அசுரன் Part 5 65

“இங்க பாருங்க மேடம்,என்னை மாதிரி ஆளுங்கள மோசமானவங்க.விளைவுகள் ரொம்ப மோசமானதாக இருக்கும் பார்த்துங்க..”

“உங்களை மாதிரி ஆட்கள நிறைய பேரை பார்த்து இருக்கேன் சார்.எதுக்கும் நானும் தயாரா இருக்கேன்.”

அதிகாரிகள் ரெய்டு பண்ணி விட்டு வந்து ஒன்றும் சிக்கவில்லை என்று கூறினார்கள்.

மனுநீதி சிரித்தான்.”நான் தான் சொன்னேனே மேடம்.நான் எதுவும் பண பரிமாற்றம் எதுவும் பண்ணல..சும்மா யாரோ பரப்பிய வதந்தியை நம்பி என்னை சந்தேகப்படறீங்க”

அனு சென்று ஒரு தடவை வீடு முழுக்க நோட்டம் விட்டாள்.அவளுக்கு ஒன்று மட்டும் கண்களை உறுத்தியது..

“என்ன இது ஒரே வீட்டில் நாலு ப்ரீட்ஜ் இருக்கு..அதுவும் எல்லா ஃப்ரிட்ஜ் சுவற்றுக்குள் இருக்கு.”இதில் என்னமோ இருக்கு என சந்தேகம் வந்தது.

முதல் ஃப்ரிட்ஜ்ஜை திறந்து பார்த்தாள்.அதில் ஒன்றும் இல்லை.
இரண்டாவது ஃப்ரிட்ஜ்ஜை திறந்து பார்க்க அதில் சுத்தமாக கூலிங் இல்லவே இல்லை.

உடனே அதிகாரிகளுக்கு கட்டளை இட்டாள்..”இந்த ஃப்ரிட்ஜ்ஜை உடனே ரிமூவ் பண்ணுங்க” என ஆர்டர் போட்டாள்.

உடனே மனுநீதிக்கு உடல் வியர்த்தது.அந்த ஃப்ரிட்ஜ் வெளியே எடுத்தவுடன் பின்னாடி லாக்கர் இருந்தது.அதை உடைக்க கட்டு கட்டாக பணம் சிக்கியது.அதே போல் இன்னொரு ஃப்ரிட்ஜ் எடுக்க அதற்கு பின்னாடியும் லாக்கர் இருந்தது.அதிலும் கட்டு கட்டாக பணம் சிக்கியது.

பணத்தை எண்ண முடியாமல் அவர்கள் கொண்டு வந்த மெஷினே சூடாகி செயல் இழந்தது..

மேடம் கேஷ் எண்ணுகிற மெஷின் போய்டுச்சு மேடம்.வேற மெஷின் தான் கொண்டு வரணும்..

வேண்டாம் தனபால்,அய்யா தோட்டத்தில் ஒரு பெரிய வெயிட் வெயிட் மெஷின் இருக்கு பாருங்க,அதை கொண்டு வாங்க..இப்போ வரை எவ்வளவு எண்ணி இருக்கீங்க.

நூறு கோடி ரூபாய் மேடம்..

அதை அப்படியே எடுத்து வெயிட் மெஷின் மேலே வைங்க..

வரும் எடையை அனு குறித்து கொண்டாள்.

அடுத்து மீண்டும் அதே அளவு எடைக்கு பணக்கட்டுகளை வைக்க சொன்னாள்.இப்படி பார்க்கும் பொழுது மொத்தமாக 900 கோடி சிக்கியது..

உடனே அனு தன் உயர் அதிகாரிக்கு ஃபோன் செய்தாள்.

……….

ஆமா சார்,ஒரிசா mp வீட்டில் கிடைத்ததை விட மூணு மடங்கு.மொத்தம் 900 கோடி.

…….

ஓகே சார்.

Mr.மனுநீதி. பேர பாரு.யோக்கியன் மாதிரி பேச்சை பாரு.மொத்தம் உங்க வீட்டில் 900 கோடி பறிமுதல் செய்து இருக்கோம்.கையெழுத்து போடுங்க..கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வரும்.வந்து ஆஜராகுங்க..

மனுநீதி ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தான்.வேறு வழி இல்லாமல் கையெழுத்து போட்டான்.

அனு மற்றும் அதிகாரிகள் போன பிறகு உடனே ஒரு நபருக்கு ஃபோன் செய்தான்.

ஹலோ நான்தான்யா..

…………..

இந்த நாலு வருஷத்தில் சாமி சிலை,மணல் கடத்தி சம்பாதித்த காசு எல்லாம் மொத்தமா சுருட்டி கொண்டு போய்ட்டா…

…….

அதெல்லாம் எனக்கு தெரியாது.எனக்கு உடனே அவளை பழி வாங்க வேண்டும்..

………

எனக்கும்,உனக்கும் மட்டும் தெரிந்த இந்த பண பரிமாற்ற ரகசியம் எப்படி வெளியே தெரிந்தது.கண்டிப்பா என் பக்கம் இருந்து லீக் ஆக வாய்ப்பு இல்லை.உன் பக்கம் இருந்து தான் லீக் ஆகி இருக்கு.