காத்தவராயன் யாகத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பொருட்களை எல்லாம் காலால் எட்டி உதைத்து கொண்டே அவனை துரத்தினான்.
அகோரி சிலையின் பின்புறம் ஓட,அவன் காலில் ஏதோ தட்டுபட்டு தடுமாறி கீழே விழுந்தான்.வில்லை மூடி வைக்கப்பட்டு இருந்த துணி அவன் கால் பட்டு விலகியது.
வில்லை பார்த்த காத்தவராயன் கோபம் பன்மடங்கு அதிகமாகியது.
அகோரியும் இந்த வில் எப்படி வந்தது என புரியாமல் விழித்தான்.
வில்லை காட்டி காத்தவராயன்”உன்னோட களவாணித்தனத்திற்கு இன்னும் ஒரு சாட்சி இதோ…இந்த வில்லை தீமூட்டி அழித்து விட்டாய் என்று தானே நீ கூறினாய்..இப்போ எப்படிடா இங்கே வந்தது..!”காத்தவராயன் கோபம் பொங்க கேட்டான்.
இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் இந்த காத்தவராயன் நம்ப போவது இல்லை.இங்கு இருந்து தப்பித்து தான் ஓட வேண்டும் என பக்கத்தில் இருந்த தட்டை எடுத்து காத்தவராயன் முகத்தில் வீசி எறிந்து விட்டு குகை வாயிலை நோக்கி அகோரி ஓடினான்..அப்பொழுது மதிவதனி எதிர்வர அவள் காலில் விழுந்தான்.
“தேவி… அபயம்…! அபயம்..!என்னை காத்தவராயனிடம் இருந்து காப்பாற்றுங்கள்..தங்கள் குழந்தையை நான் பலி கொடுக்க முடியாது என்று சொன்னதால் மன்னர் என்னை கொல்ல வருகிறார்”என அவள் காலில் விழுந்து கதறினான்.
“குழந்தை எங்கே..”மதிவதனி கேட்க
“உள்ளே பலிபீடம் அருகே பத்திரமாக இருக்கு”என அகோரி கூற காத்தவராயன் உறுமி கொண்டு அவனும் வெளியே வந்தான் …
அகோரி மதிவதனி பின்னால் ஒளிந்து கொண்டு இருப்பதை பார்த்த காத்தவராயன் அவளிடம்,”மதி ஒழுங்கா வழியை விடு..இது உனக்கு சம்பந்தமில்லாத விசயம்..!மீறி தடுத்தால் நான் என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது..”
“எது எனக்கு சம்பந்தமில்லாத விசயம்..என் குழந்தையை என் அனுமதி இல்லாமல் எடுத்து வந்து நீ பலி கொடுப்பாய்..அதை பார்த்து நான் சும்மா இருப்பதா..!இன்று நான் உனக்கு முடிவுரை எழுதவே வந்து உள்ளேன்.”என மதிவதனி சொல்ல,
அதை கேட்டு காத்தவராயன் கடகடவென அந்த குகையே அதிரும்படி சிரித்தான்..அவன் போட்ட சத்தத்தை கேட்டு குகையில் இருந்த ஆந்தைகளும்,வெளவால்களும் அலறின.
“என்னை கொல்லும் ஆயுதம் இவ்வுலகில் இல்லவே இல்லை மதி..!.நான் மரணம் அற்றவன்..எனக்கு முந்தி விரித்ததால் உன்னை உயிரோடு விடுகிறேன்.ஒழுங்கா வழியை விடு..இல்லையெனில் எனக்கு சொர்க்கத்தை காட்டியவளாக இருந்தாலும் உன்னை கொல்லவும் தயங்க மாட்டேன்.”
காத்தவராயன் முன்னே அடி எடுத்து வைக்க மதிவதனி அவனை அம்பு விட்டு தடுத்தாள்.
இருவருக்குமே துவந்த யுத்தம் ஆரம்பமானது.அதை பார்த்த அகோரி ஆனந்தமாக பக்கத்தில் இருந்த உயரமான பாறையில் அமர்ந்து கொண்டு இருவரின் சண்டையை ரசித்தான்.
