“இல்லை இந்த வில் எனக்கு வேண்டாம் பெண்களே..!அகோரியாக இருந்தாலும் அவன் என் குருவின் வடிவில் வந்து யாசகம் பெற்று சென்று உள்ளான்.எனவே இந்த வில் என் குருவுக்கு கொடுத்தது போல தான்.நான் இந்த வில்லை உபயோகிக்க முடியாது.”
அங்கே நின்று இருந்த பெண்களில் ஒருத்தி இதை கேட்டு கலகலவென சிரித்தாள்…
அவள் சிரிப்பை பார்த்து”ஏன் சிரிக்கிறாய்…பெண்ணே..!”என மதிவதனி கேட்க,
“பின்ன..சிரிக்கமால் என்ன செய்வது தேவி..!இதே அகோரி உங்கள் குருநாதர் வடிவில் வந்து உங்களுடன் உடலுறவு கொள்ள ஆசைப்பட்டு இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்…”என கேட்க,
அவள் பேச்சை கேட்டு மதிவதனி குழம்பி நின்றாள்..
அந்த பெண் மீண்டும் மதிவதனியை பார்த்து,”நியாயமானவராக இருக்கலாம்,ஆனால் ஒரேயடியாக நியாயமானவராக இருந்தால் இவ்வுலகில் எந்த நல்லதையும் செய்ய முடியாது..ராமன் கூட தேவைப்படும் பொழுது வாலியை மறைந்து இருந்து தான் கொன்றார்.கண்ணன் மட்டும் நேர்வழியில் நடந்து இருந்தால் பாண்டவர்கள் ,கௌரவர்களை வென்று இருக்கவே முடியாது..அர்ஜூனன்,சிகண்டி என ரெண்டு பேரை தன் ரதத்தில் தோன்ற செய்து தான் பீஷ்மரை வீழ்த்த செய்தான் கண்ணன்.ஒரே ரதத்தில் ரெண்டு பேரை தோன்ற செய்வது தவறல்லவா..மேலும் பீஷ்மர் பெண்களுக்கு எதிராக போர் செய்ய மாட்டார் என தெரிந்து அர்ஜூனன் பக்கத்தில் சிகண்டி என்ற அலியை ஏன் உடன் வர செய்தார்?
மதிவதனி அவள் சொல்வதை உற்று கேட்க,
அந்த பெண் மேலும் தொடர்ந்தாள்,”இறுதியில் தருமம் வெல்ல வேண்டும் என தான் கண்ணன் இந்த செய்கையை செய்தார்.ஏன்..!உங்கள் குரு அஸ்வத்தாமன் தந்தையை எப்படி துருபதன் கொன்றான்..?துரோணர் போர் புரியும் பொழுது அவரை யாராலும் வீழ்த்த முடியாது.அதற்கும் கண்ணன் ஒரு வழி வைத்து இருந்தார்..அஸ்வத்தாமன் என்ற யானையை பீமனை விட்டு கொல்லவிட்டு அஸ்வத்தாமனை கொன்று விட்டோம் என்று பாண்டவ படை வீரர்களை கண்ணன் முழங்க செய்தார்.விளைவு இதனால் துரோணர் மனமுடைந்து தருமரிடம் உண்மை என்னவென்று கேட்க,தருமரோ கொல்லப்பட்டது அஸ்வத்தாமன் தான் ஆனால் அஸ்வத்தாமன் என்ற யானை சொல்ல வரும் பொழுது கண்ணன் ஏன் சங்கை முழங்க வேண்டும்.?ஏனெனில் தருமர் சொன்ன முழு வாக்கியம் துரோணர் கேட்ககூடாது என்பதற்காக தான்..கடைசியில் துரோணர் மனமுடைந்து நிராயுதபாணியாக நின்ற பொழுது துருபதன் கொன்றான்..இதே போல கர்ணனின் தேர் சக்கரத்தை இடற செய்து கண்ணன் சதி செய்து கொன்றார்.கதாயுதம் கொண்டு போர் செய்யும் பொழுது தொடைக்கு கீழே அடிக்க கூடாது என்பது விதி.
துரியோதனுக்கு அவன் அம்மா மூலம் கவசம் அணிவிக்கப்பட்டு இருந்ததால் அவனை கொல்ல பீமனால் முடியவில்லை.துரியோதனனுக்கு சொல்ல போனால் உடல் முழுக்க கவசம் கிடைத்து இருக்கும்..ஆனால் கண்ணன் அவனுக்கு அதை கிடைக்கவிடாமல் சூழ்ச்சி செய்து,கடைசியில் அவனை தொடைக்கு கீழ் பீமனை வைத்து அடிக்க செய்து போர் விதியை மீறி தானே கொன்றார்.ஒரு கடவுளே தருமம் வெற்றி பெற இத்தனை சூழ்ச்சி செய்யும் பொழுது தாங்கள் எம்மாத்திரம் தேவி..!என்று அவள் கூறி முடிக்க,
அதை கேட்டு மதிவதனி அயர்ந்தாள்.
