“ப்ப்ப்பா…இவ்வளவு அழகான பெண்கள் கூட இந்த உலகில் இருக்காங்களா..என அவள் அழகில் ஒரு நிமிடம் சொக்கி போய் நின்றான்..
அழகிய ஜரிகை வேலைப்பாட்டுடன் கூடிய ஒரு அழகிய சுடிதாரை அணிந்து இருந்தாள்.அந்த ஆடை அணிந்ததால் அவள் அழகா?இல்லை அவள் அணிந்து இருப்பதால் அந்த ஆடை அழகாக தெரிகிறதா என்று அறிவுக்கு தெரியவில்லை.தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல இருந்தாள்.கழுத்தில் இருந்த மஞ்சள் தாலியின் ஈரம் இன்னும் காயக்கூட இல்லை.அழகான கோள முகம்,அதில் அடர்த்தியான புருவம் இரு பக்கமும் வளைந்து இருந்தது. கோள முகத்திற்கு ஏற்றவாறு நீண்ட மூக்கு.அப்பப்பா இதழ்கள் சொல்லவே வேண்டாம்.அந்த இதழ்கள் எந்த வித பூச்சும் இல்லாமல் சிவந்து இருந்தது.அவள் மார்பின் மீது அழகாக ஆனால் அவள் உருவத்திற்கு ஏற்றவாறு எடுப்பாக இருந்தது. ஒரு நிமிஷம் இடுப்பு இருக்குதா..இருக்கு,ஆனால் மெல்லிய இடுப்பு.சாதாரண பெண்களை காட்டிலும் சற்றே உயரம்.கலர் நல்ல கோதுமை நிறம்.பார்க்க நல்ல அரபியன் குதிரை மாதிரி இருந்தாள்.
அவளின் புருஷன் “அப்புறம் எதுக்கு அனு,இவனுங்க இருக்காங்க..நீ வா மேலே போலாம்” என்று அவளை எதிர்பார்க்காமல் விறுவிறுவென மேலே சென்று விட்டான்.
ஆனால் அனுவுக்கு மனசு கேட்கவில்லை.”நீங்க கொடுங்க அண்ணா”,என்று ஒரு சூட்கேஸை வாங்கி கொண்டாள்.
“லிஃப்ட் இல்லையா..”என கேட்டாள்.
“இருக்கு மேடம்,ஆனால் புது அபார்ட்மெண்ட் என்பதால் வேலை இன்னும் முடியல.பெயின்டர்ஸ் எல்லாம் அதை அதிகமா பயன்படுத்துவதால் சீக்கிரமே குப்பை பண்ணிடாறங்க.அதனால் செக்கரட்டரி ஆஃப் பண்ணி வைச்சு இருக்காரு..”
“பாவம் அவங்க பொருட்கள் எடுத்து செல்ல லிஃப்ட் use பண்ணுவாங்க.அடிக்கடி மூணு மாடி ஏறி இறங்க அவர்களுக்கும் கஷ்டமா தானே இருக்கும்.”என அவர்களுக்காக அனு பரிதாபப்பட்டாள்.
மேடம் எல்லாரும் உங்களை மாதிரி இருந்துட்டா பிரச்சினையே இல்ல..நீங்க அழகா மட்டும் இல்ல,ரொம்ப கனிவா அன்பா பேசறீங்க..எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு.
“ம்ம்…என்னை மேடம் என்று சொல்லி கூப்பிடாதீங்க..நான் உங்களை விட சின்ன பொண்ணு தான்,என்னை அனு என்றே நீங்க பேர் சொல்லி அழைக்கலாம்.”என்று பேசி கொண்டே வந்ததில் மூன்றாவது மாடி வந்து விட்டது.
வினய் அவள் சூட்கேஸ் தூக்கி வருவதை பார்த்து,”ஏய் இடியட் உன்னை தானே லக்கேஜ் எடுத்து வர சொன்னேன்”என அவனை அடிக்க கை ஓங்க,அதை அனு தடுத்தாள்.
“ஸ்டாப் இட் வினய்..நான் தான் அவர்கிட்ட இருந்து லக்கேஜ் வாங்கி கொண்டு வந்தேன்.பாவம் அவர் எப்படி மூணு மாடி ரெண்டு சூட்கேஸ் தூக்கிட்டு வருவார்.மற்றவர் கஷ்டத்தையும் கொஞ்சம் பாரு..”
வீணாக வாட்ச்மேன் முன் வாக்குவாதம் எதற்கு, வினய் விலகி சென்று விட்டான்.
அனு அறிவிடம் மன்னிப்பு கேட்டாள்.
“அய்யோ அனு மேடம்,சாரி எல்லாம் கேட்காதீங்க..என்னை மாதிரி ஆட்களிடம் பெரும்பாலானோர் இப்படி தான் நடந்துக்குவாங்க.எனக்கு இது பழக்கம் ஆயிடுச்சு.வேறு ஏதாவது உதவி வேணும் என்றால் கூப்பிடுங்க வந்து செய்யறேன்.வரேன் மேடம்” என்று சென்று விட்டான்..
மூன்று மாடி ஏறி வந்த களைப்பில் வினய் போய் படுத்து விட்டான்.
வீட்டுக்கு தேவையான சாமான்கள் ஏற்கனவே வந்து பேக்கர்ஸ் மூலம் அவன் அப்பா அம்மா மூலம் ஏற்கனவே செட் செய்யபட்டு இருந்தது.அதில் சின்ன சின்ன மாறுதல்கள் அனு செய்தாள்.சூட்கேஸில் இருந்த பொருட்கள் எல்லாம் அவளே தனியாக அழகுற எல்லாம் அடுக்கி வைத்து விட்டாள்.
கட்டிலில் படுத்து இருந்த வினய்யிடம் “ஏண்டா ஒரு புது பொண்டாட்டி தனியா கஷ்டப்படுறாளே வந்து கொஞ்சம் உதவி செய்யக்கூடாதா..”