மதிவதனி விட்ட அம்புகள் யாவும் கடுகளவு கூட காத்தவராயனை பாதிக்கவில்லை.லேசான காயங்களை மட்டுமே உண்டு பண்ணியது.காத்தவராயன் ஒரு பெரிய பாறையை எடுத்து அவள் மேல் போட,மதிவதனி அதை சுக்குநூறாக உடைத்தாலும் பாறையின் ஒரு துண்டு அவள் வைத்து இருந்த வில்லில் மோதி வில்லை இரண்டாக உடைத்தது.
காத்தவராயன் அதை பார்த்து சிரித்து கொண்டே வாளால் அவளை வெட்ட வந்தான்.மதிவதனி தன் வாளை கொண்டு அதை தடுத்து அவனிடம் தீரத்துடன் போர் செய்தாலும் அவன் வலிமைக்கு ஈடு கொடுக்கவே முடியவே இல்லை..அவன் முழு பலத்தையும்,ஆக்ரோஷத்தையும் காட்டி அவள் வாளை தட்டிய உடன் அது கீழே விழுந்தது.வெறியில் இருந்த காத்தவராயன் மதிவதனியின் வயிற்றில் எட்டி உதைக்க அவள் குகைக்குள் பறந்து வயிற்றை அழுந்த பிடித்து கொண்டு பாறையின் மீது மோதி மயங்கி கீழே விழுந்தாள்..
அவ்வளவு தான் அகோரி இதை பார்த்த உடன் மீண்டும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தான்..உடனே காத்தவராயனும் மதிவதனியை விட்டு விட்டு அகோரியை துரத்தினான்.
அன்று மதிவதனியால் காப்பாற்றப்பட்ட மாயமலை பெண்கள்,காத்தவராயன் சென்ற உடன் மறைவில் இருந்து வெளிப்பட்டனர்.
அவர்கள் கொண்டு வந்த நீரை கொண்டு மதிவதனி முகத்தில் தெளித்து எழுப்பினர்..
மதிவதனி விழித்து,காத்தவராயன் எங்கே என கேட்க,”மன்னர் அந்த அகோரியை துரத்தி கொண்டு போய் இருக்கார் அரசி…”
“நான் உடனே சென்று அந்த அகோரியை காப்பாற்ற வேண்டும்..”மதிவதனி வயிற்றை பிடித்து கொண்டு எந்திரிக்க,
அந்த பெண்கள் “அமருங்கள் அரசி,நீங்கள் அந்த அகோரியை சென்று காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை.அவனும் காத்தவராயனின் கூட்டாளி தான்.தங்களுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும்,அதை பலி கொடுத்தால் மிகப்பெரிய சக்திகள் கிடைக்கும் என அந்த அகோரி தான் சொன்னான்.அதை கேட்டு தான் மன்னர் தங்கள் குழந்தையை பலி கொடுக்க தீர்மானித்து இருந்தார்.ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை.அதனால் தான் அவனை கொல்ல மன்னர் சென்று உள்ளார்.இந்த பிரச்சினைக்கு மூல காரணம் அந்த அகோரி தான்.ஒழியட்டும்…விடுங்கள் ராணி..”
“என் குழந்தை எங்கே…!”என மதிவதனி கேட்க,அவர்கள் மௌனம் ஆனார்கள்…
“என்ன ஆச்சு…! எங்கே என் குழந்தை…!”மீண்டும் மதிவதனி கேட்க,
கூட்டத்தில் ஒருத்தி சென்று குழந்தையை எடுத்து வந்து கொடுத்து,”மன்னிக்கவும் மகாராணி,அகோரியை துரத்தி கொண்டு செல்லும் பொழுது மன்னர் யாகத்தின் பொருள்களை காலால் கலைத்தார்,அப்பொழுது குழந்தையின் கழுத்தில் அவர் காலை வைக்க,குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது..”
மதிவதனியின் கண்களில் கண்ணீர் பெருகியது.. பழிவாங்க வெறி கொண்டு எழுந்தாள்..அவள் கையில் எந்த ஆயுதமும் இல்லை..
உடனே மாயமலையின் பெண்கள்,அவளை சிலையின் பின்புறம் அழைத்து சென்றனர்.அங்கு இருந்த அவள் தெய்வீக வில்லை காட்ட,”இது எப்படி இங்கே வந்தது..”என மதிவதனி கேட்க,

நான் எழுதும் கதைகளை உங்களுக்கு எப்படி அனுப்புவது?