“இப்போ நீ சொல்ல வருவது..?என்ன தான் அறிவு நிறைந்த பெண்ணே..!”
“நான் சொல்ல வருவது இது தான் தேவி,கெட்ட வழியில் செல்பவரை என்றுமே நேர்வழியில் மட்டுமே வெற்றி கொள்ள முடியாது.சில சமயம் அவர்கள் வழியிலேயே சென்று தான் வெற்றி கொள்ள வேண்டும்.அதை தான் நமக்கு கண்ணனே வழிகாட்டி உள்ளார்.”
மதிவதனி உடனே அவள் காலில் விழுந்தாள்..
“தேவி என்ன இது..!எழுந்திருங்கள்..”
மதிவதனி எழுந்து அந்த பெண்ணிடம்”ஆதிசங்கரர் காசியில் ஒரு தெருவில் செல்லும் பொழுது ஒரு பிச்சைக்காரனை கண்டு ஒதுங்கி சென்றாராம்..அதை கண்ட பிச்சைக்காரன்,உன்னில் உள்ள பிரம்மம் தானே என்னில் உள்ளது..என்னை அவமானப்படுத்துவது நீ வணங்கும் அந்த பிரம்மத்தை அவமானபடுத்துவதை போல் அல்லவா…என்று கூறினார்..இந்த மேலான உபதேசத்தை கேட்ட உடன் அந்த பிச்சைக்காரன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் ஆதிசங்கரர்.அதுபோல தான் பெண்ணே,என்னுள் இருந்த குழப்பத்தை நீ தான் போக்கி உள்ளாய்.நீயும் என்னோட குரு தான் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்” என மதிவதனி வேண்டினாள்..
அந்த பெண்ணும் ஆசீர்வதிக்க,மதிவதனி எழுந்து தன் தெய்வீக வில்லை எடுத்து நாணேற்றி இழுத்து விசை எழுப்ப,அந்த ஒலி காடு முழுவதும் எதிரொலித்தது..
சரியாக அந்த நேரம்,காத்தவராயன் அகோரியை விரட்டி பிடித்து இருந்தான்..அவனை முட்டி போட வைத்து,அவன் கழுத்தில் காலை போட்டு காத்தவராயன் மடக்கி நெரித்து கொண்டு இருக்க,அவனுக்கு அந்த வில்லின் சத்தம் கேட்டது..
“இது மதிவதனியின் வில்லின் சத்தம் அல்லவா…!”என அவன் திகைக்க,அகோரி சிரித்தான்..
அகோரி அவனை பார்த்து,”எனக்கு எமன் என் கண்முன்னே வருவது தெரிந்து விட்டது காத்தவராயா.அடுத்து எமன் உன்னையும் கொல்ல வருகிறான்”என சிரித்தான்.
காத்தவராயன் அவனிடம்,”உன்னை எமலோகம் அனுப்பிவிட்டு,அவளையும் உனக்கு துணையாக பின்னே அனுப்பி வைக்கிறேன்”என காத்தவராயன் அவன் தலையை பிடுங்கி இரு கைகளால் பிடுங்கி எறிந்தான்..
இரத்தம் குபுகுபுவென காத்தவராயன் முகத்தில் பாய்ந்தது..
இரத்தம் தோய்ந்த முகத்தோடு காத்தவராயன்,மதிவதனியை எதிர்கொள்ள சென்றான்..தன் குழந்தையை கொன்றவனை பழிவாங்க மதிவதனியும் குகையை விட்டு வெளியே வந்தாள்..
இருவரும் மீண்டும் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்…
இருவருக்கும் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியது..
இம்முறை மதிவதனி விட்ட அம்புகள் காத்தவராயன் உடம்பை பதம் பார்த்தன..ஆனால் அவன் மார்பை மட்டும் துளைக்கவில்லை.
மதிவதனிக்கு அவனை கொல்ல மட்டும் வழி கிடைக்கவில்லை..அவன் உடம்பு முழுக்க ரத்தம் வழிய மயங்கி விழுந்தான்..ஆனால் சிறிது நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த தேனீக்கள் அவன் உடலில் பட்ட காயங்களுக்கு ஏதோ ஒரு மருந்தை இட்டன.அதை இட்டவுடன் அவன் காயங்கள் குணமாகி உடனே எழுந்து புத்துணர்ச்சி பெற்று மீண்டும் அவள் மீது கடுமையாக போர் செய்தான்.அங்கிருந்த பாறைகளை பெயர்த்து எடுத்து அவள் மீது எறிந்தான்..

நான் எழுதும் கதைகளை உங்களுக்கு எப்படி அனுப்புவது?