அசுரன் Part 3 46

இவளை இங்கே மடைமாற்றி விட்டு
காத்தவராயன் எங்கே சென்றான்.?
எல்லாம் காத்தவராயன் திட்டப்படியே சென்றது.காத்தவராயன் தயாராக இருந்த படைகளை திரட்டி கொண்டு கூடாரம் இட்டு இருந்த மகேந்திரபுரி படைகளின் மீது தாக்குதல் தொடுத்தான்.

எதிர்பாராத தாக்குதல் மற்றும் தலைமை ஏற்று வந்த மதிவதனி இல்லாமல் மகேந்திரபுரி படை சிக்கி சின்னாபின்னமாகியது.
கண்ணில்பட்டாரை எல்லாம் காத்தவராயன் வெட்டி வீசினான்.ஆனால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை.மகன் இறந்த கோபத்தை முழுக்க முழுக்க எதிரி படைகள் மீது காட்டினான்

கடைசியில் ஒருவனை மட்டும் உயிரோடு விட்டுவிட்டு அவனிடம்,”நான் உன்னை மட்டும் உயிரோடு விடுகிறேன்.எதற்கு தெரியுமா?உங்கள் நாட்டின் இளவரசியை நான் ஏற்கனவே கவர்ந்து சென்று விட்டேன்.இதற்கு மேல் அவள் என்னுடையவள்.அவளை தேடி கொண்டு மீண்டும் யாராவது இங்கே வந்தால் ஒருவர் உயிர்கூட மிஞ்சாது.ஒரு அற்புதமான தங்க சிலையை பெற்று எனக்கு கொடுத்ததற்காக உன் மன்னனுக்கு உயிர்பிச்சை அளிக்கிறேன்.ஒழுங்காக மிஞ்சிய நாட்டையாவது வைத்து வாழ்ந்து கொள்ள சொல்.மீறி இங்கு வந்தால் அவன் உயிரை எமனிடம் அனுப்பி விட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.செல்.சென்று இந்த காத்தவராயன் சொன்ன இந்த சேதியை சொல் என்று அவனை விரட்டினான்.

அவனும் தப்பித்தால் போதும் என தலைதெறிக்க ஓடினான்.

மதிவதனி புகை வந்த இடத்தை வந்து சேரும் பொழுதே அந்த வாயுவை சுவாசித்து அரை மயக்க நிலைக்கு சென்று விட்டாள்.அங்கு ஒரு குடிசை மட்டுமே இருந்தது.வெளியே யாரோ தீ மூட்டி இருந்தார்கள்.குடிசையில் உள்ளே நுழைந்து பார்க்க அங்கே யாரும் இல்லை.நெஞ்சு அடைத்தது.உடம்பில் இருந்து வியர்வை ஆறாய் பெருகியது.மூச்சுவிட முடியாமல் தவித்தாள்.வாசலிலேயே மயங்கி கீழே விழுந்தாள்.

சிறிது நேரம் கழித்து விழிப்பு வர,தான் குடிசையில் படுக்க வைக்கபட்டு இருந்ததை உணர்ந்தாள்.இப்பொழுது நன்றாக சுவாசிக்க முடிந்தது.

அவள் பக்கத்தில் இலைகளை யாரோ எரிய விட்டு தீமூட்டி இருந்தார்கள்.அதில் இருந்து தான் சுவாசிக்க நல்ல காற்று கிடைப்பதை அவள் புரிந்து கொண்டாள்.கொஞ்ச நேரத்தில் யாரோ ஒருவர் நடந்து வரும் சத்தம் கேட்டது.உடனே மதிவதனி எச்சரிக்கையுடன் எழுந்து தன் வில்லை எடுத்து கொண்டாள்.
ஆனால் உள்ளே தள்ளாடி வந்த உருவத்தை பார்த்ததும் வில்லை தளர்த்தினாள்.

வந்தது ஒரு கூன் விழுந்த கிழவி.முகத்தில் வரிவரியாய் கோடுகளாய் சதைகள் தொங்கி கொண்டு இருந்தது.பற்கள் ரெண்டு மட்டுமே இருந்தது.கண்கள் பூ விழுந்து முடிகள் அனைத்தும் வெளுத்து போய் ,கம்பை ஊன்றி கொண்டு நடந்து வந்த கிழவியை பார்க்கவே அகோரமாக இருந்தது.

“விழித்து விட்டாயா?”என்று அந்த கிழவியின் குரலை கேட்கவே கர்ண கொடூரமாக இருந்தது.

பாட்டி நீங்க யாரு?

என் இடத்தில் வந்து விட்டு,என்னையே யார் என்று கேட்கிறாயா?முதலில் நீ யாரு என்று கூறு.

என் பேர் மதிவதனி..!மகேந்திரபுரி நாட்டின் இளவரசி..

சரி இங்கே எங்கே வந்தாய்?

நான் மாயமலை மீது போர் தொடுத்து காத்தவராயனை கொல்லவே இங்கே வந்தேன்.வந்த இடத்தில் பன்றி துரத்தியதால் இந்த காட்டுக்குள் வந்து மாட்டி கொண்டேன்.

ஹா ஹா ஹா என அந்த கிழவி சிரித்தது அந்த காட்டையே அதிர செய்தது.பறவைகள் அந்த சத்தத்தை கேட்டு பயந்து ஓடின.

ஏன் பாட்டி சிரிக்கிறீங்க.?

காத்தவராயனை கொல்ல யாராலும் முடியாது.அவன் மார்பை துளைக்கும் ஆயுதம் பூமியிலே கிடையாது.

இல்லை என் வில்லில் இருந்து புறப்படும் அம்பு அவன் மார்பை கண்டிப்பாக துளைக்கும்.

இங்கே பாருங்கள்,என குடிசைக்கு வெளியே சென்று ஒரு பருத்த மரத்தை குறி வைத்து வில்லில் நாணை பின்னோக்கி இழுத்து அம்பை விட அது அந்த மரத்தையே துளைத்து கொண்டு இன்னொரு மரத்தில் குத்தி நின்றது.

ம்ம்,நீ கெட்டிகாரி தான்.எட்டு பேர் வட்டமாக சேர்ந்து அந்த மரத்தை சுற்றி நின்றால் மட்டுமே அந்த பெரிய மரத்தை அணைக்க முடியும்.அவ்வளவு பருமனான மரத்தையே அசால்ட்டாக நீ துளைத்து விட்டாயே.ஆனால்…

என்ன ஆனால் பாட்டி?

நீ ஒருவளாக சென்று எப்படி காத்தவராயனை வெல்ல முடியும்?

என் படை இந்த மலைக்கு கீழே உள்ளது.அங்கு இப்பொழுது நான் சென்று விட்டால் போதும்.

இங்கே வா,என்று கிழவி அவள் கைபிடித்து குடிசைக்கு பின்னே உள்ளே பாறை அருகே அழைத்து சென்றாள்.கிழவி வயதாகி இருந்தாலும் அவள் பிடி உடும்பு பிடியாக இருந்தது.

“பாறையின் மீது ஏறி பார்”என்று கிழவி கூற

ஏறி பார்த்த பொழுது தூரத்தில் ,அவள் படைகள் இருந்த இடத்தில் வெட்டி சாய்க்கபட்ட உடல்களே இருந்தன..

பாட்டி என அவள் அதிர்ச்சியாக,

1 Comment

  1. Fantastic story

Comments are closed.