல்லைங்க… ப்ரண்ட்ஸ் சில பேரு இதிலே வீக். அவங்க பொண்ணுங்க கூட சாட் பண்ணினதை எல்லாம் எதோ சாதிச்ச மாதிரி பெருமையா சொல்லிக்குவாங்க. அதிலே தெரிஞ்சுக்கிட்டது தாங்க இதெல்லாம்…
பவித்ரா : நம்பிட்டேன்.
ரமேஷ் : ஐயோ… நானா வம்பிலே மாட்டிக்கிட்டனா? நம்புங்க. நான் அப்படியெல்லாம் யார் கூடவும் பழக்கம் வைச்சிக்கிட்டதில்லை. என் ப்ரண்ட்ஸ் சில பேர் மட்டும் தான் இதிலே கொஞ்சம் வீக்…
பவித்ரா : நீங்க ரொம்ப ஸ்ட்ராங்கோ?
ரமேஷ் : என்ன கேட்டீங்க?

Not worth reqding this story. Very bore