அசுரன் Part 5 65

“போடி…எனக்கே ஊரில் வந்து டயர்டா இருக்கு.”

“எனக்கும் அதே மாதிரி தானே இருக்கும்.அதுக்கு தான் உடம்பை ஃபிட் ஆக வச்சு இருக்கணும்.ஜிம்முக்கு என் கூட வா என்றாலும் வர மாட்டேன்றே..”

“இங்க பாரு புது வருஷம் பிறக்கட்டும்,நானும் உன்கூட ஜிம்முக்கு வரேன்..”

“அப்போ நம்மோட முதல் இரவு டிசம்பர் 31 முடிந்த பிறகு அடுத்த நாள் என்கூட ஜிம்முக்கு வரே ஓகேவா..”

“வரேன்.என் அப்பா,அம்மா முன்னாடி இந்த முதல் இரவு மேட்டர் உளறி வச்சிடாதே..அப்புறம் அவங்க ஏன் குறித்த முகூர்த்ததில் ஏன் முதல் இரவு நடக்கல என்று சொற்பொழிவு ஆத்த தொடங்கிடுவாங்க..எனக்கு புது வருஷம் பொறக்கும் போது புது வீட்டில் என் புது பொண்டாட்டியோடு முதல் இரவு நடக்கணும்..”

“சரி சரி.டிவிக்கு ரீசார்ஜ் பண்ணு..”

இரவு அனு,வினய் தூங்கி கொண்டு இருக்க அனுவின் ஃபோன் கால் அழைத்தது.அதை அனு எடுக்க

“ஹலோ சார்,,”

………….

“ஓகே சார்,நான் உடனே ஸ்பாட்டுக்கு கிளம்பறேன்.”

…………

“சார்,அப்புறம் இந்த மத்திய ரிசர்வ் படை கொஞ்சம் வேணும்.போன தடவை ஆன மாதிரி இப்போ ஆக கூடாது..”

………….

“அப்ப ஓகே சார்” என போனை வைத்தாள்.

“யார் அனு இந்த நேரத்தில்.?”

“என் உயர் அதிகாரிடா,உடனே அமைச்சர் மனுநீதி வீட்டுக்கு உடனே ரெய்டு போக சொன்னாங்க..”

“அது காலையில் போகலாம் இல்ல.”

அனு எழுந்து உடை மாற்றி கொண்டே,”நான் காலையில் சாவகாசமாக போய் ரெய்டு பண்ணா அவனுங்க அதற்குள் பதுக்கி விடுவாங்க..பதுக்கி இருந்த 2000 ரூபா நோட்டு இப்போ கோடிக்கணக்கில் மாத்தி இருக்காங்க..”

“2000 ரூபா தான் அக்டோபரில் இருந்து செல்லாது என்று சொல்லி இருக்காங்களே..”

“ஆமாம்,ஆனா கோவிலுக்கு வரும் உண்டியல் பணம் மட்டும் இந்த டிசம்பர் 31 வரை மாத்திக்கலாம் என அனுமதி இருக்கு.இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மூலமா இந்த அமைச்சர் 2000 ரூபா மாத்தி இருக்கான்.எப்படியும் ஒரு பெரிய அமௌண்ட் சிக்கும் என நினைக்கிறேன்.”

“இந்த வேலை வேண்டாம் என்று சொன்னால் நீ கேட்கறீயா.வீணாக பெரிய பெரிய ஆளை எல்லாம் எதிர்க்க வேண்டி இருக்கு…”

“இங்க பாரு வினய்,இந்த வேலை நான் விரும்பி சேர்ந்து கொண்ட வேலை.இந்த வேலைக்காக உன்னை பிரிய நேர்ந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன்” என சொல்லிவிட்டு அனு கிளம்பி விட்டாள்.

அனு ஒரு அமலாக்க துறை அதிகாரி.

அமைச்சர் மனுநீதி வீட்டில் ரெய்டு நடந்து கொண்டு இருந்தது

“என்ன மேடம் சொன்னா கேட்க மாட்டேன்றீங்க.என் பேரே மனுநீதி.நீதிக்காக தன் மகனையே தேரில் இட்டு கொன்ற மனுநீதி சோழனின் பேரை தான் எனக்கு வச்சு இருக்காங்க..நான் போய் தப்பு பண்ணுவேனா…”

அனு அவனை முறைத்து “உங்க உண்மையான பேரு பால் பாண்டி தானே.விபச்சார ப்ரோக்கரா இருந்து யார் யாருக்கு கூட்டி கொடுத்து எப்படி அமைச்சர் ஆனீங்க… என்ற விபரம் எல்லாம் எனக்கு தெரியும்.கொஞ்சம் அமைதியா இருங்க..”